கடைசியா போட்டு பார்த்தது

பழைய கண்ணாடிகள்

மத்தவங்க கண்ணாடி

If you have problems in viewing this page try this, in the menu bar goto View>encoding>select Unicode(UTF-8)

Karan Thappar-சாத்தானின் வழக்கறிஞர்

ஒருவரிடம் அவரே கேட்க தயங்குகிற கேள்விகளை கேட்பவருக்கு Devil's Advocate என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவது வழமை. போப் தேர்ந்தெடுக்கும் போதும் பிஷ்ப்களில் ஒருவர் DAவாக இருந்து தேர்ந்தெடுக்க படும் போப்பின் கடந்த கால் வாழ்கையில் ஏதேனும் தவரு செய்திருக்கிறாரா என ஆராய்வார் என்று கேள்வி.

Karan Thappar (KT), IBN தொலைக்காட்சியில் இப்போழுது நடத்தி வரும் Talk Showவின் பெயரும் அதே. KT பிபிசி யின் Hardtalk Indiaவின் மூலம் புகழடைந்தவர். பிபிசி யில் இவர் ஜெயலலிதாவை பேட்டிக் கண்டது மிகப் பிரபலம்

எதிராளியின் பலவீனமான கருத்துக்கள் மீது பாய்வதும், வார்த்தையில் விளையாடி கொந்தி குதறுவதும் இவருடைய பானி. முதலில் இந்த தைரியத்திற்காகவும் சாமர்த்தியத்திற்காகவும் இவரின்பால் கவரப்பட்டாலும் இப்போதெல்லாம் வெறுப்பே மிஞ்சுகிறது.

எனக்கென்னமோ பேட்டியின் மூலம் எதிராளியின் கருத்தை அறிவதற்கு பதிலாக, 'நான் எல்லாரையும் மடக்குவேன் பார்' என காண்பிக்க முயலுகிறார் என்றே தோன்றுகிறது. Casting himself into a sterotype, Pitiably.

ஆனாலும் முதல் முதலில் இவர் பேட்டியை பார்ப்பவர்களை 'சும்மா பிச்சு உதறான்யா' என சொல்ல வைப்பது தான் இவரின் பலம். தொடர்ந்து பார்த்தால் புரியும் இவரின் பானி வெறுக்க தக்கது என்று. பேட்டி எடுக்க படுபவர்கள் யாரேனும் இவரின் இந்த பானியை விமர்சிக்க மாட்டார்களா என நினைத்ததுண்டு.

சமிபத்தில் பா.சிதம்பரத்தை பேட்டிக் கண்டபோதும் இதே போல செய்ய முற்பட, பா.சி மிக நன்றாகவே இவரை கையாண்டார். கல்லூரி காலங்களில் ஒரு பாடம் இருக்கும் 'யாராச்சும் நம்மள கலாய்க்கும் போது டென்சன் ஆகக்கூடாது, கூலா திருப்பி கலாய்க்கனும். அத விட்டுடு டென்சன் ஆகி பதில் சொன்னா அதுவே அவங்களுக்கு இன்னும் ஏத்தம்மா ஆகிவிடும்'. பா.சி was cool. KT பல சந்தர்ப்பங்களில் ஜகா வாங்கியது, விவாதத்தை மாற்றியது என கடைசியில் He met his match என்று தோன்றியது (சில இடங்களில் பா.சி சொதப்பினாலும்)

பார்க்க தவறியவர்களுக்கு இதோ சுட்டி பாகம் 1 பாகம் 2

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 6 (show/hide)

6 Comments:

Blogger Machi said...

சிதம்பரம் தாப்பரை சும்மா பிச்சு உதறிட்டார்.

/He met his match/ - True.

அடுத்த முறை சிதம்பரத்தை பேட்டி காண வரும் போது சும்மா 2 கேள்விகளை மட்டும் எடுத்துக்கிட்டு வராம தாப்பர் நிறைய தகவல்களை படிச்சிட்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம். :-)

7/29/2006 8:46 PM  
Blogger ஓகை said...

கரன் தனக்குத் தானே அமைத்துக் கொண்ட பேட்டி அமைப்பை தொடர்ந்து சரியாகவே செய்து வருகிறார் என்று நினைக்கிறேன். அவர் நேரடியாக கேட்கும் கேள்விகள் பார்வையாளர்கள் பலரின் மனதிலும் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிற கேள்விகள்தான். கரன் தப்பாருக்கு சரியாக பதில் சொல்வதின் மூலம் பேட்டி காணப்படும் பிரமுகர் மக்கள் பலரின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமே. முதல்வன் படத்தில் முதல்வரிடம் கேட்கப்படும் கேள்விகள் இந்த வகையில் வர வாய்ப்பிருக்கிறதே. போப் தேர்வுக்கு வைக்கப்படும் DA தேர்வு தேவையானதென்றால், பொது வாழ்வின் பிரமுகர்களுக்கும் அது போன்றவை தேவைதானெ.

7/29/2006 8:56 PM  
Blogger நந்தன் | Nandhan said...

குறும்பன், ஓகை. நன்றி.
கரனின் கேள்விகளை நான் தவறு எனக் குறிப்பிடவில்லை...அவருடைய அந்த Arronganceஐ தான்...மக்களுக்காக கேள்வி கேட்கும் ஒருவர் அந்த பதிலுக்காக காத்திராது தான் தவறு. பிரச்சனைகளை அலசுவதை விட்டு தனது 'பிம்பத்தை' நிலை நாட்ட முயற்சிக்கும் பாங்கை....

7/29/2006 9:04 PM  
Anonymous Anonymous said...

தான் நினைக்கும் பதிலைச் சொல்லும் வரை பேட்டியெடுக்கப்படுபவரை விடுவதில்லை என்ற ரீதியில் நேர்காணல் செய்திருக்கிறார் கரண் தாப்பர். Fox Newsன் Bill O'Reilly கிட்டத்தட்ட இதே ரகம். இந்த ஒரு பேட்டிக்காக அரசாங்க முடிவுகளைச் சொல்லிவிடமுடியாது, முடிவுகளுக்கான ஆதாரங்கள் தொகுக்கப்பட்டு பாராளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் அளிக்கப்படும், கேபினட்டில் விவாதிக்கப்படும் என்று பலதடவை சிதம்பரம் சொல்லியும் கரண் தாப்பருக்கு விளங்கியதாகத் தெரியவில்லை - கரண் தாப்பராகிய நான் கேட்டால் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று குதித்ததுக்கொண்டேதான் இருக்கிறார் பேட்டி முழுவதும்.

7/29/2006 9:19 PM  
Blogger நந்தன் | Nandhan said...

நன்றி அனானி.
ஜெ.ஜெ கரணை கையாண்டவிதமும் பா.சி கையாண்டவிதமும் எவ்வளவு வித்தியாசம்?
முதல் முறை கரணை ஒருவர் அடக்கி பார்க்கிறேன்.
BTW ஓகை என்றால் என்ன?

7/29/2006 10:29 PM  
Blogger ஓகை said...

//BTW ஓகை என்றால் என்ன?//

வெகு நாட்களாக இந்தக் கேள்வி இங்கு இருந்ததைக் கவனிக்கவில்லை. இங்கே சென்று பாருங்கள்.

11/07/2006 9:08 AM  

Post a Comment

<< Home

பர்க்கா தத் கட்டுரை - The English divide

என்.டிடி.வி பர்க்காவின் கட்டுரை. பல தடவை எனக்குள் கேட்டுக் கொண்ட கேள்விகளாய் இருப்பதால் இங்கே தருகிறேன்.


One of the most awkward - and yet, strangely compelling - things about journalism is that sometimes your work makes you hold a mirror to your own life.
This past week, a quiet, but determined 16-year-old became an unexpected reflection of my education.

I have always believed that my school and college years were the first architects of my personality; like every middle-class Indian, I take pride in where I studied and what I was taught. And yet, the gentle idealism of this young girl made me pause to wonder: Had my public-school education been shamefully elitist?

At first, the story seemed straightforward enough. Garima Godara, a CBSE topper, with an astonishing 97.6 per cent had taken the entrance exam for the Delhi Public School (Dwarka), the school closest to her village.

The daughter of a police constable who earned less than Rs 6,000 a month, the school's fees would have been a problem. But the family was undeterred; perhaps there would be a scholarship or a loan; surely the school would be keen to admit the girl who had topped the national capital's merit list.

Garima's proud father had spent months battling the entrenched patriarchy of his peers, fending off nosy neighbours who gossiped about why she didn't spend enough time in the kitchen. Now, he was even more determined to give his daughter the best education her marks could buy.

This could have been the story of New India and its emerging, self-made middle class; a proud milestone for a country that dares to dream.
Instead, here's what happened: DPS turned her down. Her results were good, it conceded. But marks aren't everything, said the school principal to NDTV, and besides, her English was poor, and just didn't cut the grade.

Later, listening to Garima in the studio, it was hard not to feel both angry and moved. Angry because of the obvious injustice: not only was she as bright as her results indicated; there was nothing about her spoken English that suggested that she would have been unable to keep pace with the syllabus.

Yes, she spoke with a regional accent that some would consider insufficiently sophisticated. But there was no doubt that she could not only follow a complex argument, she could also make herself understood to any English speaker.

But it was her calm that was almost heart breaking; a quiet courage that belied her teen years. It was almost as if we were more outraged and indignant than she was. During the course of the programme, a principal from a well-known school in Dehradun called in, offering her admission and a scholarship; others promised to get DPS to change its mind.

But betraying only the slightest sense of hurt, she said firmly that her aim now was to show DPS that she would do better than any of its students. She had already got herself admitted to another school, and DPS could quite simply, take a walk.
As she spoke, viewers clearly shared my anger. The online poll showed that 90 per cent of viewers believed that the English language exerted a disproportionate influence over the education system.

Yet, were we all being hypocritical and dishonest? This time it was DPS under the microscope, but were any of us any different?
Let's say she continued to do outstandingly well in school. The next stage would be college. I pictured her trying to take the entrance interview at my old college, Delhi's St Stephen's. Would she get in? And even if she made the cut, how would other students react to her presence? Would they admire her for her academic brilliance? Or would they snigger at her accent, titter each time she made a grammatical error and then, melt away, leaving her alone to find her own friends?

Garima's story is a metaphor for India's twisted tryst with the future. I learnt after the programme was over - and it is significant that neither she nor her parents brought this up themselves - that she is an OBC.

For some months now, as the debate over reservation has raged, opponents of the quotas have made the same point again and again: we should be a society where merit matters. It's a compelling argument, and one that I have personally supported.

But what do the anti-quota street fighters have to say now? Here's a girl who competed in the mainstream, her own Hindi medium DAV pitched against the trendier, richer, big names. But her merit was swallowed up by prejudice.

Is it any wonder then that supporters of reservation believe that the system is stacked against them, and that merit is a con-word used by upper-caste tricksters?
Her story is also a scathing comment on the class divide in India. It is fashionable for marketeers and economists to talk about the burgeoning middle class. Each day a new figure is conjured up to demonstrate the size of the Indian market, and the clout of the new middle class; is it 250 million this week or has it already reached 300 million?

We embrace these statistics, because we like the idea of India as this century's favourite financial destination. We feel flattered when Time magazine puts our country on its cover, and we talk glibly, especially to foreigners, of social mobility and how the gap between the rich and poor is closing; we argue that India's tomorrow is being built by its industrious and enterprising middle class, and we feel like the future is unfolding, right here and right now.
But here's what we never admit. We're just the worst sorts of snobs.

The social mobility of the last decade has meant that the new middle class does not consist of people like us. Instead, it is made up of people like Garima, who we still find excuses to exclude; we sneer at their lack of Westernized sophistication; make fun of their accents, and we try and ensure that our children have nothing to do with theirs.
Finally, Garima's story exposes India's paradoxical relationship with the English-language. Nobody in the world speaks English like us. We have our own idioms, our own words and our own accents.

We pretend to love our own English and brag about how it is India's great selling point; the reason we dominate the global outsourcing business. But of course deep down we know that our English is not the English that the West really wants. And so, each time we talk to Britons or Americans, we subtly alter our diction and inflection.

When we set up our call centers, we drop the subtlety entirely and start accent classes to teach our young people to abandon the speech patterns of our own society and to migrate to a virtual, linguistic middle America, where they become impersonators of people they will never meet and never know.

But within India, we still treat our own English as the great social decider. We laugh at regional accents, smirk at those who make grammatical errors and feel most at home with those who talk like us.

Everyone else belongs on the other side of the English divide. And as it turns out, the other side of the class and caste divide as well.
Maybe we cling so tightly to this tiny community because secretly we are just insecure. Outside of our little bubble, India is changing. Every major institution in recent times - Parliament, the bureaucracy, the military, our colleges and schools - is being forced to re-write the rules.
A new breed of Indians who no longer look towards the West for self-affirmation, is making its presence felt. We like to call this a decline in quality. But actually, it's the rest of India waiting to get in.

How long are we going to keep the gates shut?

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 8 (show/hide)

8 Comments:

Blogger மருதநாயகம் said...

சிறப்பான ஒரு கட்டுரை. தமிழில் இருந்திருந்தால் இன்னும் பலருக்கு பயனாக இருக்கும்

7/26/2006 6:37 PM  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்ல கட்டுரை. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நந்தன்.

இங்கே எழுதிக்குமித்துக்கொண்டிருக்கும் பலர் படிக்க வேண்டிய கட்டுரை.

7/26/2006 6:55 PM  
Blogger நந்தன் | Nandhan said...

மருதநாயகம்.நன்றி. மதிக்கும் அதெ.
மதி, அதற்காக தான் போட்டேன்.

7/26/2006 7:14 PM  
Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நல்ல கட்டுரை. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நந்தன்.

7/26/2006 8:51 PM  
Blogger மணியன் said...

நல்ல கட்டுரை. இதை ஆங்கிலத்தினாலான வேற்றுமை என்று சொல்வது சிறிது simplisticஆக படுகிறது. இதே சிறுமி தில்லியில் படித்திருந்தால் நல்ல ஆங்கில ஆளுமை வந்திருக்கலாம். அல்லது கிராமங்களில் நன்றாக ஆங்கிலக்கல்வி, அதன் உச்சரிப்புடன் சேர்த்து,சொல்லிக் கொடுக்கப் பட்டிருந்தால் இந்த வேற்றுமை தவிர்க்கப் பட்டிருக்கலாம். அதனால் கிராமங்களில் தரமான கல்வி கிடைக்க முயல்வதே சரியான வழி. காமராஜ் காலத்தில் access ஏற்படுத்தினார். பிற்பட்டக் காலங்களில் தரத்தை உயர்த்த முயன்றிருக்க வேண்டும். அதுவும் அரசு பள்ளிகளையே நம்பியிருக்கும் கிராமங்களில் மாறிமாறி வந்த அரசின் கொள்கைகளால் 'முட்டை' தான் வெவ்வேறு அளவில் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

7/27/2006 4:25 AM  
Blogger வெண்பா said...

இக்கட்டுரை சமுதாயத்தை பிறதிபலிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி. தரம் (quality) என்பது ஏமாற்று வேலை என ஆணித்தரமாய் தெரிவிக்கிறது.

7/27/2006 8:04 AM  
Blogger jeevagv said...

This mirror shows only one side, there is always another side!

10/31/2006 4:18 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

நந்தன்

நல்ல கட்டுரை. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

11/02/2006 10:09 AM  

Post a Comment

<< Home

ஆறிப்போன பின் ஆறு

ஆருப்பா அதுன்னு நீங்க கேக்கறது புரியுது. 40 நாட்களுக்கு முன்னே உங்க கிட்ட ஒரு தற்காலிக விடை பெற்றுப் போன நந்தனே தான். திரும்ப வந்தாச்சுல்ல!

நான் திரும்ப வந்துட்டேன்னு கேள்வி பட்டவுடனே வாங்கப்பா ஆட்டத்துக்குன்னு ஓடோடி வந்து அழைத்த அன்பு தோழன் குமரன் எண்ணம் அவர்களுக்கு இது :)
யாரும் கூப்புடலன்னா கூட நானே போட இருந்தேன்பா. மானத்த காப்பாத்திட்ட! வாழ்க நீ எம்மான்!

சரி மேட்டருக்கு வருவோம்...

பிடித்த ஆறு எண்கள் (ச்சும்மா வித்தியாசமா இருக்கடுமே)
1.0
2.1
3.2
4.5
5.9
6.99

பிடித்த ஆறு உணவு (நான் சைவ பிரானிப்பா)
1. பருப்பு உசிலி
2. சாம்பார் சாதம்
3. பீன்ஸ் கரேட் பொரியல்
4. கரேட் அல்வாவுடன் வெனிலா ஐஸ்
5. இட்லி சட்னி
6. பீன் பரிட்டோ

என்னொட ஆறு கொள்கைகள்
1. முரண்கள் இருப்பதில்லை. ஆராய்ந்து பார்த்தால் முரணுக்கான காரணிகளில் ஒன்றேனும் பொய்யாய் இருக்கும்
2. எதை தருகிறோமோ அதே திரும்பி வரும்
3. முயற்சி செய்தால் முடியாதது இல்லை
4. கொள்கைகள் இல்லாமல் மனிதன் வாழ்வது மூடத்தனம்
5. உழைப்பு என்றுமே கூலி தரும். கூலி வரவில்லையெனில் உழைப்பு போதவில்லை
6. உன்னைவிட உயர்ந்தவன் யாருமில்லை, தாழ்ந்தவனும் யாருமில்லை.


நான் நெகிழ்ந்த ஆறு
1. 11ம் வகுப்பின் போது எங்கள் தமிழ் ஐயா பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு சென்ற போது எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கதறியது.
2. life is beautiful படம் முதல் முறை பார்த்த போது
3. விளையாடி விழுந்து, மல்டிபுள் ப்ராக்சரோடு படுத்திருந்த போது என் அப்பாவும் அம்மாவும் என்னை பார்த்துக் கொண்ட நாட்கள்
4. என் 20 வருட கால நன்பர்களுடன் அடித்த கூத்தை சமிபத்தில் அசைப்போட்ட போது.
5. கல்லூரி கடைசி வருடத்தில் நெகிழ்ந்த ஒரு மாலைப் பொழுதில் எனக்கும் காதல் வந்த போது
6. அந்த நெகிழ்ச்சியின் விட்ட குறை கடந்த மாதம் முழுமையான போது ;)

வலைப்பூவின் ஆறு
1. தருமி : தாத்தாவின் எழுத்துக்களுக்கு குறிப்பாய் வாழ்கை அனுபவுங்களும், கடவுள் பற்றி பதிவுகள் நான் ரிபிட்டட் ஆடியன்ஸ்
2. சசி : பாட புத்தகம் போல இவரது பதிவுகளை படிப்பவன்
3. கைப்புள்ள : முதலில் இவர் கொஞ்ச நாள்ல காணம பொய்விடுவார், எவ்வளவு நாளைக்கு தான் வடிவேலை விச்சு ஓட்ட முடியும் என நினைத்தேன். ஆனாலும் மனுஷன் ஒரு 'cult status' க்கு வந்துட்டார்
4. இளவஞ்சி : இனைய கலைவாணர். இதுக்கு மேல என்ன சொல்லா, கருத்தும் இருக்கும் காமெடியும் இருக்கும்
5. குழலி : மிகவும் விவாதிக்க படும் ஒருவர். தனது கருத்துக்களை ஆவேசத்துடன் எதிர்க்கும் ஆற்றலுக்காகவே இந்த ஆறில் இடம் பிடித்தார்
6. செல்வராஜ்.R : செல்வாவின் பதிவுகள் மனதை வருடி செல்லும் இசை. படிப்பவர்களின் இதயத்தையும் மூளையையும் ஒரு சேர தொடுபவர்

மிகப்பிடித்த ஆறு பாடல்கள்
1. சட்டென கரைந்தது நெஞ்சம் - கன்னத்தில் முத்தமிட்டால். சின்ன பாடல் தனியாக mp3 இருந்தால் அனுப்புங்களேன்.
2. உன்னைவிட - விருமாண்டி. ராஜாவின் சமிபத்திய மாஸ்டர் பீஸ். அருமையான திரைவடிவமும் கூட
3. எவனோ ஒருவன் வாசிக்கிறான் - அலைபாயுதே. ஸ்வர்னலதாவின் குரலும். ரகுமானின் interludesம் சோகத்தை ஏக்கத்தை செவி வழியே ஏற்றுவதை என்னவென்று சொல்ல?
4. மன்றம் வந்த தென்றலுக்கு - மௌன ராகம். மொட்டை, எப்படிப்பா?
5. நலம் தானா? - தில்லான மோகனாம்பாள். இசை, பத்மினி, ஈஸ்ட்மேன் கலர், கொஞ்சம் அதிகமான நடிப்புடன் சிவாஜி, ஏதோ ஓன்னோ, இல்லை எல்லாமேவோ.
6. கூமேர் போடி - bombay Jayshreeயின் வாத்ஸல்யம். தாலாட்டு கேட்டு தூங்கறது இருக்கே ஒரு சுகமுங்க...ரெஸ்ட்லெஸா, டிஸ்டர்ப்டா இருக்கும் போதெல்லாம் கேட்டா யாரோ உச்சிய வருடி விடற மாதிரி இருக்கும். ஒரு வார்த்தை புரியலைன்னா கூட மனசு அமைதியாயிடும்

நானே கடைசி, நான் யார கூப்பிட. என்னை மாதிரி எத்தன பேரு நம்பள யாரும் கூப்பிடலன்னு இருக்கீங்களோ எல்லாரும் வாங்க அய்யா, இந்த எடத்துல உங்க பேர போட்டுக்கோங்க...நானும் ஒரு ரவுண்ட் போய் வந்து யாராச்சும் மிச்சமிருந்த கூப்பிடுறேன்.

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 7 (show/hide)

7 Comments:

Blogger கோவி.கண்ணன் said...

//1. தருமி : தாத்தாவின் எழுத்துக்களுக்கு குறிப்பாய் வாழ்கை அனுபவுங்களும், கடவுள் பற்றி பதிவுகள் நான் ரிபிட்டட் ஆடியன்ஸ்//
தருமை அய்யாவை தாத்தா என்று சொல்லிவிட்டீர்கள்... பாவம் மனசு ஒடிஞ்சு போவாதா ? :)

7/09/2006 6:41 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

என்னங்க நந்தன், இத்தனை நம்பர் பிடிக்குது, 3.14 pie பிடிக்காதா?

இளவஞ்சி : இணைய கலைவாணர் - கரெக்டுங்க..

கைப்புவைப் பத்தி இப்படிச் சொல்லிட்டீங்க!!!

7/09/2006 7:25 PM  
Blogger Chandravathanaa said...

உங்களுக்குப் பிடித்த சட்டென நனைந்தது நெஞ்சம் இங்கே ப்ரியனின் பதிவில் உள்ளது.

7/09/2006 9:03 PM  
Blogger நந்தன் | Nandhan said...

கோவி.க நன்றிங்க.
தாத்தான்னு சொல்லி பாருங்க ஒரு அன்யோன்யம் வருதில்ல;)

7/10/2006 5:12 PM  
Blogger நந்தன் | Nandhan said...

வாங்க பொன்ஸக்கா, எனக்கு pie பிடிக்கும் (சாப்பிட தானே?) pi பிடிக்காது, அதால எவ்வளோ தொல்லைங்க கணக்குல...(யாருப்பா அது பள்ளி கூட மாணவர் முன்னேற்ற கழகத்துக்கு தலைவராக சொல்றது?)

சாதரணமா எனக்கு இந்த முற்றுப் பெறாத எண்களே பிடிக்காதுங்க....

7/10/2006 5:15 PM  
Blogger நந்தன் | Nandhan said...

ஆகா சந்திரவதனா, மிகவும் நன்றிங்க ரொம்ப நாளா தேடிக் கொண்டிருந்தேன், ப்ரியனுக்கும் நன்றி

7/10/2006 5:16 PM  
Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

சட்டென நனைந்தது நெஞ்சம் ஒரு மாஸ்டர் பீஸ். மறுபடியும் முழு மூச்சில் உங்களை கோதாவில் எதிர் பார்க்கிறோம்.

7/10/2006 9:55 PM  

Post a Comment

<< Home

மூக்குக்கண்ணாடி

இந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம் தாத்தவோட சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு

கண்ணாடிக்கு பின்னாடி

பிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...
சாப்ட்வேர்- தொழில். சினிமா, புத்தகம்,எழுத்து - ஆர்வம்
இன்னும் தெரியனுமா?