கடைசியா போட்டு பார்த்தது

பழைய கண்ணாடிகள்

மத்தவங்க கண்ணாடி

If you have problems in viewing this page try this, in the menu bar goto View>encoding>select Unicode(UTF-8)

நாங்க நாலு பேர். ஹைதராபாத்ல எங்களுக்கு பயமே கிடையாது

'தனியா ரூம் எடுத்து இருக்கிற 4 சாப்ட்வேர் பாச்சிலர்ஸ்' இப்படி சொன்னா நீங்க என்ன மாதிரி கற்பனை பன்னுவீங்களோ கிட்டதட்ட அதே மாதிரியான நாலு பேர் நாங்க. நான், நிர்மல், கனேஷ் & சஞ்சய்

"இன்னிக்கி நைட் 'காரெட்' ரெஸ்டாரன்ட் வந்துடுங்க, என் பர்த்டே ட்ரீட்" - கனேஷ் சொல்லும் போது சட்டுனு தலையாட்டினோம், ராத்திரி நடக்கபோற கூத்த பத்தி தெரியாம.

சீக்கிரம் வேலையெல்லாம் முடிச்சு சரியா 8.30க்கு காரெட்ல ஆஜர். பேச்சும் கும்மாளம்மா நாங்க சாப்பிட்டு வீடுக்கி கிளம்பும் போது இராத்திரி 11.30.

வண்டியெல்லாம் பார்க் பண்ணிட்டு எங்க க்கு படியேறும் போது சஞ்சய் தான் மொதல பார்த்தான்.

"ஏன்டா, இங்க நின்னுட்டே?" - நிர்மல்

"அங்க பாரு, நமக்காக யாரோ காத்துட்டுயிருக்காங்க"

அவர்களோடு சேர்ந்த நானும் கனேஷும் சஞ்சய் காட்டிய இடத்தை பார்த்தோம். அங்கே சின்னதும் பெரிசுமாய் 8 - 10 குரங்குகள். 'இவனுக ஏன் இங்க வந்தானுவ' என்பதை போல பார்த்தன.

நிறைய மரங்களோட அமைதியா இருக்க எங்க ஏரியாவில் குரங்குகள் சகஜம் தான். அடிக்கடி ரோடுல பாத்து இருக்கோம். ஆனா தாத்தா முதல் பேரன் வரை 3 தலைமுறை குரங்கு குடும்பம், எங்க அபார்ட்மென்ட் படில உட்கார்ந்து 2வது மாடில இருக்க எங்க flat போக விடாம வழி மறிக்கிறது இது தான் முதல் தடவை.

'இப்போ என்னாடா பன்றது?' -கனேஷ்

'இதுக்கெல்லாமா பயப்படுவாங்க? துரத்தி விட்டு போக வேண்டியது தான்' - நிர்மல்

'அப்போ நீயே பொ. நீதான் ஹெல்மட் வச்சிருக்க' என நிர்மலை முன்னாடி தள்ளினேன்.

நாலு படியேறிய நிர்மலை பார்த்த ஒரு குட்டிக் குரங்கு பயந்து ஒடி போய் ஒரு பெரிய குரங்கிடம் கம்ப்ளையன்ட் செய்ய (என்னமோ கத்துச்சீங்க, நாமளா மொழி பெயர்த்துக்க வேண்டியது தான்) அது ஒருவிதமான முறைப்புடன் உறுமியதுதான் தாமதம் எல்லாரும் முதல் மாடிக்கு வாபஸ்.


'சே! அல்பம் குரங்கு இதுக்கிட்டெல்லாம் பயப்பட வேண்டியிருக்கே.'

'மனுஷனே தன்டம்டா. மூளைதான் இருக்கு...மத்தபடி ஒன்னுத்துக்கும் வக்கில்லை' சஞ்சய் தன் கண்டுப்பிடிப்பை அறிவித்தான்.

நாங்க மூனு பேரும் அவனை ஒரு மாதிரி முறைக்கிறது புரிஞ்சதும், 'சரி சரி, ஏதாவது குச்சி இருந்தா அதவிச்சி விரட்டலாம்'

'என்கிட்ட ஒரு குச்சி இருக்கு' என சட்டைப்பயில் இருந்து பல் குத்தும் குச்சியை (உபயம் 'காரேட்') காட்டினேன். மறுபடியும் அதே முறைப்பு. விட்டு இருந்தா இவனுகளே பிறாண்டி இருப்பாங்க.

நிர்மல் மட்டும் ஏதோ யோசனை வந்தவனாய் கார் பார்கிங்க்கு போய் ஒரு குச்சியோட திரும்பி வந்து 'இது தான் கிடைச்சுது. எடுத்துட்டு போய் விரட்டு' என என்னிடம் நீட்டினான்.

'டேய் இது என்ன நான் உன்னை முதல்ல தள்ளிவிட்டதுக்கா? இல்ல, இப்போ மொக்க போட்டதுக்கா?'

'ரெண்டுத்துக்கும் தான்' என சஞ்சய் தள்ள. இப்போ என் பின்னாடி மத்தவங்க.

நானும் தைரியத்தை வரவைச்சு அட்டாக்க லீட் பண்னேன். முதல் தடைவையாவது கத்திட்டு விட்டுது, இந்த தடவை குரங்குகளும் மறு தாக்குதலுக்கு தயார் என்பது போல உரிமையுடன் ரெண்டு தாவு தாவினது தான். குச்சிய அங்க்யே போடுட்டு விடு ஜூட்.மறுபடியும் முதல் மாடி.

'பெசாம பார்க்கிங்லயே படுத்துக்கலாம் காலைலே குரங்கெல்லாம் போன பின்னாடி ப்ளாட்க்கு போலாம்' -கணேஷ்

'ம்ம்ம், காலையில உன்கூட ஒரு குரங்கு படுத்திருக்கும் பரவயில்லையா?'

'அய்யோ அது ரிஸ்க். ஆமா இந்த படத்துலயெல்லாம் புலிய விரட்ட மேல தாளத்தோட போவங்களே அப்படி ட்ரை செய்யலாமே?' என அவன் புன்னியத்துக்கு ஒரு ஐடியா கொடுத்தான்

'எல்லாரும் மொபைல்ல லௌட்டா ரிங் டோன் போட்டு போலாம்' என அதை வழிமொழிந்தேன் நான்.

எங்க மூன்றாவது படையெடுப்புக்கு தளபதியாய் கனேஷை ஒரு மனதாக மற்ற மூவரும் தேர்வு செய்தோம்

'வேற யாராவது ட்ரை பண்ணுங்கடா, நான் தான்டா ஐடியா கொடுத்தேன்'

'அதுனால தான் மச்சி உன்னை அனுப்புறோம்'

'அப்படின்னா ஹெல்மட் போட்டுதான் போவேன்' என தலைக்கு ஹெல்மட்டும், முன்னாடி ஒரு பேக் கவசம் மாட்டிக்கொண்டு நிஜமாகவே ஒரு தளபதி போல் போனான் கனேஷ்.

எல்லாருடைய மொபைலிலும் கரகாட்டகாரன் வாழை பழ ஜோக் மியூசிக்கை முழு வாலுயுமில் வைத்து முன்னேறினோம். பயப்படும்னு எதிர் பார்த்தா, இந்த குரங்குகள் உண்மையாகவே எதிர் தாக்குதலுக்கு குதிச்சு ஒரே தாவுல பத்து படி கடந்து, கனேஷ்க்கு கொஞ்சம் முன்னாடி லேன்ட் ஆகின. பயந்து போன கனேஷ் திரும்பி பார்க்கும் போது பின்னாடி நாங்க இல்லை.

'ஏன்னடா ஓடி வந்துட்டே?' எங்கள் பின்னாடி ஓடி வந்த கனேஷை பார்த்து கேட்டான் சஞ்சய்

'நீ எதுக்கு ஓடி வந்தேயோ அதுக்கு தான்'

'சே, எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருது' - நிர்மல்.

'உனக்காச்சும் பரவாயில்ல அடக்கலாம் எனக்கு...சொல்றத கேளு, நாம் பார்த்திவ் வீடுக்கு போய் படுத்துடு நாளைக்கு வரலாம்' என மறுபடியும் ஐடியா கொடுத்தான் கனேஷ்.

'போய் என்ன சொல்லுவே? குரங்குக்கு பயந்து வந்தோம்ன்னா?' - சஞ்சய்

'அவன் ஒருத்தனுக்கு தெரிஞ்சா போதும். ஆபிஸ் பூரா மேயில்லயே போஸ்டர் ஒட்டி படம் போட்டுடுவான்' – நான்

'அப்போ எவ்வளவு நேரம் இப்படியே இருக்கிறது?'

'வேனும்னா ஒரு தடவை போய் ராம பஜனை பன்னுவோமா? ஜெய் அனுமான்' என குதித்தான் நிர்மல்.

'நெருப்பு காட்டினா எல்லா அனிமலும் பயப்படும்' - சஞ்சய்

'ஒரு மணிக்கு எங்க போய் நேருப்பு கேட்ப?' நிர்மல்

'இதுக்கு தான் எவனாச்சும் சிகிரேட் குடிக்கிறவன் இருக்கனும், பாத்தியா எப்போ மேட்ச் பாக்ஸ் தேவை படும்னு சொல்ல முடியாது'

'மெயின் ரோட் போய் ட்ரை செய்யலாம். ஆட்டோகாரன் எவனாச்சும் இருப்பான்.'

அப்படியே மெயின் ரோட்ல 15 நிமிஷமும்; 5 ஆட்டோவும் கடந்த பின்னாடி ஒரு தீப்பெட்டி கிடைச்சுது. அதுவும் அவனுக்கு எங்க அறை குறை தெலுங்குல விளக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆச்சு. ரோட்ல இருக்க பழைய நியுஸ் பேப்பர் எல்லாம் பொறுக்கி ஒரு தீப்பந்தம் போல தயார் செய்தோம். எங்களோட கடைசி போர் முயற்சிக்கு சஞ்சய் தான் தலைமை.

முதல் மாடியிலேயே பேப்பர் தீப்பந்ததை பற்ற வைத்துக்கொண்டு முன்னாடி போனான் சஞ்சய். நெருப்ப பாத்த குரங்குகள் பயந்து பின்வாங்க இன்னும் ஆக்ரோஷமாய் முன்னேறினோம். இப்போ எங்க எல்லார் கையிலும் நெருப்பை பார்த்த குரங்கு பேமிலி புறமுதுக்கிட்டு ஓட. வெற்றி வாகை சூடிய வீரர்களாய் ப்ளாட்டுக்குள் அடியெடுத்து வைத்தோம்.

ஆரத்தி எடுக்கத் தான் யாருமில்ல!!பின்குறிப்பு:

அடுத்த நாள் காலையில எங்க அப்பார்ட்மென்ட் படியெல்லம் குரங்கு அசிங்கம் செய்து இருந்ததாகவும் அது மட்டுமில்லாமல் படிகளில் எதையோ எரித்த கரி துகள்கள் இருந்ததாகவும் அப்பார்ட்மென்ட் கூட்ட வரும் வேலைக்காரி புலம்பிக் கொண்டிருந்தாள். குரங்குகள் நேருப்பை கொண்டு எரிப்பது ராமாயணத்துக்கு அப்புறம் இப்போது தாங்க நடந்து இருக்கும் என சொல்லிக்கொண்டாள்

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 26 (show/hide)

26 Comments:

Anonymous Anonymous said...

Super da machi....
enjoyed reading........

8/12/2005 8:08 AM  
Anonymous Anonymous said...

அவையெல்லாம் உங்கள் மென்பொருளை உபயோகித்த வாடிக்கையாளர்களால் அனுப்பிவைக்கப்பட்டனவா என்று யாருக்கும் சந்தேகமே வரவில்லையா ? :-))

8/12/2005 12:50 PM  
Anonymous Anonymous said...

அட இப்படி ஒரு அனுபவமா??? Really I was laughing while reading it! Super comedy of the week!

8/16/2005 2:57 AM  
Anonymous Anonymous said...

அனானிமஸ் @8.08 : நிர்மல், பெயரை விட்டு பொயிருக்கலாமே :)
அனானிமஸ் @12.50 : அவங்க அனுப்பறதா இருந்தா புலி, சிங்கம்ல வரும். நம்ம வேலை அப்பிடி ஹிஹி
அனானிமஸ் @2.57 : எல்லாம் நேரமுங்கோ. Comedy of the monthunkgo

8/16/2005 9:52 PM  
Anonymous Anonymous said...

hey the name is not getting displayed, i have given my name on the text box- Angaiyar
please chk that one!It's a bug!

8/17/2005 2:49 AM  
Anonymous Anonymous said...

//Comedy of the monthunkgo//

காமெடி ஆஃப் த மந்த்தா !! இன்னும் ஒரு மாசத்துக்கு குரங்கு விரட்ட ஆசைப்படுறீங்க போல..

- கோபி

By: கோபி

8/17/2005 3:30 AM  
Anonymous Anonymous said...

// hey the name is not getting displayed, i have given my name on the text box- Angaiyar//

I dont think its a bug. Its user education problem. you need to click the "உங்க பேரும் ஊரும் (url) வரனும்னா இத சொடுக்குங்க:" check box

- கோபி

8/17/2005 3:33 AM  
Anonymous Anonymous said...

test

8/17/2005 3:44 AM  
Blogger dondu(#4800161) said...

"hey the name is not getting displayed, i have given my name on the text box- Angaiyar
please chk that one!It's a bug!"

பக்கெல்லாம் ஒன்றுமில்லை. இப்படி எழுத்துறு மாற்றுப் பின்னூட்டப் பெட்டியுடன் வரும் எல்லா வலைப்பூவிலும் இந்தப் பிரச்சினைதான். ப்ளாக்கர் பின்னூட்டத்துக்கு இம்மாதிரி நேரடியாக வந்து விட்டால் பிரச்சினை இல்லைதான்.

மற்றப்படி குரங்குகளுடன் அட்வென்சர் சுவையாக இருந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/17/2005 3:52 AM  
Blogger dondu(#4800161) said...

Kindly enable the display of profile photos along with the respective comments.

Regards,
Dondu Raghavan

8/17/2005 3:54 AM  
Anonymous Anonymous said...

Angaiyar: See Gopi's reply
கோபி: அட போன சனிக்கிழமை கூட ஒரு போருங்க. அஸோசியெஷன்ல சொல்லனும்
டோண்டு ராகவன்: கூடிய விரைவில் மாத்திடலாம். ஒன்னு தெரியுமா? நான் இந்த பதிவுகளை எழுதினதே "Comment box script" விச்சுதான் : ( சரி உங்க 'காப்பியடிச்ச பையன்' கேசு முடிஞ்சதா?

By: nandha

8/17/2005 4:22 AM  
Blogger dondu(#4800161) said...

காப்பியடிச்சப் பையன் கேஸ் முடிந்து விட்டதே.

பத்தாவது கேள்விக்கு பக்கத்து சீட் மாணவன் விடை எழுதினான்: "விடை எனக்குத் தெரியாது", அதைக் காப்பியடிச்சப் பையன் எழுதினான்:"விடை எனக்கும் தெரியாது."

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/17/2005 9:26 AM  
Anonymous Anonymous said...

oh ok, i did not enable the check box!

By: Angaiyarkanni

8/19/2005 1:36 AM  
Anonymous Anonymous said...

நல்லா எழுதியிருக்கீங்க..
அமுதசுரபி நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு அனுப்பி இருக்கலாம். அண்ணா கண்ணன் ஞாபகப்படுத்திகிட்டே இருந்தாரே?

By: Ramya Nageswaran

8/19/2005 2:27 AM  
Anonymous Anonymous said...

டோண்டு சூப்பர் பதில்.
அட போட்டிக்கெல்லாம் அனுப்புற மாதிரியா இருக்கு? நன்றி. மத்தபடி நான் எழுதின போது போட்டி முடிஞ்சுடுத்துன்னு நினைக்கிறேன்

8/23/2005 2:16 AM  
Anonymous Anonymous said...

என்னது இது சிறுபில்லை தனமா? சண்டாலா!

8/24/2005 1:16 AM  
Anonymous Anonymous said...

வெளயாட்டுப் புள்ளைங்க...நாங்கெல்லாம் அந்தக் காலத்தில ஆடாத கூத்தா.

By: சிக்கல் சண்முகசுந்தரம்

8/24/2005 2:29 AM  
Anonymous Anonymous said...

னல்லா இருக்குப்பா!

By: test

8/24/2005 4:28 AM  
Blogger யாத்திரீகன் said...

ஹா ஹா ஹா... நல்ல நகைச்சுவை கண்ணாடி.. :-))))

8/28/2005 9:27 PM  
Anonymous Anonymous said...

நல்ல காமெடி. சுவையாகவும் எழுதியிருக்கிறீர்கள்.

By: மஞ்சுளா

8/29/2005 11:57 AM  
Anonymous Anonymous said...

நல்லா இருக்கு உங்க குரங்கு விஷயம். பின்னூட்டம் நீண்டதாலே அதையே ஒரு பதிவாப் போட்டுட்டேன்.
நன்றி ஞாபகப் படுத்துனதுக்கு:-)

என்றும் அன்புடன்,
துளசி.

8/29/2005 2:11 PM  
Anonymous Anonymous said...

சிக்கலாரே, நான் ஏணி போட்டு எட்டினாலும் உம்மகிட்ட வரமுடியாதுங்கானும். மோகனாங்கி எப்படி இருக்கா?
senthil, test,manjula :மிக்க நன்றி.
துளசி, நான் என்ன ஞாபகபடுத்தினேன்? : (
அனானிமஸ் @1.16, test : நான் தான் ண,ன, ள, ல குழப்புவேன்னு நினைச்சேன், நீங்களுமா? : )
மற்றபடி, நிறைய பேரு கமென்ட்ஸ் 2 தடவை இருக்கு அதுல ஒன்னு மட்டும் விச்சுகிட்டு மற்றதை அழிச்சுட்டேன்.


By: nandhan

8/29/2005 9:12 PM  
Anonymous Anonymous said...

நல்லா இருக்கு

9/02/2005 4:36 AM  
Anonymous Anonymous said...

சூப்பர் அனுபவம்!!!

By: SelvaRaj.M

9/02/2005 5:42 AM  
Anonymous Anonymous said...

டக்கரா இருக்கு இந்த ப்லொக்கு... ஸுபர்

9/19/2005 7:41 AM  
Blogger Prabu Raja said...

ha ha ha haaaaaa :-)

5/16/2006 6:23 AM  

Post a Comment

<< Home

மூக்குக்கண்ணாடி

இந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம் தாத்தவோட சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு

கண்ணாடிக்கு பின்னாடி

பிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...
சாப்ட்வேர்- தொழில். சினிமா, புத்தகம்,எழுத்து - ஆர்வம்
இன்னும் தெரியனுமா?