என்னங்க நந்தன்,
ரெண்டு வாரத்துலே 'கல்யாணம்'வச்சுக்கிட்டா நட்சத்திரமா ஆனீங்க? பாவங்க. உங்களைக் கற்பனை கனவு உலகத்துலே
சஞ்சரிக்க விடாம இங்கே இழுத்துப் போட்டுட்டாங்களா நம்ம மதி?
சரிங்க. உங்களுக்கு தமிழ்மணத்துலெ இருந்து 40 நாளைக்கு லீவு சாங்ஷன் செஞ்சாச்சு. சந்தோஷமாப் போயிட்டுக்
கல்யாணம் முடிச்சுட்டு வாங்க. கல்யாணப் போட்டோக்களையும் எங்களுக்கு அனுப்புங்க. நேரில் வரமுடியாட்டாலும் படத்துலேயாவது
பார்த்துக்கறோம்.
அருமையான மணவாழ்க்கை அமையணுமுன்னு மனமாற வாழ்த்துகின்றோம். உங்க ரெண்டு பேருக்கும் எங்கள் அன்பு.
நல்லா இருங்க.
இப்படிக்கு,
துளசி & கோபால்
advance vazhthukkal Nandhan.
Good week.
Continue giving more info abt information processing
நன்றி நன்மனம்,
விக்கிபீடியா நன்பர்களின் ஆலோசனைப் படி டெக்னிகல் சமாசாரங்களை அங்கு எழுதலாம் என்று இருக்கிறேன். முடியுமானால் இங்கேயும் மறு பதிவோ/சுட்டியோ இடுகிறேன்.
எதுவாயினும் இன்னும் 1 மாதம் கழித்து தான்.
நந்தன்,
அருனையான பல படைப்புக்களை நட்சத்திர வாரத்தில் வழங்கியிருந்தீர்கள்.
வாழ்த்துக்களும் நன்றிகளும். நட்சத்திர வாரம் முடிந்தாலும் நீங்கள் இன்னும் பல தரமான படைப்புக்களைத் தரவேண்டும் என் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
துளசி அக்கா,
ஆசிகளுக்கு நன்றி.
மதி, முன்னமே தான் கேட்டார்கள் நாந்தான் இந்த வாரத்தை தேர்ந்தெடுத்தேன். :)
முதல் பதிவுக்கும், கடைசி பதிவுக்கும் கரெக்டா வந்துடீங்க. பின்னுட்ட ராணியிடமே மத்த பதிவுகள் கவனம் பெறவில்லை என்பதில் சற்றே மனவருத்தம் தான். இன்னும் போகனும்...
நன்றி வெற்றி.
//நீங்கள் இன்னும் பல தரமான படைப்புக்களைத் தரவேண்டும் //
இதுல உள்குத்து ஏதும் இல்லையே? நானெல்லாம் டீயுப் லைட்டுங்க,
//பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்//
ஆகா இப்போ விளங்கிடுச்சு இதுலே என்னமோ இருக்கு. சரியா பாடற வரை விடாத பாகவதர் கதையா?
Jokes apart,
நன்றி வெற்றி. கண்டிப்பாய் முயற்சி செய்கிறேன்
நந்தன், மணவாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
அட, இது என்ன? கல்யாண மாப்பிள்ளை இப்படிக் 'கண்' கலங்கலாமா?
அதான் வந்து படிச்சுட்டு ஓடிக்கிட்டு இருந்தேன்.
ஊட்டம் போட முடியாம 'கல்யாண வேலைகள்'குமிஞ்சு போச்சுன்னு
ஒரேடியா அடிச்சு விட்டுறலாமா?:-)))))
(அக்காவோட திருமணநாள் ஜூன் 5. பலவருசங்களுக்கு முந்தி.
நம்ம குடும்பத்துக்கு ஜூன் மாசம் ராசியான மாசமப்பா)
காசி,
நன்றிகள்.
குமரன் எண்ணம். மிக்க நன்றி. பதிவு தவறாமல் படித்து பின்னூட்டம் இட்டு ஊக்கப் படுத்தியதற்கும் சேர்த்து
துளசி அக்கா,
கண் கலங்கல, கண்ணாடி தான் களங்கிடுச்சு ;)
//'கல்யாண வேலைகள்'குமிஞ்சு போச்சுன்னு ஒரேடியா அடிச்சு விட்டுறலாமா//
அது சரி, என் கல்யாணத்துக்கு வேலை செய்யாத ஒரே ஆளு நான் தான் போல. ஊர்ல எல்லாரும் பரபரப்பா இருக்க நான் இங்கெ நேரம் கடத்திகிட்டு இருக்கேன் .
June 5? Belated wishes.
//இதுல உள்குத்து ஏதும் இல்லையே? நானெல்லாம் டீயுப் லைட்டுங்க,//
அய்யோ! நந்தன் , எனக்கு உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பழக்கம் கிடையாது ஜயா. உண்மையிலேயே என் மனதில் இருந்து வந்த உண்மையான வார்த்தைகள்தான்.
நந்தன், முன்னைய பின்னூட்டத்தில் திருமண வாழ்த்துச் சொல்ல மறந்துவிட்டேன்.
உங்கள் மண வாழ்வில் பல் வளமும் பெற்று நலமுடன் வாழ உங்களுக்கும் உங்கள் வருங்கால துணைவியாருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் நந்தன். இனிய மணவிழாவிற்கும் ஒரு வாரம் தமிழ்மண விண்மீனாயிருந்ததற்கும்...
மணவிழா காண இருக்கும் இருவருக்கும் ஐயனின் அன்பும் அறனும் உடைத்தாய இல்வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள். ஒருமாதம் கழித்து புத்துயிருடன் மீண்டும் மீண்டும் கலக்குங்க !
நட்சத்திரக் கிழமைக்கு நன்றியும் வாழ்த்தும்.
என் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் நந்தன்...
திருமண வாழ்த்துக்கள்... துளசி அக்காவே லீவ் கொடுத்துட்டாங்களே.. நல்லா ஓய்வெடுங்க.. :).. மீண்டும் சீக்கிரம் வாங்க, கண்ணாடியோட..
வெற்றி நான் சும்மா விளையாடுனேங்க. சீரியஸா எடுத்துக்காதீங்க.
வாழ்த்துக்கு மிக்க நன்றி,
குமரன், வசந்தன் - மிக்க நன்றி. தவறாமல் வந்து வாசித்தற்கும்
மனியன், மது.
நன்றிகள்
பொன்ஸ், நன்றி. டீச்சர் லீவு கொடுத்தாச்சுனா அப்பீலே கிடையாது.
இந்த புதன் கிளம்புறேன்.
இனிய திருமண விழா கண்டிருப்பீர்கள். வரப்போகும் இல்வாழ்க்கையில் நலம் பலவும் பெற்று பல்லாண்டி இனிய வாழ்க்கை காண வாழ்த்துக்கள்.
நன்றி தருமி. ஒரு வழியா வீடெல்லாம் செட்டில் ஆகியாயிற்று. இதோ இனி மீண்டும் தொடர்ந்து தமிழ்மணத்தில் உலாவ வேண்டியது தான்
மோகம் முப்பது நாள் முடிஞ்சி போச்சா .? திடீர்னு வலைப் பக்கம்.
காதல் வலை மடங்கி இருக்கும் கொஞ்சம்
கணனியிலும் வலைவிரிப்போம் என்றா ? :)))
செவிக்கு உணவில்லாத போது ... அந்த பாணியில் எழுத நெனெச்சேன் கொஞ்சம் செதப்பலாகிடுச்சி
செட்டில் ஆகிவிட்டீர்களா? வாங்க வாங்க மீண்டும் வந்து கலக்குங்க என்று உங்களை அன்புடன் அழைக்கிறேன்....