இப்படி 'குத்தி' காமிக்கக் கூடாது, ஆமா.
அடக் கடவுளே, இதுல உள்குத்து எதுவுமே இல்லைங்க!
பின்நவீனத்துவமுன்னு சொல்லிட்டுப் பழைய காலத்து மாடலே போட்டு இருக்கீங்க?
(ஆஹா சூப்பர். அப்படின்னு சொன்னா பின்பாட்டு பாடறேன்னு சொல்லுவாங்க அதான் இப்படி.)
நந்தன்,
பின் இருக்கு ஆனால் அதுல நவினத்துவத்தைக் காணமே??? :-)
பின்நவீனத்துவத்தைப் பற்றிய எனது கட்டுரை
ஊசிகளைப் பார்க்கும் போது
இவை தோன்றும் !
ஊசிகள், இவை
தைத்துச் சேர்ப்பதற்கு மட்டும் தானா ?
இவைகள்
சில ஊசிகள் (இதயத்தை) 'தைத்துக்'
கிழிப்பதுவும் உண்டு !
ஊசிகளின் கூர்மைகளில் நல்வழியும் இருந்து அதில்
மருந்தும் சென்றால்,
எந்த ஊசியினாலும்
அது வேறு ஏதோ பெரிய காயத்தை ஆற்றுவதாக இருக்கும் !
நந்தன் ! என்னால் முடிந்த 'பின்' நவீனத்துவம் கவி'தை' இது !
இயல்பாகவே நிமிர்ந்து நிற்கும் ஒன்றைக் கவிழ்க்க வைப்பதே பின்நவீனத்துவம் என்பதை இந்த இரு படங்களின் மூலம் அழகுற விளக்கியுள்ளீர்கள்!
புரிபவர்களுக்குப் புரிந்தால் சரி!!
'பின்'னிட்டீங்க ;)
இது பின் நவீனத்துவத்துக்கு அர்ப்பணமாக நந்தன் செய்த நர்த்தனம். பின்னா நர்த்தனம் செய்கிறது? பின்னால் காவியம் வரைந்து நம் முன்னால் தந்தவர் நந்தனர் (rhyme ஆகுது, ஹிஹி).
பின் நவீனத்துவம் அறியாதவர்கள், இந்த பின் தத்துபித்துவத்தை உணர மாட்டார்கள் (போடு, இது வரை பின்னூட்டம் போட்டவர்களுக்கு பின்குத்து:-) பதனிட்ட தோலில் பயணித்து வரும் மேல்மட்ட வாழ்க்கையை குத்தியும் காண்பிப்போம், அவருடன் உறவாடவும் செய்வோம். அது மட்டுமா, கழைக் கூத்தாடியாய் பாலன்ஸ் செய்து நிற்கும் இளமை, தளர்ந்து படுக்கும் முதுமை என்பதே அல்லவா வாழ்க்கை? முள் குத்தும் வாழ்க்கையோ, மேல்மட்ட வாழ்க்கையோ எதுவும் ஒன்று தானே!
அருமை கவுஜருக்கு போட்டு குத்துங்கப்பா.
ஏதோ என்னாலானது:-))
நன்றி நன்றி. ஏதோ கலைக்கு (யாரந்த கலையா?) என்னால் முடிந்த ஒரு உதவி செய்ய போய் அதற்கு இவ்வளவு பின்விளைவுகள்/ஆதரவுகள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை...
கவுஜ எல்லாம் போட்டு கலக்கிடீங்கப்பா...நாக்கு தழுதழுக்குது....
ஹூம் அப்படியும் பின் நவினத்துவம் எல்லாம் புரியாத சில ஜன்மங்க பின்னிருக்கு நவினம் எங்கேன்னு கேக்கறாங்க.
இவங்களோட பின்னனி என்னன்னு எனக்கு தெரியாதா? இதெல்லாம் ஆராயக்கூடாது அனுபவிக்கனும். யாராச்சும் சொல்லுங்கப்பா.
இன்னும் சில பின் வேலைகள் இருப்பதால் இப்போதைக்கு முடித்துக் கொள்கிறேன்