கடைசியா போட்டு பார்த்தது

பழைய கண்ணாடிகள்

மத்தவங்க கண்ணாடி

If you have problems in viewing this page try this, in the menu bar goto View>encoding>select Unicode(UTF-8)

Oh boy what a tiger and the vice versa


ஓரு சுட்டி பையன் கால்வின். அவன் கூட மட்டும் பேசும் ஒரு புத்திசாலி புலி (பொம்மை) ஹொப்ஸ் அடடா இப்படி ஒரு பிள்ளையா நமக்கு என குறை/ நிறை படுகிற அப்பா அம்மா. இது தான் Calvin and Hobbes . சின்ன புள்ள தனம் இல்லிங்க. பல பெரியவங்க விஷயங்களை நகைச்சுவையொட சொல்லிருப்பாங்க + சின்னபிள்ளைகளோட அப்பாவித்தனம்! அதனாலயே இது சின்ன பசங்கள விட பெரியவங்க கிட்ட ரொம்ப பாப்புலர். இதோட முழு தொகுப்பு (Omnibus edition) வெளி வந்திருக்கு. அழகான Hardcover - 250$. ரொம்ப அதிகம்ன்னு நினைச்சா... ஹிண்டுல தினம் வருது. புடிச்சிருந்தா சொல்லுங்க, என்கிட்ட இருக்க ஈ-புக் அனுப்ப முயற்சி செய்யறேன்.

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 8 (show/hide)

8 Comments:

Anonymous Anonymous said...

Click on the image to view it in a new window.

By: நந்தன்

12/10/2005 11:15 AM  
Anonymous Anonymous said...

பில் வாட்டர்சன் C&H முன்னுரைல சொல்ற அந்த வரிகள் மிகவும் அருமையானது. நன்றி தகவலுக்கு.

12/10/2005 12:46 PM  
Anonymous Anonymous said...

பில் வாட்டர்சன் C&H முன்னுரைல சொல்ற அந்த வரிகள் மிகவும் அருமையானது. நன்றி தகவலுக்கு.

12/10/2005 12:47 PM  
Anonymous Anonymous said...

அமேசானில் $105க்கு கிடைகிறது. அதுவா நீங்கள் இங்கு குறிப்பிடுவது. எனக்கும் C&H மிகவும் பிடிக்கும்.

12/10/2005 1:46 PM  
Anonymous Anonymous said...

அதே அதே. தகவலுக்கு நன்றி பாலாஜி. அந்த சின்ன பையன் என்னை ரொம்பவே இன்ப்ளுயன்ஸ் செய்யறான்

By: nandhan

12/11/2005 9:41 AM  
Anonymous Anonymous said...

எனக்கு மிகவும் பிடித்தமான கார்ட்டூன் கேரக்டர்கள் கேல்வினும் அவனது செல்லப் புலியும். என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு உங்களிடமிருக்கும் e-bookஐ அனுப்பினால் மகிழ்வேன். நன்றி. (m_meenaks@yahoo.com)

By: மீனாக்ஸ்

12/12/2005 5:03 AM  
Anonymous Anonymous said...

எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்டிரிப் கார்ட்டூன்கள்ல கால்வின் முதல் இடம்..

அதுலயும், ஸ்கூல் டீச்சர்ங்கள கலாய்குற இடம் இருக்குதே.. சூப்பரோ சூப்பர்..

kolkataprince at gmail dot com முகவரிக்கு ஒரு காப்பி ஈபுக் பார்சல் ;-)

-
செந்தில்/Senthil

By: யாத்திரிகன்

12/16/2005 11:43 AM  
Anonymous Anonymous said...

மீனாக்ஸ் & யாத்திரிகன் ரொம்ப பெரிசா இருக்கு, ஸ்ப்ளிட் செய்து அனுப்ப முயற்சிக்கிறேன். :)

By: நந்தன்

12/16/2005 4:50 PM  

Post a Comment

<< Home

இடைவெளி

நிறைய இடைவெளி விட்டாச்சு. காரணம் கண்டுபிடிக்க என் போன பதிவையும், கண்ணாடிக்கு பின்னாடியும் பாருங்க. ஆமாங்க நானும் வாலை புடிச்சி அமேரிக்காவுக்கு வந்துட்டேன். சென்னைல மழை, இங்கே பனி. நம்ம ராசி அப்படி. இனிமெல் தொடர்ச்சியாய் எழுத முயற்சிக்கிறேன். அப்படியே யாரச்சும் இந்த வலை பதிவாளர் மாநாடு, கூட்டம் நடத்தினால் ஒரு எட்டு போய் பார்த்திடலாம்னு இருக்கேன். பார்ப்போம்...

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 6 (show/hide)

6 Comments:

Anonymous Anonymous said...

முதல் முறையா கன்னாடி போடறேன். நல்லா எழுதி இருக்கீங்க. அமெரிக்காவுல எந்த ஊருக்கு வ்ந்திருக்கீங்க ?

By: சுந்தர் நாராயணன்

12/04/2005 12:38 PM  
Anonymous Anonymous said...

அமெரிக்காலே கண்ணாடி விலை ஜாஸ்தியாச்சே!
ஜமாய்ங்க.

வெல்கம் டு அமெரிக்கா

12/04/2005 12:51 PM  
Blogger துளசி கோபால் said...

அடடா, போன அனானி நாந்தேன்.
துளசி.

இப்படி பேரு, ஊரு எல்லாத்தையும் கேட்டுப்புட்டு அனானின்னு 'வசை' பாடறீங்களே. அடுக்குமா?

12/04/2005 12:52 PM  
Anonymous Anonymous said...

வாங்க வாங்க.. !!!
தூசுதட்டிப்போன கண்ணாடி.. ஒருவழியா சுத்தம் பண்ணி திருப்பி எடுத்துப்போட்டுட்டீங்க..

-
செந்தில்/Senthil

By: யாத்திரிகன்

12/06/2005 6:47 AM  
Anonymous Anonymous said...

னானும் செரட்டும உன்ஙகொட? புதுசு. என்னக்கும் எழுதுன்க

By: ponsivappu

12/08/2005 1:41 AM  
Anonymous Anonymous said...

Connecticutக்கு வந்து இருக்கேன், சுந்தர், துளசி விலையெல்லாம் 45ல பெருக்கி பாத்துகிறேன் :) செந்தில் கொஞ்ச நாள் காணாம போனதுக்கே இப்படியா? எழுதல தான் ஆனா அடிக்கடி படிக்கிறேன். யாருப்பா அந்த பொன்சிவப்பு? புரியற மாதிரி எழுதுங்கப்பு.



By: நந்தன்

12/09/2005 5:24 PM  

Post a Comment

<< Home

மூக்குக்கண்ணாடி

இந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம் தாத்தவோட சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு

கண்ணாடிக்கு பின்னாடி

பிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...
சாப்ட்வேர்- தொழில். சினிமா, புத்தகம்,எழுத்து - ஆர்வம்
இன்னும் தெரியனுமா?