கடைசியா போட்டு பார்த்தது

பழைய கண்ணாடிகள்

மத்தவங்க கண்ணாடி

If you have problems in viewing this page try this, in the menu bar goto View>encoding>select Unicode(UTF-8)

கண்ணாடி போட்ட கதை

ஸ்கூல் படிக்கும் போது நல்லா படிக்கிற பசங்க எல்லாம் கண்ணாடி போட்டிருப்பாங்க. அப்போ ஆரம்பிச்சதுங்க இந்த கண்ணாடி போடற ஆசை. அதுவும் வீட்ல எல்லாரும் கண்ணாடி போட்டிருக்க நானும் எங்க கடைசி அக்காவும் மட்டும் தான் பாக்கி. நான் எட்டாப்பு படிக்ககும் போது எங்க அக்காவுக்கும் கண்ணுல பிரச்சனை வர, டாக்டர் கண்ணாடி போடனும்னு சொல்லிடார். அட குடும்பத்துல இப்ப என்னை தவிர எல்லாரும் கண்ணாடி போட்டுட நான் மட்டும் தனியாளாயிட்டேன். நாம சும்மா இருப்போமா? அடுத்த வாரமே ஆரம்பிச்சோம்ல.

"அம்மா எனக்கு ஒரு வாரமா போர்ட்ல எழுதுறது சரியவே தெரியல"ன்னு ஆரம்பிச்சு பிட்டு பிட்டா போட்டு ஒரு வழியா டாக்டர்கிட்ட போய் சேர்ந்தோம்.

செக்கப்புக்கு முன்னாடி கண்ணுல மருந்தை போட்டு "சத்த கண் மூடி உக்காருப்பா"ன்னு சொல்லிட்டு க்ளினிக் பின்னாடியே இருந்த அவர் வீட்டுக்கு டிபன் சாப்ட போயிட்டார். சின்ன புள்ளை இல்லியா, அவர் மசால் வடையை ஒரு வெட்டு வெட்டிடு வர்றதுக்குள்ள தூங்கிட்டேன். ஹிஹி. பாதி தூக்கதுல எழுப்பி டெஸ்ட் பன்னாரு. தூரத்துல ஒரு பலகைல எழுதி இருந்ததுல கடைசி வரிய படிக்க சொன்னாரு, டப்புனு படிச்சிடேன்.

"நல்லா படிக்கிறியே தம்பி"ன்னாரு, பாதி தூக்கதுல இருந்த நமக்கு அப்போ தான் விளங்கிச்சு.

"இல்ல டாக்டர் சில சமயம் சரியா தெரியல" முகத்தை பாவமா விச்சுக்கிட்டேன்.

"ம்ம்ம்ம், எங்கே கீழ இருந்து ரெண்டாவது வரிய படி"

வேணும்னே தப்பு தப்பா படிச்சேன். டாக்டர் லைட்டா தன் வழுக்கைய தடவி விட்டுகிட்டார்.

"சரி இப்போ கடைசி வரிய இன்னோரு தடவை படி"

இந்த தடவை பாதி சரியா, பாதி தப்பா... கொஞ்ச நேரம் என்னையும், போர்டையும் பார்த்தார். அப்புறம் எதோ டெலஸ்கோப் போல இருந்த ஒரு பைப் வழியா கண்ணை பார்த்தாரு. இன்னோரு தடவை பலகைய படிக்க சொன்னாரு.

அவரு சந்தேகமே வராம குழம்புற மாதிரி, ரான்டமா தப்பும், சரியுமா படிச்சேன். ஒரு புக்க எடுத்து என்னமோ தேடுனார். அவருக்கு மேட்டர் விளங்கவுமில்ல வந்த கேஸ விடவும் மனசில்லை.

வெளிய வெயிட் பன்ன எங்க அப்பாவை கூப்பிட்டு,
"கொஞ்சம் காம்ப்ளிகேட்டட் மாதிரி தெரியுது, இப்போதைக்கு நான் எழுதி தர பவர்ல கண்ணாடி போடுங்க. மாத்திரை தரேன் தினமும் கொடுங்க, ரெண்டு மாசம் கழிச்சு திரும்பவும் டெஸ்ட் பண்ணுவோம்"



கண்ணாடி கடைக்காரன் அந்த சீட்டை பார்த்துட்டு. "என்ன சார் இந்த பவர்ல கண்ணாடி போடறதுக்கு போடாம இருக்கலாம்"ன்னான்

"ஏதோ எழுதி கொடுத்தார், நீ கண்ணாடி கொடுப்பா, ஒரு நச்சரிப்பு ஒழியும்" - அப்பா

ரெண்டே நாள்ல அழகான ப்ரௌன் கலர் ப்ரேம்ல கண்ணாடி வந்தது. அதுக்கப்புறம் ஒரு வாரத்துக்கு கண்ணாடியும் கண்ணுமா தான் அலைஞ்சேன்.

"தூங்கும் போது கூட கண்ணாடி எதுக்குடா?கனவெல்லாம் சரியா தெரியலயா?" - என் அக்கா.

தேவையே இல்லாம போட்டதாலோ என்னமோ,கண்ணாடி போட்டதுல இருந்து லைட்டா தலை வலி இருந்தது, வெளியே சொன்னா அடி விழும்னு அமுக்கமா இருந்தேன்.ஒரு வாரத்துக்கப்புறம் ஏதாவது காரணம் சொல்லி கொஞ்சம் கொஞ்சமா கண்ணாடி இல்லாமா புழங்க ஆரம்பிச்சேன். நாலு மாசத்துல எல்லாரும், நான் கண்ணாடி போட்டிருந்ததையே மறந்துட்டாங்க. அப்பா மட்டும் ஒரு வருஷத்துக்கு "உனக்கு கண்ணாடி ஒரு தண்ட செலவு"ன்னு சொல்லிட்டிருந்தார்.

அத்தோட முடிஞ்சுது நம்ம கண்ணாடி கதை. அப்புறம் காலேஜ் டைம்ல ரெண்டு தடைவ கூளிங் கிளாஸ் டிரை செஞ்சேன். "உனக்கு கூளர்ஸ் போட்டா comicsல வர Phantom மாதிரி இருக்குடா"ன்னு கிளாஸ்-மேட் ஒருத்தி கிண்டல் செஞ்சதுல இருந்து அதுவும் அவுட்.


இப்படி இருந்த என்கிட்ட, "உங்க ப்ளாக் முழு தமிழ் ப்ளாக்கா இருந்தா தான் தமிழ்மணம்ல சேத்துக்க முடியும்னு சொல்லி ஒரு முழு தமிழ் ப்ளாக் ஆரம்பிக்கவிச்சார் காசி. அதுக்கு பேர் வைக்கப்போய் மறுபடியும் கண்ணாடி போட்டு இருக்கேன். இந்த தடவை ரொம்ப நாள் போட்டிருப்பேன்னு நினைக்கிறேன்!

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 9 (show/hide)

9 Comments:

Anonymous Anonymous said...

hey it was good!

8/04/2005 1:31 AM  
Anonymous Anonymous said...

நல்லா இருக்கு

8/04/2005 8:14 PM  
Anonymous Anonymous said...

மிகவும் சுவாரசியமாக இருந்தது. காசி சொன்னதினால இந்தக் கண்ணாடிப் பதிவு எழுதி இருக்கீங்க போல! நல்ல விதயம் செஞ்சிருக்கார் காசி. :)

உங்க பதிவை தமிழ்மணத்தில் சேர்த்தாச்சு. தொடர்ந்து எழுதிக்கலக்குங்க!

-மதி

By: Mathy Kandasamy

8/05/2005 7:54 AM  
Anonymous Anonymous said...

நன்றி அங்கையர், அனானிமஸ் & மதி.
வந்து போய்ட்டு இருங்க!

By: nandhan

8/07/2005 9:56 PM  
Anonymous Anonymous said...

test

8/08/2005 9:19 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

தூங்கும்போது கண்ணாடி போட்டு கொண்டால் கனவெல்லாம் நன்றாகத் தெரியுமாமே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/08/2005 9:21 AM  
Anonymous Anonymous said...

எதேது டோண்டு அனுபவம் போல?

By: nandhan

8/08/2005 9:58 PM  
Anonymous Anonymous said...

இந்த கண்ணாடியாவது வலிக்காம.. பல நாள் தொடர வாழ்த்துக்கள்.. :-)

By: செந்தில்

8/10/2005 2:04 PM  
Anonymous Anonymous said...

நன்றி செந்தில். நிறைய எழுத இருக்கு. நிச்சயம் இந்த கண்ணாடி வலிக்காது. அப்படியே வலிச்சாலும் கழட்டாம இருக்க விரும்புறேன்.

8/10/2005 10:19 PM  

Post a Comment

<< Home

காலக்கலவை

நொடிக்கு நொடி மாற்றங்கள் என்னை சுற்றி,
மாற்றங்களை மறைக்கும் மாற்றங்கள்!
சூழ்நிலைகளை சார்ந்தா நான்?
என்னை சார்ந்தா சூழ்நிலைகள்?
விடைகாண முயற்சிக்கும் ஒவ்வொரு படியும்
விடுகதைக்கே இட்டுச் செல்கின்றன!
காலக் கலவை கண்ணாம்பூச்சியாட,
கட்டவிழ்கத் தெரியாமல் கதறுகிறேன் நான்.
காப்பற்றுபவர் எவரும் இல்லையா?

என்ன சொல்லி என்னை சொல்ல... காதல் என்னை கையால் தள்ள

சாவி
வன்ன மலர்கள், வாழ்த்து அட்டைகள்,
இன்லன்ட் அஞ்சல்கள், ஈ-மெயில் கடிதங்கள்,
முகம் பார்த்து மூன்று முறை சொல்லியாயிற்று
இன்னும் உன் மௌன பூட்டை திறக்க
என் முச்சு மட்டும் தான் பாக்கி

நியுட்டன்
1.எல்லோர் இதயமும் அவரவர் சொற்படியே நடக்கும், காதல் வந்து மாற்றும் வரை.
2.ஊடலும், கூடலும் பெருக, பெருகும் காதல்
3.எல்லா காதலுக்கும், இனையான எதிர் காதல் உண்டு.

தலைப்புகள் இல்லாத தவங்கள்
# என்ன பிடிக்கும் என்னிடம்? என்றாய்
குழம்பினேன், தேனே பூவானால், தேனீக்கள் குழம்பதானே செய்யும்!

# 'உன் பேச்சுக்களை விட உன் மௌனம் பிடித்திருக்கிறது' என்றேன்
கோபித்து கொண்டு 'இனி உன்னிடம் பேசப் போவதில்லை" என்றாய்!!

நத்தை
உன் காதலையெல்லாம் ஓட்டினுள் ஒளித்து
ஊர்ந்து செல்ல வேண்டும் நான், நேர பாதையின் மீது.

இது என்ன மௌனம்
இது என்ன மௌனம்
தினம் என்னை கொல்லும்
புது வகை ஆயுதம்.
மறைத்தது போதும்
மனமெங்கும் இன்று
மறுபடி பூகம்பம்.

விழிகளெல்லாம் விடுகதையாய்,
விடை தெரியா தொடர்கதையாய்,
இம்மைக்கும் மறுமைக்கும் சேர்த்தே மௌனமா?

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 2 (show/hide)

2 Comments:

Anonymous Anonymous said...

மிகவும் அருமை படிக்க படிக்க மனடினில் இனிமை பூக்கின்ரது

2/26/2006 3:22 PM  
Anonymous Anonymous said...

ரோம்ப நாள் கழித்து இங்கே வந்திருக்கீங்க...பேரை விட்டு போயிருக்கலாமே. நன்றி

By: nandhan

2/26/2006 3:45 PM  

Post a Comment

<< Home

பரிசோதனை எலிகள்

முன்குறிப்பு:
நார்த் கரொலினாவில் தரையிரங்க இன்னும் 45 நிமிடம் இருந்தது. அங்கிருந்து 10 நிமிடம்,டிராபிக் இருந்தால் 20 நிமிடம் கார் பயனம் செய்ய வேண்டி இருக்கும். விஜயன் தன் கைபையில் இருந்த மஞ்ச்ள் நிற கவரை எடுத்து பார்த்தான். 'இன்டர்நெஷ்னல் டாட்டா கண்சொர்டியம்' என்று எழுதி இருந்தது. வலது ஒரத்தில் 'கான்பிடென்ஷியல்' என முத்திரை குத்த பட்டிருந்தது.

~~~~

'விஜயன் உங்களை பாரத பிரதமர் சந்திக்க விரும்புகிறார்' என்று ஆரம்பித்த தொலைபேசி அழைப்பில் துவங்கியது விஜயனுக்கும் ஐ.டி.சிக்குமான் உறவு.
'மிஸ்ட்ர்.விஜயன், உலகின் 10 வல்லரசுகள் சேர்ந்து ஒரு மிக பெரிய தகவலியல் கழகத்தை உருவாக்க உள்ளனர். அதில் இந்தியவும் ஒரு அங்கம். நம் திறனையும் வளத்தையும் உலகம் உண்ர்ந்து கொள்வதில் இது ஒரு மைல்கல். இந்தியாவின் சார்பாக அதில் ஒரு டைரக்டர் ஆக உங்களுக்கு சம்மதமா?'
மிஸ்ட்ர்.பிரைம் மினிஸ்டர், இதில் என் பங்கு என்னவாக இருக்கும்?'
'உங்களுக்கு நான் பாடம் எடுக்க தேவையில்லை... இருந்தாலும், ஐ.டி.சி -இன்டர்நெஷ்னல் டேட்டா கன்சார்டியம், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தகவல்களை சேகரித்து, அதில் இருந்து புதிய - இதுவரை கண்டுபிடிக்காத, மனிதகுலதிற்கு பயனுள்ள உன்மைகளை கண்டறிய போகிறது. இதன் தொழில்நுட்ப இயக்குனராக உங்களை நியமிக்க விரும்புகிறேன்...'
தான் இதற்கு ஏன் தேர்ந்தெடுக்க பட்டோம் என விஜயனுக்கு விளங்கியது. பின்னே? 12 வருடங்களாக உலகில் பல்வேறு நிறுவனங்களுக்கு டேட்டா வேர்ஹௌஸ் எனப்படும் தகவல் கிடங்குகளை வடிவமைத்து, அதன் மூலம் அவரவர் தொழிலில் புதைந்துள்ள பல அறிய உத்திகளை கண்டுபிடிக்க உதவியவன் ஆயிற்றே!

'என்னால் முடிந்ததை செய்கிறேன் சார்' என்று கைகுலுக்கி எழுந்தான். கிளம்பும் முன், 'விஜயன், அதில் நடப்பது சர்வதேச ரகசியம், அதனால்...'
'புரிகிறது சார்' என்று அர்த்தமுள்ள் புன்னகையுடன் தலையாட்டினான் விஜயன்.

இது முடிந்து 5 வருடங்கள் ஓடிவிட்டன, இப்போது அதே ஐ.டி.சி தன் செயல்பாட்டை நிருபிக்க வேண்டிய கட்டாயம். இந்த 5 வருடங்களில் எந்த "புதிய" உண்மைகளை கண்டறியவில்லை என, பல ஸ்பான்சர் நாடுகள் ஐ.டி.சி -ஐ ஒரு வெள்ளை யானையாக பார்க்க ஆரம்பித்துவிட்டன. ஏதெனும் ஒரு 'பாத்-பிரேக்கிங்' கண்டுபிடிப்பு வரவில்லையென்றால், மான்யம் நிற்கும் நிலை.

'வெல்கம் டு டிரைகௌன்டி ஏர்போர்ட்...' ரெக்கார்டட் குரல் விஜயனை நிகழ் காலத்துக்கு கொண்டு வந்தது.


அதிகம் குளிர் இல்லாத ரம்மியமான விடியலில் கார் ஐ.டி.சி நோக்கி பயனித்தது. 'ஜான், என்ன யோசனை?"-விஜயன்
எதிர்சாரியில் விரையும் கார்களில் இருந்து பார்வையை திருப்பிய ஜான், 'இது நடக்குமா விஜ்?'
'கண்டிப்பா ஜான். இதை நாம் முன்னாடியே டிரை பண்ணியிருக்கனும்.'
'என்ன சொல்றீங்க?'
'இத்தனை நாள் நாம என்ன பண்ணிட்டு இருந்தோம்?'
'இது என்ன இன்டர்வியுவா'?
'ப்ச், சொல்லு ஜான், சுருக்கமா சொல்லு'
'உலகம் முழுக்க உள்ள தகவல்களை ஒன்னா சேர்த்து, பதபடுத்தி, சீர்படுத்தி டெட்டாபேஸ்ல போட்றோம், அப்புறமா அதுல வெளிப்பார்வைக்கு தெரியாத புதிய உன்மைகள், உள்ளர்த்தங்கள் இருக்கான்னு, கம்ப்யூட்டரை விட்டு தேட சொல்றோம் - தங்கம், வைரம் சுரங்கத்துல இருந்து எடுக்கிற மாதிரி.'
'ரைட், இதுல கம்ப்யூட்டரோட பங்கு என்ன?'
'சீர்படுத்தறது, சேமிச்சு வைக்கறது, தேடறது கம்ப்யூட்டர். உள்ளுனர்வால், புது தியரிகளை தயார் படுத்தி அதை ப்ரொகிராம்-அல்காரிதமா எழுதி கம்ப்யூட்டர்கிட்ட கொடுக்கிறது நாம. அந்த தியரிகளோட சாத்தியகூறுகளை தன்கிட்ட இருக்க தகவல்களோட ஆராய்ந்து எந்த அளவுக்கு உன்மை-பொய், ரைட்-தப்புன்னு சொல்லுது.
''இங்கதான், நாம தப்பு பன்றோம், நம்முடைய உள்ளுனர்வு - நம்மகிட்ட இருக்க தகவல்களால் ஆனது . Our intution is limited by our knowledge. அமாவாசைக்கும், அப்துல்காதருக்கும் பழமொழியை தவிர எந்த சம்பந்தமும் நமக்கு தோனாது. ஆனா கம்ப்யூட்டர் கிட்ட இருக்கிற தகவல்கள் ரொம்ப ரொம்ப ஜாஸ்தி...'
'அதனால?'
'இந்த உள்ளுனர்வு வேலையயும் கம்ப்யுட்டரே பாத்துக்கனும்'. மெஷின் லேர்னிங், ஜான் மெஷின் லேர்னிங். டாக்டர் பார்த்தா இததான் 6 மாசமா செய்றார், கம்ப்யுட்டருக்கு உள்ளுனர்வை ஏற்படுத்த இருக்கிறார்'
'ஆனா, இது போர்டொட அனுமதி இல்லாம எப்படி?'
அந்த அனுமதிக்கா தான் இந்த அவசர போர்ட் மீடிங். ஒரு ஃப்ரிவியு மாதிரி செஞ்சி, அனுமதியும், இன்னும் ஃப்ன்டசும் வாங்கனும்.'

அதற்குள் அந்த பள-பளா வெள்ளைக் கட்டிடத்தினுள் கார் நுழைய, இருவரும் இறங்க தயாரானர்.

'ஜான், நீ போய் மீடிங்கான ஏற்பாட்டை கவனி, நான் போய், டாக்டர் பார்த்தாவை பார்த்துட்டு வரேன்.'

'ஓ.கே, பாஸ்'

'ஏய் ஜான், அப்பவே சொல்ல நினைச்சேன், உன்னோட ஷர்ட் நல்லாயிருக்கு'

'தாங்க்ஸ், சூசன் கூட காலையில சொன்னா!' என்று கண் சிமிட்டி சிரித்துக்கொண்டே ஜான் சென்றான்.
லாபியிலிருந்து வலப்புறம் திரும்பிய விஜயன், 'டாக்டர். பார்த்தா' என்று பேயர் பலகை போட்டிருந்த கதவை தட்டினார்,
---'கம் இன்' என்ற குரலை தொடர்ந்து உள்ளே சென்றான்.
'குட் மார்னிங் டாக். எப்படி போது நம்ம முயற்சி?' -விஜயன்
'குட் மார்னிங் விஜ். நல்ல முன்னேற்றம், ஆனா...'
'ஆனா?'
இதோட இன்னொரு பக்கத்தையும் பாக்கனும். இந்த புது ஏற்பாட்டால நம்மோட வேலை கேள்வி கேக்கறதோட நின்னுடுது. சிஸ்டம் அந்த கேள்விகளுக்கு புது தியரிகளை தயார் படுத்தி, தகவல்களோட ஒப்பிட போகுது. சில சமயம் சிக்கலான கேள்விக்கு பதில் தேடுற முயற்சில சிஸ்டம் ஹாங்க் ஆகலாம்.'
'கொஞ்சம் தெளிவா டாக்...'
'ம்ம்ம்..., இப்போ அமேரிக்காவில எங்கே மன்னு இருக்குன்னு கேட்டா உடனே சொல்லிடலாம், ஆனா தங்கம் எங்கே இருக்குன்னு கேட்டா? தோன்டி பார்த்து தானே சொல்லமுடியும். அதுபோல தேட்ற இடம் அதிகமாகி தேடற பொருள் சின்னதாயிட்டா நேரம் அகாதா? ஆனா இது ஓவர்கம் பண்ணகூடியது தான். நம்ம கேள்விகளை சிம்பிளா ஆரம்பிக்கனும்...அப்போ சிஸ்டம் இன்னொரு லேயர் அறிவை வளர்த்துக்கும். இப்போ மன்னை தேடும் போது தண்ணி எங்கே கிடைக்குதுன்னு குறிப்பு கிடைக்கும், மீனை தேட சொன்னா மன் இருக்கிற இடத்தை கன்சிடர் பண்ணாது - அதுபோல.'
'ஐ காட் த ஐடியா. அப்போ, ஃப்ரோக்ரசிவ்-பாக் டிராக்கிங்கா லெர்னிங்க் இருக்கனும், சரியா?'
'கரெக்ட், இப்போ அததான் முயற்சி செய்றோம், அதனால கேள்விகளை சிம்பிள் அன்ட் ஸ்டெரையிட்டா இருக்கனும்'
'ஓ.கே டாக், நான் பாத்துகிறேன், மீடிங்ல ஃபினான்ஸ்-பிஸினஸ் ஆளுக தான் இருப்பாங்க, தேர் ஷுட் நாட் பி எ ஃபிராப்ளம்'

-----
கூச்சலுகிடயே போர்ட் மீடிங்க் நடந்தது. குறிப்பை சைனாவை சேர்ந்த க்வான் யு, ஐ.டி.சி-ஐ மூட 100 யோசனைகளோடு வந்ததாக விஜயனுக்கு பட்டது.
ஓரு வழியாக அவர்களுக்கு புதிய முயற்சியை விளக்கிய பின் அந்த ஃப்ரிவியு நடத்த பட்டது. விஜயன் ஃப்ரோக்ரசிவ்-பாக் டிராக்கிங்க் விஷயங்களை கூறவில்லை, அது அவர்களை மேலும் குழப்பகூடும் என நினைத்தான். ஃப்ரிவியுவில் டாக்டர் பார்தா கேட்ட கேள்விகளுக்கு புத்திசாலி தனமாக் பதில் சொன்னது கம்ப்யுட்டர். கடைசியாய் 'உங்களில் யாருக்காவது கம்ப்யுட்டரிடம் கேள்வி கேட்க விருப்பமா?' - என்றான் விஜயன்.

'இப் யு டோன்ட் மைன்ட்' என கை தூக்கினான் க்வான் யு.

'ப்ளீஸ் க்வான்'-விஜயன்.

சிறிது தொன்டையை கனைத்துக் கொண்டு அந்த ஐ.வி.ஆர்.எஸ் மைக்கில் க்வான் ஆரம்பித்தான்..
'வாட் இஸ் த ஃப்ர்போஸ் ஆப் மேன்கைன்ட்?'
அவன் கேள்வியை சரிப்பார்க்க ஒருமுறை ஒப்புவித்தது கம்ப்யுட்டர்.
'சரி' என்றவுடன், 'செர்சிங்' என சொல்லி அடங்கியது.
நிமிடங்கள் கரைய ஆரம்பித்தது...'சே, இவர்களிடம், இதை சொல்லமல் விட்டது தப்போ? டாக்'ஐ அழைக்கலாமா?' என நெற்றி சுருக்கினான் விஜயன்.
30 நிமிடம் கழித்து 'சொ, மிஸ்டர்.விஜயன், டு யு ஸ்டில் வான்ட் டு கன்டினியூ?' என நக்கலாய் கேட்டான் க்வான்.
மறுப்புடன் தலையை ஆட்டி கொண்டு எழும் போது...
'எக்ஸ்பிரிமென்ட்' என்றது கம்ப்யுட்டர். அதன் ஸ்டேடுஸ் விளக்கு, சிவப்பில் இருந்து பச்சைக்கு மாறி இருந்தது.

---

சில வினாடி மௌனத்திற்கு பிறகு, 'கான் யு எக்ஸ்பளையின்' என்றான் க்வான்.
மீன்டும் தன் உனர்ச்சியில்லா குரலில் தொடங்கியது கம்ப்யுட்டர்.' நிங்கலெல்லாம் பரிசோதனை பொருள்கள். பல விதிகளுக்கு உட்பட்டு, பல காரணிகளை மாற்றும் ஓரு பெரிய பரிசோதனை சாலையில் எலிகள் நீங்கள். ஓவ்வோரு மனிதனும், ஒரு மாறுபட்ட பரிசோதனை பிரஜை.'

'டு யு மீன் ஃப்பேட்?' - ஃப்ரான்ஸில் இருந்து வந்த லௌவேன்.

'இல்லை, விதி டிடர்மினிஸ்டிக் - அது கிடையாது. இது ஒரு பரிசோதனை - இதன் முடிவு ஃப்ராபபிளிட்டிக்கு உட்பட்டது. ஆனால் விதியில் அது இல்லை. ஒரு வேரியபிள் மாறினால் நீங்கள் பல விதமான பதில் மாற்றங்களில் ஒன்றை கொடுக்கலாம். ஆனால் விதி எனப்படுவதில் உங்கள் பதிலும் தீர்மானிக்க படுகிறது'

'இதை நடத்துவது யார்? கடவுளா?' - விஜயன்.

'அதற்கு உங்கள் மொழியில் கடவுள் என பதில் கூறலாம். மொழிக்கு மொழி பதில் மாறுவது போல் தான் அதுவும். பொருள் ஒன்று, பரினாமங்கள் பல'

'எலிகளுக்கு இது தெரிந்து ஒத்துழைக்க மறுத்தால்?' ஐ மீன் வேண்டுமென்றெ பதில் மாற்றங்களை திருத்தி அமைத்தால்'

'இந்த பரிசொதனையில் முக்கிய பங்கு சாத்தியகூறு - ஃப்ராபபிளிட்டி. எப்போது இது பாதிக்க படுகிறதோ, அப்போது பரிசோதனையை மறுபடியும் புதிதாய் துவங்க வேண்டும். கட்டுக் கடங்காமல் வளரும் பாக்டிரீயம் கல்சரை அழிப்பது போல்.'

'அப்படியென்றால் இந்த இனம் அழிக்கபடுமா?' - குறுக்கிட்டான் லௌவேன்.

'தேவையில்லை. கல்சரை தாண்டும் பாக்டீரியம் மட்டுமெ நீங்கள் அழிப்பதில்லையா? வேலியை தாண்டி வரும் எலிகள் மட்டும் அழிக்கபடும். ஆனால் அதில் பக்கவிளைவாக சில அப்பாவி எலிகளும் கொல்லப்படலாம்'

'அப்படியென்றால்...'விஜயன் கேள்வியை முடிக்கும் முன்பு
'டமார்' என ஒரு சத்தம், எங்கும் புகை, நெருப்பு.

----

பின் குறிப்பு:
"ஐ.டி.சி எனப்படும் இன்ட்ர்நெஷ்னல் டேட்டா கன்சார்டியம் கட்டிடட்தில் வெடிவிபத்து. தீவிரவாதிகளின் செயலா? இல்லை மின்கசிவினால் தீ விபத்தா என ஆராயப்படுகிறது என போலிசார் கருத்து தெரிவித்தனர்..."
நியூஸ் சேனல் பட்டனை மாற்றியது ஒரு கை.

மூக்குக்கண்ணாடி

இந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம் தாத்தவோட சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு

கண்ணாடிக்கு பின்னாடி

பிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...
சாப்ட்வேர்- தொழில். சினிமா, புத்தகம்,எழுத்து - ஆர்வம்
இன்னும் தெரியனுமா?