சிதம்பரம் தாப்பரை சும்மா பிச்சு உதறிட்டார்.
/He met his match/ - True.
அடுத்த முறை சிதம்பரத்தை பேட்டி காண வரும் போது சும்மா 2 கேள்விகளை மட்டும் எடுத்துக்கிட்டு வராம தாப்பர் நிறைய தகவல்களை படிச்சிட்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம். :-)
கரன் தனக்குத் தானே அமைத்துக் கொண்ட பேட்டி அமைப்பை தொடர்ந்து சரியாகவே செய்து வருகிறார் என்று நினைக்கிறேன். அவர் நேரடியாக கேட்கும் கேள்விகள் பார்வையாளர்கள் பலரின் மனதிலும் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிற கேள்விகள்தான். கரன் தப்பாருக்கு சரியாக பதில் சொல்வதின் மூலம் பேட்டி காணப்படும் பிரமுகர் மக்கள் பலரின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமே. முதல்வன் படத்தில் முதல்வரிடம் கேட்கப்படும் கேள்விகள் இந்த வகையில் வர வாய்ப்பிருக்கிறதே. போப் தேர்வுக்கு வைக்கப்படும் DA தேர்வு தேவையானதென்றால், பொது வாழ்வின் பிரமுகர்களுக்கும் அது போன்றவை தேவைதானெ.
குறும்பன், ஓகை. நன்றி.
கரனின் கேள்விகளை நான் தவறு எனக் குறிப்பிடவில்லை...அவருடைய அந்த Arronganceஐ தான்...மக்களுக்காக கேள்வி கேட்கும் ஒருவர் அந்த பதிலுக்காக காத்திராது தான் தவறு. பிரச்சனைகளை அலசுவதை விட்டு தனது 'பிம்பத்தை' நிலை நாட்ட முயற்சிக்கும் பாங்கை....
தான் நினைக்கும் பதிலைச் சொல்லும் வரை பேட்டியெடுக்கப்படுபவரை விடுவதில்லை என்ற ரீதியில் நேர்காணல் செய்திருக்கிறார் கரண் தாப்பர். Fox Newsன் Bill O'Reilly கிட்டத்தட்ட இதே ரகம். இந்த ஒரு பேட்டிக்காக அரசாங்க முடிவுகளைச் சொல்லிவிடமுடியாது, முடிவுகளுக்கான ஆதாரங்கள் தொகுக்கப்பட்டு பாராளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் அளிக்கப்படும், கேபினட்டில் விவாதிக்கப்படும் என்று பலதடவை சிதம்பரம் சொல்லியும் கரண் தாப்பருக்கு விளங்கியதாகத் தெரியவில்லை - கரண் தாப்பராகிய நான் கேட்டால் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று குதித்ததுக்கொண்டேதான் இருக்கிறார் பேட்டி முழுவதும்.
நன்றி அனானி.
ஜெ.ஜெ கரணை கையாண்டவிதமும் பா.சி கையாண்டவிதமும் எவ்வளவு வித்தியாசம்?
முதல் முறை கரணை ஒருவர் அடக்கி பார்க்கிறேன்.
BTW ஓகை என்றால் என்ன?
//BTW ஓகை என்றால் என்ன?//
வெகு நாட்களாக இந்தக் கேள்வி இங்கு இருந்ததைக் கவனிக்கவில்லை. இங்கே சென்று பாருங்கள்.