கடைசியா போட்டு பார்த்தது

பழைய கண்ணாடிகள்

மத்தவங்க கண்ணாடி

If you have problems in viewing this page try this, in the menu bar goto View>encoding>select Unicode(UTF-8)

5 புள்ளி சிலரும், கால் செண்டரில் ஒரு இரவும்.

சேத்தன் பகத்'ன்னு ஒருத்தர். இந்தியவோட மிக பெரிய கல்வி நிறுவனங்களில் படிச்சிட்டு இப்போ புஸ்தகம் எழுதிட்டு இருக்காரு.என்னவிட நிறைய படிக்கிறவங்க இங்கே இருக்கீங்க, கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்.

இவரோட முதல் புத்தகம் Five point some one இந்திய அளவில ஒரு Best Seller. 3 பசங்க, ஐஐடில சேற்ராங்க. அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்தவுங்கள கொஞ்சம் ஈளைப்பாற விடாம புழிஞ்சு எடுக்குது ஐஐடி. அப்பிடி இப்பிடி பாத்து முடியாம போறது இவங்களுக்கு...அப்புறம் என்ன? Freak out. அதுல வர பிரச்சனை இதுல குற்ற உணர்வு வேற. இப்படி சாதரண 5 புள்ளி கொசுறு CGPA (% மாதிரி) வச்சிருக்க 3 பசங்களோட கதைய சிரிக்க சிரிக்க சொல்லியிருப்பாரு. எனக்கு ரொம்ப பிடித்து போக என் நன்பர்களையெல்லாம் படிக்க சொன்னேன். (Rupa publications, Rs.95)


இவரோட அடுத்த புத்தகம் 'One night at the call center' வந்திருக்குன்னு தெரிஞ்சவுடனே, இந்தியால இருந்த்து வரவழைத்து படிச்சேன். ஒரு கால் செண்டரில் வேலை பார்க்கும் 5 (7ன்னும் சொல்லலாம்) சுத்தி வருது கதை. ஒவ்வோருத்தருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை. ஒரு இரவில் அவங்க வாழ்க்கை சுத்தம்மா மாறுது. அந்த் இரவில் அப்படி என்னதான் ஆச்சு? கடவுள் ஒரு கால் (Call) செய்தார்!!
என்னமோ முதல் புக்கே ரோம்ப நல்லா இருந்தா மாதிரி தோனுது.
படிக்கும் போதே, ஒரே கதையில யதார்தமாகவும், நம்பவே முடியாத படியும் ஏன் எழுதினாருன்னு யோசித்தேன்...அதுக்கு அவரே கடைசில பதில் சொன்னாரு. ஆனா அந்த பதிலும் அந்த அளவுக்கு ஒத்துக்க முடியல.


அந்த யதார்தமான பகுதிக்காக அவர பாராட்டத்தான் வேண்டும். கால் செண்டரும், தகவல் தோழில்நுட்ப நிறுவனங்களும் இன்றைய இந்திய நகரங்களில் ஒர் பெரிய கலாச்சார மாற்றத்தை கொண்டு வந்துள்ளன. அதில் பணி புரிபவர்களின் வாழ்க்கை அதில் உள்ள சிக்கல்கள் எல்லாம் இன்னும் எழுத்த படாத ஒன்று. தமிழ்ல ஏதாவது இருக்கா? இந்த சினிமாகாரர்களின் வாழ்கைய பத்தி நிறைய எழுத பட்டிருக்கு...மேல சொன்னவுங்க வாழ்க்கையும் கிட்டதட்ட அப்பிடி தான். என்ன சினிமா அளவுக்கு இதுல புகழ் வெளிச்சம் கம்மி, மத்தபடி இதுவும் சரிகை பேப்பர் வாழ்க்கை.

பாத்தீங்களா எங்கேயோ பொயிட்டேன்...புத்தகத்தை பத்தில சொல்லிட்டிருந்தேன்....
அவசரப்படாத இந்திய ஆங்கிலம், 300 பக்கத்துக்கு கொஞ்சம் கம்மி. 3 மனி நேரத்தில படிச்சிடலாம். 100 ருபாய் விலை. இன்றைய இளைஞர்கள் தங்களோட அடையாளம் காணக்கூடிய களம் இதெல்லாம் "+"திடிர் திடிரென மாறும் கதா பாத்திரங்கள், நம்பமுடியாத முடிவுகள் இதெல்லாம் "-".
ஆனாலும் 20-30 வயசுக்காரர்களின் பெரும் தயவால் இந்த புத்தகமும் ஒரு Best Seller ஆகிடும்னு தோனுது. பார்ப்போம்.

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 3 (show/hide)

3 Comments:

Anonymous Anonymous said...

முதல் புத்தகம் 5 பாயிண்ட் சம்திங் நானும் படிச்சிருக்கேன். அது நல்லா இருக்கும். இந்தப் புத்தகமும் நல்லாப் போகுதுன்னு கேள்விப் பட்டேன். வாங்கிப் படிக்க வேண்டியதுதான்.

1/19/2006 10:31 PM  
Anonymous Anonymous said...

படிச்சிட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க. நன்றி.

By: nandhan

1/26/2006 5:26 PM  
Anonymous Anonymous said...

ரெண்டாவது புத்தகமும் படிச்சாச்சு. தேவலாம் வகை. ரொம்ப லேசா படிச்சிரலாம்.

கடவுள் வரவே மாட்டாருங்குறதுதான் யதார்த்தமுன்னு என்னால ஒத்துக்க முடியாது. அதுனால அதுவரைக்கும் அந்த புத்தகம் நல்லாவே இருக்கும்.

இரண்டு விஷயங்கள் -வ்வும் உண்டு.

1. கடைசியில் நடக்கும் சினிமாத்தனமான முடிவு.

2. கால்செண்டர் பணியைக் கொஞ்சம் மட்டம் எனத் தொனிக்கும் வகையில் எழுதியிருப்பது.

மற்றபடி புத்தகம் நல்லாயிருக்கு.

By: கோ.இராகவன்

1/30/2006 10:45 PM  

Post a Comment

<< Home

மூக்குக்கண்ணாடி

இந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம் தாத்தவோட சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு

கண்ணாடிக்கு பின்னாடி

பிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...
சாப்ட்வேர்- தொழில். சினிமா, புத்தகம்,எழுத்து - ஆர்வம்
இன்னும் தெரியனுமா?