கடைசியா போட்டு பார்த்தது

பழைய கண்ணாடிகள்

மத்தவங்க கண்ணாடி

If you have problems in viewing this page try this, in the menu bar goto View>encoding>select Unicode(UTF-8)

Shrek: கனவே கலைகிறதே

யார் செய்தார்களோ தெரியவில்லை, ஆனால் அருமையாய் செய்திருக்கிறார்கள்.
சரியான சீன்களை வெட்டி, அழகான மாண்டேஜ் எடிட்டிங்.
பாடலும் நன்றாய் தான் இருக்கு, குரல் தான் அங்கங்கே மக்கர் செய்கிறது...
நம்ம யுவன் இசையமைத்தால் இப்படி தான் இருந்திருக்கும். வரிகள் கூட சிம்பிளாய்...சமிபத்திய யுவன் பாடல்களை போல.

தெரிஞ்சவுங்க யாரச்சும் சொல்லுங்க...என்ன பாட்டு இது?

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 11 (show/hide)

11 Comments:

Blogger வசந்தன்(Vasanthan) said...

பாடல் தொகுப்பு அருமையாக இருக்கிறது. தமிழ்ச்சினிமா பார்த்தது போலவே இருக்கிறது.

4/29/2006 5:51 PM  
Blogger jeevagv said...

ரொம்ப நல்லா இருக்கு, யாரிதை செஞ்சதுன்னு தெரியலையே..ஒருவேளை shrek தமிழில் எடுத்திருக்காங்களோ?

4/29/2006 6:04 PM  
Blogger நந்தன் | Nandhan said...

வசந்தன்,
பல தமிழ்(ச்?)சினிமா பாடல்களை விட நல்லாவே இருக்கு. அதுவும் கண்ணாடி உடைந்த பிம்பங்கள் இங்கேயும் அங்கேயும் மாறி வருவது, நெருப்பில் இங்கெ முடியும் ஷாட் அங்கெ நெருப்பிலே தொடங்குவதென, முழு ப்ரெபஷ்னல் டச்.
எனக்கென்னமோ பாடல் புலம் பெயர்ந்த ஈழத்தவரின் ஆல்பம் போல இருக்கிறது...

4/29/2006 6:15 PM  
Blogger நந்தன் | Nandhan said...

ஜீவா,

அதையும் தான் தேடி பார்த்தேனே, அப்படி ஒரு தகவலும் இல்லை. படத்தின் ஆங்கில மூலத்தில் அப்படி ஒரு பாடலே இல்லை.

சொல்லப்போனால், இந்த அனிமேஷன் பட கம்பெனிகள் தமிழிலும் படத்தை டப் செய்து வெளியிடலாம்...அதற்காக ஆகும் செலவை பார்க்கும் போது வரும் வருமானம் (potential market) மிகப் பெரியதே!

வருகைக்கு நன்றி.

4/29/2006 6:18 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

தமிழ்"ச்"சினிமாவே தான். அதிலென்ன குழப்பம்?

4/29/2006 6:24 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

எனக்கென்னவோ "அழகாய் இருக்கிறாய், பயமாயிருக்கிறது" படக்குழுவின் வேலையோ என்றும் தோன்றுகிறது. ஏனென்றால் அந்தப்படத்திலும் நிறைய அனிமேஷன் காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன.

4/29/2006 6:26 PM  
Blogger நந்தன் | Nandhan said...

ஆகா! என் 12 மனி நேர சந்தேகத்தை தீர்த்த ஜீவ புலவரே! பிடியுங்கள் நன்றியை.

இது கிடைத்த பின், YouTubeல் ஆரய்ந்த போது, நிறையவே ஈழத்தவரின் ஆல்பங்கள் கேட்டேன்...பல இது போன்றே இருந்த்து.

ஆனாலும் நம்ம யுவன் பற்றிய சந்தேகம் இருந்த்து!

4/29/2006 6:29 PM  
Blogger நந்தன் | Nandhan said...

வசந்தன்,

எனக்கு இந்த ஒற்று மிகுதி, ன/ண எப்போழுதுமே தகராறு. எப்படி சரி செய்வது என ஏதேனும் சுட்டி இருந்தால் மின்னஞ்சல் செய்யுங்களேன்.

உங்கள் சந்தேகம் ஜீவாவின் பின்னூட்டத்திற்கு பிறாகா?

4/29/2006 6:34 PM  
Anonymous Anonymous said...

நன்றாயுள்ளது.

4/29/2006 7:23 PM  
Blogger துளசி கோபால் said...

அட்டகாசம். போங்க. அருமை

4/29/2006 11:10 PM  
Blogger Radha N said...

மிகவும் நேர்த்தியாகத் தொழில்நுட்பத்துடன், குறைபாடே காணமுடியா வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது, இந்த ஆல்பம். நீங்கள் சொன்னபடி, நிச்சயம் இந்ததுறையின் சினிமா ஆளுமை மிக அதிகமாக வாய்ப்பிருக்கிறது. சந்தைப்படுத்தி இறங்கினால் நிச்சயம் அள்ளலாம்.

4/29/2006 11:43 PM  

Post a Comment

<< Home

கோபம்: மௌனமும் வார்த்தைகளும்

சட்டென வந்து விழுந்து விடுகின்றன வார்த்தைகள், விழுந்தவை அவையாயினும் உடைவது இதயங்கள்தாம்.சலசலப்பு அடங்கிய சிறிது நேரத்தில் தான் இது புரிகிறது. 'நானுமா இப்படி?', என வெட்கத்தில் எங்கேயோ ஓடி என்னுள்ளே ஒளிந்து கொள்கிறேன். சில சமயம் என்மீதான அருவெருப்பே இயலாமை தீயாய் இன்னும் கோபத்தை தூண்டிவிடுகிறது. சொல்லால் கொல்லும்
மிருகமாய் எனை பார்க்க எனக்கே பயமாய் தான் இருக்கிறது. தலையனைக்குள் முகம் பொத்தும் சிறுவன் போல, கண்மூடிய இருட்டுக்கு
வெளியே வெளிச்சம் இருப்பது உணர்ந்தும், கண்திறக்க மறுக்கிறேன்.

சத்தமாய் விழும் வார்த்தையின் போதையில் 'எல்லா உண்மையும் நான் சொல்லவது மட்டுமே!' என்ற மாயத்தோற்றம் வேறு வந்தாட்கொள்கிறது. சுவறில் பெரிதாய் விழும் நிழலே நான் என்பது போன்ற காட்சி மயக்கம். பெரியதாய் ஆஜானுபாகுவாய் தெரிந்தாலும் நிழலின் நிறம் கருப்புதானே, இது ஏனோ அப்போழுது புரிவதில்லை.

சினத்தால் கட்டிய ஒரு வெற்று தேரில், வார்த்தை சக்கரம் பூட்டி வேகமாய் ஓட்டுகிறேன். எதிர் வரும் அனைவரையும், அனைத்தையும் ஏறி மிதித்துக்கொண்டு பயனம். அதுவும் மௌனத்தை எதிரே கண்டால், இன்னமும் கூடுகிறது வேகம். சினம் காணாமல் போகும் போது, கூடவே காணாமல் போகிறது வார்த்தை சக்கரங்களும். இயலாமையை உணரும் போது தடுமாறி மனம் சரிகிறது. மன்னிப்பு கேட்க யத்தனிக்கையில், இட்டு நிரப்ப மௌனத்தை தவிர ஒன்றுமிருப்பதில்லை அப்போது. அதுக்கூட ஏனோ ஒரு நொண்டிக்கு கிடைத்த ஊன்றுகோல் போல, தத்தி தத்தியே நடக்கயிலுகிறது. இத்தனை நேரம் உடன் இருந்த வார்த்தைகள் எங்கே போயின?

இப்படி போன்ற சமயங்களில் தான் உண்மையான உறவுகளின் வித்தியாசம் புலனாகிறது. புரிதலுக்கு புறத்தே நிற்கும் உறவுகளோ, அந்த மௌன ஊன்றுகோலையும் பிடுங்கி எறிந்து விட்டு போய்விடுகின்றன. உண்மையான புரிதலை கொண்டிருக்கும் உறவுகள், இந்த வார்த்தையற்ற வேளையில், தம் வார்த்தைகளால் அரவனைக்கும். 'பரவாயில்லை, எல்லாரும் செய்வது தானே இது. தவறொன்றுமில்லை' என மயிலிறகாய் மனதை வருடி செல்லும் சொற்கள். வார்த்தைகளும் மௌனங்களும் இடம் மாறி போகின்றன், எத்தனை வித்தியாசம்!

மௌனமும், வார்த்தையும் இப்படி சரியாய் கலந்திருத்தல் தான் வாழ்கையோ? சொற்களுக்கிடையே வெற்றிடம் இருந்தால் தானே வாக்கியத்தை படிக்கயிலுகிறது!

ஓய்ந்திருக்கும் ஒரு பொழுதில் அசைப்போடும் போது, சிறிதாய் புன்னகை உதிர்கிறது -'நானும் இப்படித்தான்!' என்ற எண்ணம். ரணம் ஆறிய
வடுக்களை தடவிப் பார்ப்பதும் ஒரு சுகமே!

பி.கு: மௌனத்தின் ஊடாக வார்த்தைகள் என்று செல்வா எழுதியதை படித்தபின், மனதில் தோன்றியவை தான் இப்பதிவு.

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 13 (show/hide)

13 Comments:

Blogger நன்மனம் said...

நந்தகுமார், நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியின் முடிவில் மெளனமாக இருந்திருக்கலாமோ என்று எண்ணிய வேளையில் உங்கள் பதிவு அப்படியே என் எண்ண பதிவுகளை படம் பிடித்து காட்டுவது போல் அமைந்துள்ளது.

இதுவும் ஒரு சுகமான சுமை தானோ.

ஸ்ரீதர்

4/28/2006 12:32 AM  
Blogger நந்தன் | Nandhan said...

நன்றி ஸ்ரீதர்.
பல சமயம் தவறுகளை திருத்த முயற்சித்தாலும் வெற்றி பெற முடிவதில்லை. தவறுகளும் நம்மில் ஒரு பகுதி என்பதை புரிந்து கொள்ளும் பக்குவும் வரும்போது அவை சுமைகளாய் தெரிவதில்லை. அப்படி நம்மை புரிந்தவர்கள் இருக்கையில் வாழ்கையும் இலகுவாகிறது.

4/28/2006 12:39 AM  
Blogger நந்தன் | Nandhan said...

sittukuruvikku நன்றி. தமிழ் அருமையெல்லாம் ரொம்ப அதிகம்...ஒருவேளை கரு மனசுக்கு பக்கதில இருக்கறதால அப்படி தோனிச்சோ?

4/28/2006 1:01 AM  
Anonymous Anonymous said...

when hearts are near words will never matter!!!thanks a lot!!

4/28/2006 1:07 AM  
Blogger Miguel Angel Garcia Ojeda said...

hola, saludos desde Chile

4/28/2006 1:09 AM  
Blogger நந்தன் | Nandhan said...

MIGUEL,
Saludos. ¿Puede usted leer esto?

4/28/2006 1:17 AM  
Blogger துளசி கோபால் said...

ச்சும்மாவாச் சொல்லி இருக்காங்க, 'எத்தாலே கெட்டே? 'ன்னா 'நோராலே கெட்டேன்'ன்னு.

நோரு= வாய்( தெலுங்கு)

4/28/2006 1:26 AM  
Blogger Pot"tea" kadai said...

நன்று!
impulsive decision/reaction ஐ பல நேரங்களில் தவிர்க்க இயலாது. அப்படி தடுத்தாளும் திறன் இருக்கும் பட்சத்தில் அனைவரின் மனதையும் வெல்லலாம் அன்பினால்...
அக அன்பின் வழி வளர்ந்த உறவுகளே அரவணைக்கும் என்பதும் உண்மை!

4/28/2006 2:11 AM  
Blogger நந்தன் | Nandhan said...

துளசி அக்கா, மலையாளம் மட்டும் தான்னு நினைச்சேன். சுந்தர தெலுங்குமா?
ஹும், நீங்க சொல்றதும் சரிதான். பல விஷயங்களாலில் பேசாமல் இருப்பதும் நல்லதே.
வருகைக்கு நன்றி.

4/28/2006 5:11 AM  
Blogger நந்தன் | Nandhan said...

Pot"tea" kadai,

Impulsive decisions மட்டுமில்லை எல்லாவகையான கொபங்களையும் தான் சொல்றேன். பிரோயஜனமில்லாத விஷயங்களுக்கு கூட சிலர் (நான் உட்பட) கோவபடுகிறோம். ஒவ்வொரு தடவையும் அதை மாற்ற முயற்சிக்கிறேன் :(
ஏதோ, அன்பின் உறவுகள் உடனிருப்பதால் இன்னமும் ஓடுகிறது வாழ்க்கை. அவர்களுக்கே இது.

4/28/2006 5:17 AM  
Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

நந்தன், உங்களின் இந்தப் பதிவிற்குத் தூண்டுதலாய் இருக்க முடிந்ததில் மகிழ்ச்சி. காரணம், கருத்தும் சரி, நடையும் சரி, மிகவும் அருமையாக இருக்கிறது.

நிச்சயமாய் உணர்ச்சிகளின் கட்டுக்குள் ஆட்படாமல் அவற்றை நமது கட்டுக்குள் வைத்திருப்பதுவே நன்மை பயக்கும். அன்புடையோரைப் புண்படுத்தாதிருக்கும். நின்று நிதானமாய் யோசிப்பதில் பயனி்ருக்கிறது. இத்தகு பதிவை எழுதிய நீங்கள் அதில் குறிப்பிட்டிருக்கும்படி நடந்திருக்கிறேன் என்றால் நம்பச் சிரமமாகவே இருக்கும்.

4/28/2006 11:13 AM  
Blogger நந்தன் | Nandhan said...

நன்றி செல்வா.
ஹூம், தவறுகளை உணர முயற்சிக்கிறேன். முதல் படியில் தான் உள்ளேன். திருந்தியவனாக மாற நிறைய தூரம் போக வேண்டியுள்ளது.
என்னைப் போலவே பலர் என்ற எண்ணம் எழுகிறது. எப்படி உங்களுடைய பதிவு எனக்குள்ளே ஒரு எண்ண ஓட்டத்தை உருவாக்கியதோ அப்படி இதுவும் ஒரு சிலர்க்கு உருவாக்கட்டும் என எழுதினேன்.
மீண்டும் வாருங்கள். வாழ்க்கையின் புரிதலை பகிர்வோம்

4/28/2006 2:11 PM  
Blogger துளசி கோபால் said...

தெலுங்குதாங்க 'தாய்'மொழி.

அதான் தமிழ் கொஞ்சம் தகராறுன்னு சொன்னேன்.

4/28/2006 6:17 PM  

Post a Comment

<< Home

இட ஒதுக்கீடு சில யோசனைகள் - மறுபதிவு.

***Template மாற்றும் போது, fontsம் மாறியதால் இது வெறும் junkஆக தெரிகிறது என நன்பர்கள் கூறினார்கள். ஆதனால் மறுபடியும் fonts மாற்றி வலையேற்றுகிறேன்.***
IIT, IIM , இந்திய அரசின் புதிய இட ஒதுக்கீடு திட்டங்கள் காரசாராமாய் விவாதிக்கப்படும் இவ்வேளையில் என் மனதிற்கு பட்ட சில விஷயங்களை சொல்லவே இந்த பதிவு
தா.சாதி = தாழ்ந்ததாக கூறப்படும் சாதி
மே.சாதி = மேலானதாக கூறப்படும் சாதி


ஏன்?
ஆண்டாடு காலாமாய் கட்டம் கட்டி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்கள் மற்றவர்களுடன் சரி சமமாய் - 'திறமை' போட்டியில் மோத வேண்டும் என்றால் அவர்களுக்கு சில குடுதல் கவணிப்பு கொடுத்தாக வேண்டும். சீக்காளி பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்துவது போல. இது யாரும் மறுக்க முடியாத தேவை. என்ன செய்வது, இந்தியாவில் இந்த நிலை சாதிய பாகுபாட்டால் எற்பட்டதாயிற்றே. இதை சரி செய்யும் வேளையில் திறமை உள்ள மே.சாதியினர் வாய்ப்பு மறுக்கபடலாம் (படுவார்கள்). தாத்தா கொள்ளு தாத்தா காலதில் நடந்த தவறுகளுக்கெல்லாம் தாம் தண்டிக்கபடுவதாய் உணர்வார்கள். தனிப்பட்ட முறையில் மிகவும் காயப்படுத்தகூடிய ஒரு நிகழ்வு. ஆனால் சமுதாய அளவில் இதை தவிர வேறு வழியில்லை என்பதை உணரவேண்டும். 50-60 வருடங்களாய் மே.சாதியினர் அனுபவித்து வரும் இந்த வாய்ப்பு மறுத்தல் பல நூற்றாண்டுகளை தா.சாதியினர் அனுபவித்து வந்ததற்கு முன் ஒன்றுமில்லை என அறிய வேண்டும்.

இட ஒதுக்கீட்டு என்ன செய்தது?

இன்று ஒரளவிற்க்கு தா.சாதியினர் படித்தவர்களாகவும், பெரிய பதவிகள் வகிப்பவராகவும் இருப்பதற்கு காரணம் இட ஒதுக்கீட்டே என்றால் அது மிகையல்ல. ஆயினும் 60 வருட ஒதுக்கீட்டீனால் ஏற்பட்டிருக்க வேண்டிய மாற்றத்திற்கு முன் நிஜம் மிக சிறியது. இதற்கான முக்கிய காரணங்கள்
1.சீக்காளி நிலையில் இருந்து மீண்டபின்னும் பலர் அந்நிளைக்கே உரித்தான சத்துக்களை இன்னமும் உரிந்த்துக் கொண்டு இருப்பது. இதனால் மற்ற உன்மையான சீக்காளி குழந்தைகள் இன்னமும் அதே நிலையின் உள்ளனர்.
2.மே.சாதியினர் போல இவர்கள் தமக்குள் ஒரு பலமான 'working network' ஏற்படுத்திக் கொள்ளாதது. ஏனியில் ஏறிய ஒருவர் இன்னொருத்தருக்கு அதை காட்டி கொடுக்காமல் இருப்பது
3.அரசியில், வோட்டு வங்கி, வாய்ப்பு பறிக்கப்பட்ட மே.சாதியினர் ஏற்படுத்தும் தடைகள்

இனி...
ஒதுக்கீடு என்பதே இல்லாமல் போகட்டும், திறமை உள்ளவர்கள் நிலைக்கட்டும் என கூறும் அளவிற்கு இந்தியா இன்னும் முன்னேறவில்லை.
அரசு இன்னும் எத்தனை நாள் இடஒதுக்கீடு தேவை என ஒரு Target வைத்திக்கொள்ள வேண்டும். அதை எப்படி அளப்பது (தா.சாதியின் முன்னேற்ற விகிததில்?) எனவும் கருத்தொற்றுமை காணப்பட வேண்டும். அதற்குபின் சாதி ரீதியான ஒதுக்கீடு முற்றிலும் அகற்றப் பட்டு எல்லாருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் வழங்க ஆவன செய்யவேண்டும் (பொருளாதாரம், கிராம/நகர்புற வித்தியாசங்கள் உட்பட )
அதுவரை சின்ன சின்ன மாற்றங்கள் இடஒதுகீட்டு முறையில் கொண்டு வரப்படவேண்டும். எனக்கு தோன்றியவை இவை
1.ஒதுக்கீடு முறையின் மூலம் பலனடைந்த இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் - அவர்கள் பொருளதார வசதியை வைத்து Re-classify செய்யவேண்டும். இது மே.சாதியினரையும் சாந்தபடுத்தும். தா.சாதியினர் தம்மிடையே 'working network' ஏற்படுத்த உதவும்.
2.அதேபோல் மே.சாதியினருள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களையும் Re-classify செய்ய வேண்டும். இல்லையேல் தராசில் ஒரு பக்கம் ஏறுவதும் மறுபக்கம் இறங்குவதும் போல வருங்காலம் முழுதும் நாம் ஒதுக்கீடு முறையை பயன்படுத்த வேண்டியது தான்.
3.வேலை வாய்ப்புகளில் ஒதுக்கீட்டு அளவை படிப்படியாய் குறைத்து, கல்வி நிறுவனங்களில் அதிகரித்தல். இதன் மூலம் 'திறமையான தா.சாதியினரை உருவாக்குவது' என்ற உன்மையான நோக்கம் நிறைவேறும்.
4.அரசின் இந்த உயரிய குறிக்கோளுக்கு உதவும் தனியார் நிறுவனங்களை அங்கிகரித்தல். உதவுவது என்றால் வேலை கொடுப்பது மட்டுமல்ல...முன்னர் குறிப்பிட்டது போல் தா.சாதியினருக்கு கல்வி கற்க ஏற்பாடு செய்தல், ஸ்காலர்ஷிப் தருதல் போன்றவைகூட. இவ்வகை உதவிகள் கூட வேலை கொடுப்பது என்றில்லாமல், வேலை வாய்ப்பை வெல்ல தாயார் படுத்துதல் என்று இருத்தல் நலம்.
இவை என் தனிப்பட்ட கருத்துக்களே.

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 5 (show/hide)

5 Comments:

Blogger நந்தன் | Nandhan said...

விட்டு போன ஒரு வாதம்.
சாதி ரீதீயான ஒதுகீட்டை எதிர்க்கும் எத்தனை பேர் பெண்களுக்கான 33% ஒதுக்கீட்டை ஆதரிகிறீர்? எப்படி நூற்றாண்டுகளை பெண்கள் அடிமைபடுத்தபட்டு, வாய்ப்புகள் மறுக்கபட்டனர் என்பது உன்மையோ அதேபோல் தான் தா.சாதியினரும். அப்படியிருக்க ஏன் இந்த பாரபட்சம்?

4/23/2006 7:01 AM  
Blogger மாயவரத்தான் said...

நல்லதொரு பதிவு. இன்னும் ஆழமாய் அலசியிருக்கலாம். ஆனாலும் இப்போதெல்லாம் இட ஒதுக்கீடு குறித்து அலசும் பதிவுகள் அதிகமாகி விட்டன. உண்மையிலேயே இட ஒதுக்கீடு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டம் வந்து விட்டதோ? (அதாவது இட ஒதுக்கீடு முறையில் மாறுதல் செய்ய)

4/23/2006 7:37 AM  
Blogger Unknown said...

உங்களது எழுத்துருவில் பிரச்சனை இல்லை. Settings சென்று Encodingஐ UTFக்கு மாற்றுங்கள், சரியாகிவிடும்

4/23/2006 8:29 AM  
Blogger Unknown said...

நந்தன்,

//விட்டு போன ஒரு வாதம்.
சாதி ரீதீயான ஒதுகீட்டை எதிர்க்கும் எத்தனை பேர் பெண்களுக்கான 33% ஒதுக்கீட்டை ஆதரிகிறீர்? எப்படி நூற்றாண்டுகளை பெண்கள் அடிமைபடுத்தபட்டு, வாய்ப்புகள் மறுக்கபட்டனர் என்பது உன்மையோ அதேபோல் தான் தா.சாதியினரும். அப்படியிருக்க ஏன் இந்த பாரபட்சம்?//

அங்கேயும் ஒரு விஷயம் இடிக்குது. சோ மாதிரியான ஆட்கள் "எங்கே இப்படி ஒரு கேள்வி வந்துவிடுமோ" என்றே பெண்களுக்கான இடஒதுக்கீட்டையும் ஆதரிப்பது இல்லை.

4/23/2006 8:33 AM  
Blogger நந்தன் | Nandhan said...

நன்றி மாயவரத்தான், KVR.
//நல்லதொரு பதிவு. இன்னும் ஆழமாய் அலசியிருக்கலாம்.//
உன்மைதான். நீங்கள் சொன்னது போலவே நிறைய பேர் நிறைய பேசியிருக்கிறார்கள். இது அப்படி பட்ட ஒரு பதிவில் பின்னூட்டம் இடப்போய் சட்டென மனதில் தோன்றியதை எழுதினேன்.
KVR,
// சோ மாதிரியான ஆட்கள் "எங்கே இப்படி ஒரு கேள்வி வந்துவிடுமோ" என்றே பெண்களுக்கான இடஒதுக்கீட்டையும் ஆதரிப்பது இல்லை. //
சிலரை திருத்தவே முடியாது!:(
மற்றபடி ஒதுக்கீடு முறைய மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் உடனடியாய் இல்லை என்பது என் அப்பிபிராயம்.

4/23/2006 8:00 PM  

Post a Comment

<< Home

மூக்குக்கண்ணாடி

இந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம் தாத்தவோட சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு

கண்ணாடிக்கு பின்னாடி

பிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...
சாப்ட்வேர்- தொழில். சினிமா, புத்தகம்,எழுத்து - ஆர்வம்
இன்னும் தெரியனுமா?