சல்ஹவுதீன் ( صلاح الدين يوسف بن ايوب )
Kingdom of heaven என்ற ஒரு திரைப்படத்தை பார்த்து..அதில் நடந்த விஷயங்களின் பின்னனி பற்றி ஆராய்ந்து பார்க்க போனதில் தான் அல் மாலிக் அல் நசீர் சல்ஹவுதீன் யூசுப் இபின் அயூப் பற்றி அறிய முடிந்தது.
கி.பி. 1100களில், ஜெருசலேம் ஒரு ரத்த பூமியாய் இருந்தது. போப்பின் கட்டளைப்படி, புனித பூமியான ஜெருசலேமை கிறிஸ்துவ ஆட்சியின் கீழ்
கொண்டு வந்த முதலாவது புனிதப் போர் (1st Crusade AD 1095). போரின் முடிவில், ஜெருசலேமை கைப்பற்றிய கிறிஸ்துவ படை, அந்நகரின் முஸ்லிம்களை கொன்று குவித்து, கிறிஸ்துவ அரசை நிறுவியது..
கிட்டதட்ட அதே காலகட்டத்தில், எகிப்த்தின் படை தளபதியாய் இருந்து, தனது திறமையாலும், வீரத்தினாலும் மேலே வந்த சல்ஹவுதீன் மிக விரைவிலேயே எகிப்த்தை பாத்திமித்(Fatmid) சுல்தானுக்காக் ஆண்டார். அல் மாலிக் அல் நசீர் (அரசனின் காவலன்) என பட்டம் பெற்றார்.
பாத்திமித்'தின் மறைவுக்கு பிறகு, எகிப்தின் சுல்தானாக ஆட்சி புரிய ஆரம்பித்தார் (AD 1174). எகிப்ததை ஆதாரமாய் வைத்து சிரியா, டமாஸ்கஸ் என தனது சாம்ராஜ்யத்தை பரப்ப துவங்கினார். இராக்கின் குர்த் இனத்தை சேர்ந்த சல்ஹாவுதீன், அயுப்புதீன் சாம்ராஜியத்தை ஆரம்பித்து வைத்தார்.
ஜெருசலமத்தின் கிறிஸ்துவ அரசின் மிது ஒரே ஒரு முறை போரிட்டு , அதில் தோல்வியை சந்தித்து பின் வாங்கினார். மீண்டும் போருக்கு போகாமல், அயுப்புதீன் சாம்ராஜ்யாத்தை -குறிப்பாய் எகிப்த்தை, பலப்படுத்துவதில் கவனம் செலுத்தினார். கிட்டத்தட்ட ஜெருசலமை சுற்றி தனது கட்டுப்பாட்டை நிறுவினாலும், ஜெருசலமை கைபற்ற வேண்டும் என வெறிக் கொண்டு அலையவில்லை.
இஸ்லாமின் பல பிரிவுகளை ஒன்று சேர்த்து- மதம், வியாபாரம், கலாசாரம் என எகிப்த்தின் தலைநகர் கெய்ரோ (Cairo)வை, அக்காலகட்டத்தின் முக்கியமான நகரமாக்கினார். டமாஸ்கஸில் தனது ரானுவ பலத்தை பலமடங்கு பெருக்கினார். எகிப்த்தின் புகழ் பெற்ற கோட்டை (Citadel) சல்ஹவுதீனால் கட்டப்பட்டதாகும். மருத்துவமனை, பள்ளிகள் என மக்களுக்கான அடிப்படை வசதிகளும், முறைபடுத்தபட்ட வரி வசுல் என எகிப்த் மிகவும் முன்னேற சல்ஹவுதீன் முக்கிய காரணமானார்.
சல்ஹவுதீனின் இப்பெரும் வளர்ச்சி ஜெருசலமின் கிறிஸ்துவ அரசை அச்சத்திலேயே வைத்திருந்தது.
ஜெருசலமின் அப்போதைய அரசன் பால்ட்வீன்
(Baldwin IV) சல்ஹவுதீனிடம் அமைதியை நாட, அதை மதித்து ஜெருசலமை தாக்காமல் இருந்தார். பால்ட்வீனனின் தொழுநோயை குனப்படுத்த தனது அரசவை மருத்துவர்களை அனுப்பி வைத்தார். ஒப்பந்ததின் படி ஜெருசலத்தின் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு அளித்தான் பால்ட்வீன்.
பால்ட்வீனின் மறைவுக்கு பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற கீ டீ லூசியான் (Guy De Lusignan) முஸ்லீம் வனிகர்களை/பிராயானிகளை தாக்கி மீண்டும் சல்ஹவுதீனை சீண்டிப் பார்க்க ஆரம்பித்தான். டமாஸ்கஸ் மீது படையெடுத்த கீ யின் ஜெருசல கிறிஸ்துவ புனிதப்படை சல்ஹவுதீனால் ஹாத்தீன்லில் (Battle of Hattin, AD 1187) நிர்மூலமாக்க பட்டது. அதை தொடர்ந்து அரசன் இல்லாத ஜெருசலமை கைப்பற்ற முன்னேறினார் சல்ஹவுதீன்.
ஜெருசலத்தின் கீழ் இருந்த ஒரு குறுநில மன்னன் பாலியன் (Balian, Baron of Iblein) தனது குடும்பத்தை பாதுகாப்பாக பிரான்ஸ் அனுப்ப அனுமதி கோரியதினால் அவனை ஒரே ஒரு நாள் மட்டும் ஜெருசலம் கோட்டைக்குள் செல்ல அனுப்ப சம்மதித்து வாக்குறுதி பேற்றான் சல்ஹவுதீன்.
அங்கே சென்றப்பின் பாலியன் ஜெருசலம் கோட்டையை சல்ஹவுதீனுக்கு எதிராய் காக்க நிர்பந்த்திக்க பட்டான். இதை அறிந்த சல்ஹவுதீன் தனக்கு பாலியன் அளித்த வாக்குறுதியில் இருந்து அவனை விடுவித்தார். தொடர்ந்து முன்னேறி, ஜெருசலமை முற்றுகையிட்டார், சில நாட்களுக்கு பின்னர் பாலியனின் சமாதான முறையிட்டு ஜெருசலமை சல்ஹவுதீனிடம் ஒப்படைத்தான் (Surrender of Jerusalem, ஆஆD 1187).
அமைதியை நாடிய சல்ஹாவுதீனும், அந்நகரில் உள்ள கிறிஸ்துவர்களை பாதுகாப்பாக ஐரோப்பாவிற்கு கப்பல் ஏற்றிவிட்டார். ஹாத்தினில் சிறையெடுத்த கீ டீ லூசியானையும் பாதுகாப்பாய் விடுவித்தார்.
அதன் பின்னர் கிறிஸ்துவர்களால் ஜெருசலமை மீண்டும் கைப்பற்றவே முடியவில்லை. மூன்றாவது புனிதப்போரின் (3rd Crusade AD 1191) போது காயமுற்ற கிறிஸ்துவ அரசர்களுக்கு தமது மருத்துவரை அனுப்பி வைத்தியம் பார்த்தார், அவ்வரசர்கள் இழந்த குதிரைக்களுக்கு மாற்றாய் தமது குதிரைகளைக்கூட வழங்கினார்.
மூன்றாவது புனிதப் போரின் முடிவிலும் ஜெருசலமை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த சல்ஹவுதீன், அமைதியை நாடி
அந்நகரை கிறிஸ்துவ யாத்தீர்களுக்கும் திறந்துவிட்டார்.
மிக வலிமைமிக்க ஒரு எதிரியாய் இருந்த போதிலும், தனது மனிதாபிமான நடவடிக்கைகளால் கிறிஸ்துவர்களால் பெரிதும் போற்ற பெற்ற சல்ஹவுதீன் மார்ச் 4, 1193ல் நோய்வாய் பட்டு இறந்தார். அவரின் இறுதி சடங்குகளை நிறைவேற்ற கூட அவரிடம் போதுமான சொந்த சேமிப்பில்லை...தான் வென்ற அனைத்தையும் நாட்டுக்காக கொடுத்திருந்தார்.
மதத்தின் பேயரால் மிகக் கோரமான் யுத்தங்களை உலகம் சந்திதுக் கொண்டிருந்த காலகட்டத்தில் வாழ்ந்திருந்தாலும், சல்ஹவுதீன் ஒரு Peaceful
co-existenceஐ நம்பியது மிகவும் ஆச்சர்யம் அளிக்கிறது.
Unlike most of us who retort to this option when we are weak, Saladin pursued it even when was more powerful than most of his counterparts. His acts of chivlary and valour stand as lessons to people even now.முன்னர் குறிப்பிட்ட திரைப்படம் வரலாற்றை சற்று திரித்து கூறியிருந்தாலும், சல்ஹதினை பொறுத்தவரை அவ்வளவு வரலாற்று தவறுகள் செய்யவில்லை. படத்தின் நாயகனின் ஒரு வசனம் கீழே...2000 ஆண்டுகளுக்கு பின்னும் உலகம் இன்னும் மாறவில்லை
"None of us took this city from muslim, no muslim of the great army coming against us where born when this city was took by us. We fight over an offence we did not commit, against those who were not alive to be offended. What is Jerusalem, your holy places lie over the jewish
temples that the Romans pulled down, the muslim holy places lie over yours. Which is more holy? The Wall? The mosque? The Speluchre? Who has claim? No one has claim, All have claim. We defend this city, not for the stones, but for the people who live in it"
சல்ஹதீன் பற்றி
மேலும்