கடைசியா போட்டு பார்த்தது

பழைய கண்ணாடிகள்

மத்தவங்க கண்ணாடி

If you have problems in viewing this page try this, in the menu bar goto View>encoding>select Unicode(UTF-8)

இன்னுமொரு காதல் கதை.

அவள் அதிர்ந்து பேசுவதே கிடையாது. அம்மா அப்பா என வீடே உலகமாகி போனவள். அவன் சத்தமில்லாமல் பேசியது கிடையாது. அபூர்வமாய் வீட்டில் இருக்கும் நேரங்களில் கூட புத்தகம் சினிமா தூக்கம் என்றிருந்தவன்.

அவளை சுற்றி ஒரு கூட்டம் இருந்தது. அவளிடம் தம் பிரச்சனைகளை சொல்ல. அவள் பெரிதாய் ஏதும் செய்ததில்லை, கேட்பதை தவிர. அவனை சுற்றியும் ஒரு கூட்டமிருந்தது, விவாதம் செய்ய, கடவுள் முதற்கொண்டு.

இருவருக்குள்ளும் ஒரு வெற்றிடம் இருந்தது. தனது டாம் டூம் சத்ததின் குவியமாய் அவள் மௌனம் இருப்பதை உணர்ந்தான். அவளோ தனது மௌனத்தை சுற்றிவரும் ஓசையாய் அவன் பேச்சை உணர்ந்தாள்.

அவர்களுக்கு மிகப் பிடித்த காதல் கதை ஒன்றிருந்தது. அவர்களுடையது. வெவ்வேறு ஊர்களில் 4 வருடம் பிரிந்திருந்த பின்னரும் அவர்களுக்கு பிடித்த காதல் கதை மாறவேயில்லை.

********

அப்பா...
என்னடா?


ஹூம் ஒன்னுமில்ல...

ரேண்டு நாளா போன் பேசும் போதெல்லாம் இப்படி தயங்கற, என்ன விஷயம்?

நான் போன தடவ வந்திருந்த போது சொன்னென்ல...

என்னது?

அவளை பத்தி...அவளுக்கு..வீட்ல....

டேய், நீ விளையாட்றன்னுல்ல நினைச்சேன். உண்மையாவா?

ஹையோ அப்பா, இதெல்லாம் விளையாடுவாங்களா, இப்பவிட்டா அவள ஓரே அடியா விட்டுட வேண்டியது தான்....

ஹூம். அம்மாக்கு தெரியுமா? அக்காங்களுக்கு?

யாருக்கும் தெரியாது...நீதான்...

சரி பொன்னு நம்ம சாதியா?

அப்பா! அது எதுக்கு

இல்லையா? அப்போ என்ன சாதி?

-----

செ சொல்லுடா இதெல்லாம் உன் பசங்க கல்யாணத்தப்ப வச்சிக்கோ

சாதி என்னனு நான் கேட்கல. தெரியாது. என பொய் சொன்னான்

சரி ஊரு என்ன?

மதுர.


அப்போ ****களா இருக்கலாம். அவர் சரியாய் சொன்னபோது வியந்தான் அனுபவமில்லையா.

சரி எனக்கும் சாதியெல்லாம் வேண்டாம். ஆனா அம்மாவும், அக்காகளும் மாமாக்களும் ஒத்துகனும். நான் பேசறேன்

தாங்கஸ் பா. எனக்கு பாரதிய காமிச்சதே நீதானே, அதான் கொஞ்சம் குழம்பிட்டேன்.

ஆனா இதுக்கு கொஞ்சம் நேரமாகும். அதுவரைக்கும் நீ பொறுமையாய் இரு.
கண்டிப்பா...

அவங்க வீட்ல சொல்லியாச்சா?

இந்நேரத்துக்கு சொல்லியிருக்கனும்...

மதுரன்னு வேற சொல்றே, நான் போய் பேசும் ஏதாவது கோவம் வந்து அருவாள்ள போட்டுட மாட்டங்களே?

செ செ அப்படியெல்லம் இல்லப்பா, அவங்க அப்பாவும் ரொம்ப நல்லமாதிரி...

சரி, சரி, உங்க அம்மா வரா, இதை தவிர வேற எதாவது பேசு.
என போனை கோயிலிருந்து திரும்பி வந்த அம்மாவிடம் கொடுத்தார்.
******

மூன்றாவது நாள் அவன் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது செல் போன் அடித்தது.

ம்ம், சொல்லுக்கா.

வேலைல இருக்கியா?

இல்லை இல்லை வீட்டுக்கு கெளம்புறேன்

என்னடா அப்பா தான் உனக்கு பெஸ்ட் ப்ரெண்டா?

....... ஏன் கேட்கிறாள் என அவனுக்கு புரிந்துவிட்டது.

அவரோட வயசுல சின்னவங்க நாங்க, நாங்க புரிஞ்சுக்க மாட்டோமா?

அப்படியில்ல...

என்ன அப்படியில்ல. அவரு அம்மாகிட்ட பேசி வாங்கி கட்டிடு இருக்கார். இந்த சனி ஞாயிறு இங்க வா.

இந்த வீக்கெண்டா?. டிக்கெட் கிடைக்கனுமே?

அதெல்லாம் பார்த்தா முடியுமா? எப்படியாச்சும் வா. அப்பா அம்மா ஒத்துகலைன்னா ஒன்னுமில்லன்னு கை விரிச்சுட்டார்.

******

சனிக்கிழமை காலை வீட்டிலிருந்தான். அம்மா செய்திருந்த ஆப்பம் பால் சாப்பிட்டு விட்டு, Pogoவில் ஹாரி பாட்டர் பார்த்துக் கொண்டிருந்தான்.

ரகசியமாய் அவனிடம் வந்த அப்பா,
நீ வந்தது எதுக்கு சினிமா பாக்கவா? போடா போய் பேசு.

அதற்குள் அவன் அக்காகளும் வீட்டிற்கு வந்து விட. அவனை பிடித்து ரூமுக்குள் தள்ளினார்கள். உள்ளே போன பின்னும் ஒன்றுமே பேசாமல் நின்றிருந்தான்.

பின்னாலே வந்துவிட்ட அப்பாவும் அக்காகளும் ஆரம்பித்தனர். என்ன? ஏது? எப்படி? எல்லாம் நடந்தது. கடைசியாய் 'இதெல்லாம் சரி. ஆனா ஜாதகம் ஒத்துப் போகனும்' என்று முடித்தார் அவன் அம்மா

'ஆமாம் ஆமாம் அது சரி' - அப்பா

இதென்னப்பா புது கதை. என்பது போல அப்பாவைப் பார்த்தான் அவன்.

'பின்ன என்ன, அம்மா சொல்ற மாதிரி ஜாதகம் பொருந்தனும், என்ன சொல்றது....' சற்றே நிறுத்திவிட்டு 'என்னை நம்புவேன்னா ஒன்னு சொல்லவா. நான் பார்த்துட்டேன் 10ம் பொருந்து தாம்'

ஆச்சர்யத்துடன் அவனை திரும்பி பார்த்த அம்மாவிடம்.
ஏனக்கு இதப்பத்தி ஒன்னும் தெரியாது மா என்று கை தூக்கினான்.

அவனுக்கே அது ஆச்சர்யம். அப்பா போய் சொல்கிறாரோ என நினைத்தான்.
பிறகு அவர் சொல்ல சொல்ல தான் புரிந்தது. அவள் வீட்டில் பேசி, ஜாதகமெல்லாம் பார்த்து நிறையவே கிரவுண்ட் வோர்க் செய்திருந்தார்.


வேணும்னா நீயும் நானும் கூட போய் இன்னொரு தரம் பார்க்கலாம். அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.
***********

அடுத்த நாள் காலையில் மிகுந்த பரபரப்பாயிருந்தது வீடு. அவசரமாய் எங்கேயோ கிளம்புவது போலிருந்தனர். எல்லாரையும் அதட்டி கிளப்பிக் கொண்டிருந்தார் அவன் அம்மா.

எங்கெம்மா இவ்வளவு பரபரப்பா?

மருமகளை பார்க்க போறேன். சிரித்துவிட்டு போனார் அம்மா.

நேத்து அப்படி பேசியவங்களா இப்போ...ஒருவேளை அப்பா/அக்கா எல்லாரும் ஒத்து கொண்டு இவனுக்கு ஸ்டாரங்காக அனுமதி கொடுக்க அவர் ஆடிய நாடகமோ? இருக்கலாம்.
**********

இதெல்லாம் முடிந்து எட்டு மாதம் ஆயிற்று, இதோ ஜூன் 8 அவனுக்கு திருமணம். எல்லாரும் கண்டிப்பாய் வந்துடுங்க.
Please click on the image to view in a separate window

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 42 (show/hide)

42 Comments:

Blogger பொன்ஸ்~~Poorna said...

சொந்தக் கதையா?.. நல்லாவே எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்.. :)

'இன்னுமொரு'ன்னு தலைப்பு வச்சிருக்கீங்க? கல்யாணத்துக்கப்புறம் பார்த்துட்டு நல்லா வாங்கப் போறாங்க :)

5/20/2006 11:24 PM  
Blogger நந்தன் | Nandhan said...

சொந்தக் கதையே தான்.
நன்றி பொன்ஸ்

இன்னுமொரு - உலக காதலின் வரிசையில் என அர்த்தம் கொள்ளவு,

கல்யானத்துக்கப்புறம்? இப்பவேங்க, முதல் வாசகி ;)

5/20/2006 11:28 PM  
Blogger மதி கந்தசாமி (Mathy) said...

நல்லா கவிதை மாதிரி சொல்லிடீங்க.

once more. Congrats Nandhan

5/20/2006 11:30 PM  
Blogger நந்தன் | Nandhan said...

:)
நன்றி மதி.

கொஞ்ச நாளா ஆளை கானோம்?

5/20/2006 11:37 PM  
Blogger Prabu Raja said...

கதைன்னே நினசசேன். புது மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள்.

5/20/2006 11:44 PM  
Blogger நாமக்கல் சிபி said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நந்தன்.

5/20/2006 11:46 PM  
Anonymous Anonymous said...

தூள் கிளப்புங்க தலை.....

கல்யாணத்துக்கப்புறம் அமெரிக்க வாசமா இல்ல....
நம்ம பேட்டைல 'மட்லாட' போறீங்களா?

5/20/2006 11:54 PM  
Blogger Vaa.Manikandan said...

சொல்ல மறந்துட்டேன்....

வாழ்த்துக்கள்.....

நட்சத்திர வாரத்தில், முடிக்கும் போது 'நச்'னு முடிச்சிருக்கீங்க...

வாழ்த்துக்கள்....(இந்த வாழ்த்து நட்சத்திரத்துக்கான வாழ்த்து, முந்தின வாழ்த்து திருமணத்துக்கான வாழ்த்து)

5/20/2006 11:57 PM  
Anonymous Guru said...

வாழ்கையில் சில சம்பவங்கள் கதையை விட சுவாரஸ்யமானவை என்பதற்கு உங்கள் கதை ஒரு உதாரணம்.திருமண நல்வாழ்த்துக்கள்

குரு

5/21/2006 12:10 AM  
Blogger அருட்பெருங்கோ said...

இந்த வார நட்சத்திரத்துக்கு ஒரு நிலா கிடைச்சாச்சுனு சொல்லுங்க :)

வாழ்த்துக்கள் நந்தன்!!!

அன்புடன்,
அருள்.

5/21/2006 12:14 AM  
Blogger Kuppusamy Chellamuthu said...

ஊரக்கூட்டி கல்யாணம் தான் பண்ணுவாங்க.. நீங்க கதையே சொல்லிடீங்க. இனிய மண வாழ்க்கைக்கு வாழ்த்துகள்....

- குப்புசாமி செல்லமுத்து

5/21/2006 1:35 AM  
Blogger Krishna said...

நலமுடன் வாழ வாழ்த்துக்கள் நந்தா.

அம்மாக்கள் அப்படித்தான், எதையெதை, எப்படி தன் குஞ்சுக்கு செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவளை கொஞ்சம் அனுசரித்து நடந்து கொண்டால், மருமகள் மகாராணியாய் வாழலாம். உம் வீட்டில், உம் இணைவி அவ்வாறு வாழ வாழ்த்துக்கள்.

கிட்டத்தட்ட இதே மாதிரி, என்ன அம்மாயிடத்தில் அப்பா, என் கதை...

5/21/2006 1:51 AM  
Blogger நந்தன் | Nandhan said...

பிரபு, சிபி. மிக்க நன்றி. எல்லாருடைய வாழ்க்கையும் கதை தானுங்களே.

5/21/2006 6:55 AM  
Blogger நந்தன் | Nandhan said...

அனானி. நன்றி தல? நானா? ஹி ஹி ;)
நான் இங்கெ வந்த வேலை இன்னும் முடியலங்க. அதனால இன்னும் கொஞ்ச நாள் மாட்லாட முடியாது.

5/21/2006 6:57 AM  
Blogger நந்தன் | Nandhan said...

மணி,

"'நச்'னு முடிச்சிருக்கீங்க..." ;)
நன்றி, நன்றி. இரண்டுக்கும்.

5/21/2006 7:05 AM  
Blogger செல்வராஜ் (R.Selvaraj) said...

வாழ்த்துக்கள் நந்தன்! அருமையான கதையான வாழ்க்கை. மேலும் பல கதைகள் சொல்ல வாய்ப்புக்கள் பெருகட்டும்.

5/21/2006 7:08 AM  
Blogger Ram said...

வாழ்த்துக்கள் நந்தா.

ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.

5/21/2006 7:17 AM  
Blogger நந்தன் | Nandhan said...

குரு, கதையெல்லாம் வாழ்க்கையிருந்து தானே வருது ;). வாழ்த்துக்கு நன்றி.

அருபெருங்கோ,
நன்றிங்க. சுந்தர் 'நந்தா நீ என் நிலா' என திங்கள் கிழமையே பதிவு போட்டாச்சு! ;)

5/21/2006 7:28 AM  
Blogger நந்தன் | Nandhan said...

குப்புசாமி மிக்க நன்றி. கதை கதையாம் கல்யாணமாம் ;)

5/21/2006 7:28 AM  
Blogger நந்தன் | Nandhan said...

Krishan
அங்கேயுமா? ;) பொன்ஸ் 'இன்னுமொரு'ன்னு ஏன் தலைப்பு வச்சிங்க என கேட்டார். இதனால தான்.

நன்றி. கிருஷ்னா.

5/21/2006 7:30 AM  
Blogger நந்தன் | Nandhan said...

ராம், செல்வா. வாழ்த்துக்கு நன்றி.

5/21/2006 7:35 AM  
Blogger மணியன் said...

ரம்யாவிற்கும் நந்தனுக்கும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ நல்வாழ்த்துக்கள்!
இனிய வாரத்திற்கு கல்யாண காட்சியுடன் சுபம் போட்டிருக்கிறீர்கள்!
மங்களம் உண்டாகட்டும்.

5/21/2006 10:49 AM  
Anonymous Anonymous said...

vaazhththukkal Nandha. Kaathaliththavalai karam pidikka koduthu vaithirukka vendum. vaazhka vaLamudan. ungkaL kaathalumthaan.

5/21/2006 1:42 PM  
Blogger டிசே தமிழன் said...

இனிதாய் இல்லற வாழ்வு மலர வாழ்த்துக்கள்!

5/21/2006 3:45 PM  
Blogger கோவி.கண்ணன் said...

நந்தன் நல்வாழ்த்துக்கள்.

5/21/2006 5:33 PM  
Blogger thoughda said...

Good Postings through out the week! Great Job!

And my hearty wishes on your wedding.

5/21/2006 7:46 PM  
Blogger Ganesh said...

Nandha...
Vazthukkal...and the narration was really good da ;-) infact un vaayala kettatha vida ithu sumaru than ...i mean all the expressions,giggles that came along....
Ganesh

5/21/2006 9:02 PM  
Blogger Ganesh said...

Nandha...
ur photo seems a bit dark da...enakkey konjam kastama erukku identify panna....and there seems to be a problem with the browser settings here..comments didnt get updated and somehow i landed posting the message twice ;-)
Ganesh

5/21/2006 9:06 PM  
Blogger நந்தன் | Nandhan said...

மனியன் ஆசிக்கு நன்றி.
சுபம் அடுத்து, இது குரூப் போட்டோ சீன்.

5/21/2006 9:48 PM  
Blogger நந்தன் | Nandhan said...

அனானி, மிக்க நன்றி.

பெயரை விட்டு போயிருக்கலாமே..
பெயர் சொல்லி கல்யாணத்துக்கு கூப்பிட்ட மாதிரி இருக்கும் எனக்கு

5/21/2006 9:50 PM  
Blogger நந்தன் | Nandhan said...

டிசே, Govikannan

வாழ்த்துகளுக்கு நன்றி,

5/21/2006 9:51 PM  
Blogger நந்தன் | Nandhan said...

thougda,

thanks for your wishes.
You got a great name buddy.

5/21/2006 9:52 PM  
Blogger நந்தன் | Nandhan said...

Ganesh.

Thanks machi. Need to improve my writing a lot, i guess.

Photo dark, looks ok in my m/c. Thats ok, i will change it soon.

btw, i have deleted the reduntant comments

5/21/2006 9:57 PM  
Blogger செந்தில் குமரன் said...

இனிது இனிது மானிடராய் பிறத்தல் இனிது.

அதிலும் இனிது மானிடப் பிறவியில் காதல் கொள்வது.

அதனிலும் இனிது காதல் கொண்ட பெண்ணை மணம் முடிப்பது.

வாழ்த்துக்கள்.

5/21/2006 10:06 PM  
Anonymous Anonymous said...

Indha Mkannadi pakkathula First time en comments post pannaren..To Introduce Myself In short.. Andha Innum oru kaadhal Kadhaila vara Nandhaavoda Heroine ennodaya Best Friend...We ve known eachother for almost 8 yrs now...We ve been with each other through all our happiness and bad times...Nandhan Sir (Nandha ..as i know him ) engaloda kooda padichavaru thaan...

I am so happy to see the story so beautifully written Nandha....Infact I think Unga rendu per appa amma vum indha kadhaila hero heroine thaan...They ve given respect to ur feelings and ve really made things happen ..Thats Amazingly Gr8.. Though I know it would not ve been possible if not for the detemination you ppl had.. Congrats to u and Ramya...And all my Prayers for ur "Happily Ever After " life...

Aarthi...

5/21/2006 10:18 PM  
Blogger Gopalan Ramasubbu said...

Wow!! wonderful narration Nandha.Congrats on your Marriage.

5/21/2006 11:29 PM  
Blogger Vaa.Manikandan said...

thala...anany naanthaan...name miss agiduchchu!

5/22/2006 1:32 AM  
Blogger நந்தன் | Nandhan said...

கோபாலன், குமரன் எண்ணம், ஆர்த்தி,

வாழ்த்துக்கு நன்றி.

Aarthi, you are right.Our parents were really good to us. Without them we are no where.

5/22/2006 9:11 PM  
Blogger Babble said...

உங்களுக்கும் ரம்யாவுக்கும் வாழ்த்துக்கள் நந்தன். எல்லாருக்கும் உங்கள மாதிரி பெற்றொர் கிடைக்கனும் :)

5/23/2006 3:48 PM  
Anonymous Anonymous said...

RAIN GOES TO MINGLE WITH MUDDY.MARVELOUS!!My sincere greetings.Shall I attend the function?(Iam a retired persion,quite new to browsing&tamil web blogs.)

5/25/2006 3:09 AM  
Blogger நந்தன் | Nandhan said...

Yes Mr.Anonymus, you can wery well attend the marriage, but how will I recognise you with out you name? ;)I understand you are new to this...may be you can contact me through mail. check my profile for details.

By the way, that poem is a lift off..hava acknowledged the authors ;)

5/28/2006 10:02 AM  
Blogger perazhagi said...

a bit late. but very nice entry. best wishes.

10/17/2006 3:08 AM  

Post a Comment

<< Home

மூக்குக்கண்ணாடி

இந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம் தாத்தவோட சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு

கண்ணாடிக்கு பின்னாடி

பிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...
சாப்ட்வேர்- தொழில். சினிமா, புத்தகம்,எழுத்து - ஆர்வம்
இன்னும் தெரியனுமா?