ஆறிப்போன பின் ஆறு
ஆருப்பா அதுன்னு நீங்க கேக்கறது புரியுது. 40 நாட்களுக்கு முன்னே உங்க கிட்ட ஒரு தற்காலிக விடை பெற்றுப் போன நந்தனே தான். திரும்ப வந்தாச்சுல்ல!
நான் திரும்ப வந்துட்டேன்னு கேள்வி பட்டவுடனே வாங்கப்பா ஆட்டத்துக்குன்னு ஓடோடி வந்து அழைத்த அன்பு தோழன் குமரன் எண்ணம் அவர்களுக்கு இது :)
யாரும் கூப்புடலன்னா கூட நானே போட இருந்தேன்பா. மானத்த காப்பாத்திட்ட! வாழ்க நீ எம்மான்!
சரி மேட்டருக்கு வருவோம்...
பிடித்த ஆறு எண்கள் (ச்சும்மா வித்தியாசமா இருக்கடுமே)
1.0
2.1
3.2
4.5
5.9
6.99
பிடித்த ஆறு உணவு (நான் சைவ பிரானிப்பா)
1. பருப்பு உசிலி
2. சாம்பார் சாதம்
3. பீன்ஸ் கரேட் பொரியல்
4. கரேட் அல்வாவுடன் வெனிலா ஐஸ்
5. இட்லி சட்னி
6. பீன் பரிட்டோ
என்னொட ஆறு கொள்கைகள்1. முரண்கள் இருப்பதில்லை. ஆராய்ந்து பார்த்தால் முரணுக்கான காரணிகளில் ஒன்றேனும் பொய்யாய் இருக்கும்
2. எதை தருகிறோமோ அதே திரும்பி வரும்
3. முயற்சி செய்தால் முடியாதது இல்லை
4. கொள்கைகள் இல்லாமல் மனிதன் வாழ்வது மூடத்தனம்
5. உழைப்பு என்றுமே கூலி தரும். கூலி வரவில்லையெனில் உழைப்பு போதவில்லை
6. உன்னைவிட உயர்ந்தவன் யாருமில்லை, தாழ்ந்தவனும் யாருமில்லை.
நான் நெகிழ்ந்த ஆறு1. 11ம் வகுப்பின் போது எங்கள் தமிழ் ஐயா பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு சென்ற போது எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கதறியது.
2. life is beautiful படம் முதல் முறை பார்த்த போது
3. விளையாடி விழுந்து, மல்டிபுள் ப்ராக்சரோடு படுத்திருந்த போது என் அப்பாவும் அம்மாவும் என்னை பார்த்துக் கொண்ட நாட்கள்
4. என் 20 வருட கால நன்பர்களுடன் அடித்த கூத்தை சமிபத்தில் அசைப்போட்ட போது.
5. கல்லூரி கடைசி வருடத்தில் நெகிழ்ந்த ஒரு மாலைப் பொழுதில் எனக்கும் காதல் வந்த போது
6. அந்த நெகிழ்ச்சியின் விட்ட குறை கடந்த மாதம் முழுமையான போது ;)
வலைப்பூவின் ஆறு1.
தருமி : தாத்தாவின் எழுத்துக்களுக்கு குறிப்பாய் வாழ்கை அனுபவுங்களும், கடவுள் பற்றி பதிவுகள் நான் ரிபிட்டட் ஆடியன்ஸ்
2.
சசி : பாட புத்தகம் போல இவரது பதிவுகளை படிப்பவன்
3.
கைப்புள்ள : முதலில் இவர் கொஞ்ச நாள்ல காணம பொய்விடுவார், எவ்வளவு நாளைக்கு தான் வடிவேலை விச்சு ஓட்ட முடியும் என நினைத்தேன். ஆனாலும் மனுஷன் ஒரு 'cult status' க்கு வந்துட்டார்
4.
இளவஞ்சி : இனைய கலைவாணர். இதுக்கு மேல என்ன சொல்லா, கருத்தும் இருக்கும் காமெடியும் இருக்கும்
5.
குழலி : மிகவும் விவாதிக்க படும் ஒருவர். தனது கருத்துக்களை ஆவேசத்துடன் எதிர்க்கும் ஆற்றலுக்காகவே இந்த ஆறில் இடம் பிடித்தார்
6.
செல்வராஜ்.R : செல்வாவின் பதிவுகள் மனதை வருடி செல்லும் இசை. படிப்பவர்களின் இதயத்தையும் மூளையையும் ஒரு சேர தொடுபவர்
மிகப்பிடித்த ஆறு பாடல்கள்
1.
சட்டென கரைந்தது நெஞ்சம் - கன்னத்தில் முத்தமிட்டால். சின்ன பாடல் தனியாக mp3 இருந்தால் அனுப்புங்களேன்.
2.
உன்னைவிட - விருமாண்டி. ராஜாவின் சமிபத்திய மாஸ்டர் பீஸ். அருமையான திரைவடிவமும் கூட
3.
எவனோ ஒருவன் வாசிக்கிறான் - அலைபாயுதே. ஸ்வர்னலதாவின் குரலும். ரகுமானின் interludesம் சோகத்தை ஏக்கத்தை செவி வழியே ஏற்றுவதை என்னவென்று சொல்ல?
4.
மன்றம் வந்த தென்றலுக்கு - மௌன ராகம். மொட்டை, எப்படிப்பா?
5.
நலம் தானா? - தில்லான மோகனாம்பாள். இசை, பத்மினி, ஈஸ்ட்மேன் கலர், கொஞ்சம் அதிகமான நடிப்புடன் சிவாஜி, ஏதோ ஓன்னோ, இல்லை எல்லாமேவோ.
6.
கூமேர் போடி - bombay Jayshreeயின் வாத்ஸல்யம். தாலாட்டு கேட்டு தூங்கறது இருக்கே ஒரு சுகமுங்க...ரெஸ்ட்லெஸா, டிஸ்டர்ப்டா இருக்கும் போதெல்லாம் கேட்டா யாரோ உச்சிய வருடி விடற மாதிரி இருக்கும். ஒரு வார்த்தை புரியலைன்னா கூட மனசு அமைதியாயிடும்
நானே கடைசி, நான் யார கூப்பிட. என்னை மாதிரி எத்தன பேரு நம்பள யாரும் கூப்பிடலன்னு இருக்கீங்களோ எல்லாரும் வாங்க அய்யா, இந்த எடத்துல உங்க பேர போட்டுக்கோங்க...நானும் ஒரு ரவுண்ட் போய் வந்து யாராச்சும் மிச்சமிருந்த கூப்பிடுறேன்.