க்ளாசிக்ஸ் விமர்சனங்கள் 1 - Schindlers List
உண்மை சம்பவங்களை அடிப்படையாய் கொண்ட and/or புத்தகமாக வெளிவந்த சில களாசிக் படங்களை வரிசைபடுத்தி பார்த்துவருகிறேன். இன்னும் சில நாட்களுக்கு எழுத...
முதலாவதாய் Schindlers List. கண்டிப்பாய் கேள்வி பட்டிருப்பீர்கள். Schindlers Ark என்ற பெயரில் 1982ல் Thomas Keneally என்பவரால் புத்தகமாய் வெளிவந்து, 1993ம் வருடம்
திரைப்ப்டமாக வெளிவந்து, 7 ஆஸ்கர்களை வாங்கிய படம். அதுவரை அதிகம் கேள்விப்படாத Schindler'ஐ உலகம் முழுமைக்கும் வெளிச்சம் போட்டு காட்டியது.
இரண்டாம் உலக போரின் உச்சத்தில், ஜெர்மனியர்களால் ஆக்கிரமிக்கப் பட்ட போலந்தில் வியாபரம் ஆரம்பித்து செல்வம் சேர்க்க வருகிறான் ஆஸ்கர் ஷிண்ட்லர். அவனுடைய பலமெல்லாம் - பேச்சு, அவன் ஒரு ஜெர்மன், போர்காலங்களுக்கே உரித்தான பொருளாதார சூழ்நிலை.
போலந்தின் வளமிக்க சமுதாயமான யூதர்கள் நாஜியினரால் வேட்டையாட படுகிறார்கள். யூதர்கள் அனைவரும் சொத்து சுகங்களை விட்டு ஒன்று திரட்டப் படுகிறார்கள்...நாஜியினரால் - வேட்டையாடவும் வேலைவாங்கவும் சுலபமாக இருக்குமல்லவா.
யூதர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட ஒரு எனாமல் பாத்திர தொழிற்சாலையை, யூதர்களின் முதலீடு கொண்டே வாங்கி, யூதர்களையே வேலைக்கும் அமர்த்தி, படு சாமர்த்தியமாக காசு பார்க்க தொடங்குகிறான் ஆஸ்கர். எனாமல் பாத்திர ஆர்டர் பிடிப்பதற்காக மது மாது முதற்கொண்டு எல்லாவற்றையும் சப்ளை செய்து நாஜி படையின் அதிகாரிகளை கைக்குள்ளும் போட்டுக் கொள்கிறான். நன்றாகவே நடக்கிறது அவன் பிஸினஸ்
முதலில் ஒரு சுயநல முதலாளியாக மட்டுமே இருக்கும் ஷிண்ட்லர், மனிதாபிமானம் உள்ளவனாக மாறி நாஜி கொடுமைகளில் இருந்து யூதர்களை காத்தது, கொஞ்சம் கொஞ்சமாய் தான் ஈட்டிய பெரும் செல்வத்தை இந்த மக்களை காப்பதற்காக செலவு செய்தது..ஆகியவற்றை திரையில் பார்க்கும் போழுது நெகிழாதவர்கள் மிகச் சிலரே.
நாஜிக் கொடுமைகளை மிகத் தெளிவாக காட்டிய இந்த 31/2 மனி நேரப் கருப்பு வெள்ளை படம் ஸ்டீவன் ஸ்பீல்பர்கால் இயக்கப்பட்டது. முன்பே சொன்னது போல இது உண்மைக் கதை. ஷிண்டலரால் காப்பாற்றப்பட்ட யூதர்கள் இன்றும் உள்ளனர். (படத்தின் கடைசியில் யூதர்களாய் நடித்த பலரும் அவர்களுடைய Real life counterpartஉடன் ஷிண்டலரின் கல்லறையில் அஞ்சலி செலுத்துவது மட்டும் கலரில்.)
தியாகத்தின் சின்னங்களாய் நமக்கு காட்டப்படும் பலரும் ஒருவகையில் 'Demi-god'ஆகவே உள்ளனர்/காட்டப் படுகின்றனர். அவர்களிடத்தில் குறைகளை வெளிப்படையாக காணமுடியாது (காந்தி முதற்கொண்டு). ஆனால் ஷிண்டலர் அப்படியல்ல..குடி, பெண்கள், பொய், சூது, லஞ்சம், பணத்தாசை என எல்லாம் நிரம்பியவன். அப்படிபட்ட ஒரு சாமனியன், தனது உயிர், பெரும் சொத்து (4 மில்லியன் மார்க்) என எதையும் பொருட்படுத்தாது, தனது நாடே எதிரியாக கருதும் யூதர்களை காப்பாற்றியது எதற்காக? அப்படி ஒரு காரியத்தை செய்ய அவனை செலுத்தியது எது?
மனிதர்களின் பல அடுக்குகளை கொண்ட மனோபாவம் கொண்டவர்கள்..It is unjust to judge them upon thier moment of weekness or moment of glory.
காந்திக்கு ரயில் பயணம் போல ஷிண்ட்லரின் மாறுதலுக்கு ஒரு defininig moment என்று ஒன்றுமில்லை (காட்டப்படவில்லை), உண்மையாகவே இது! இதனால் தான்! நான் இப்படி என நமது எந்தவொரு காரியத்திற்கும் காரணம் கற்பிக்க முடியாது. மாற்றங்கள் மிக மெதுவாய் நம்மை அறியாமலே நிகழ்கின்றன்.
கவனிக்க வேண்டிய இரண்டாவது கரு நாஜியின் கொடுமைகள். மக்களை வெறும் எண்களாக மட்டுமே பார்பதில் தொடங்கி, தமது will and wishஇல் சுட்டுக் குவித்த கோரம் மிக டீடையிள்டாக இதை காண்பித்திருப்பார்கள், அத்தனை இருந்தும் நடந்ததில் பாதி கூட இல்லையாம் இது. புத்தகமும், வாழும் சாட்சியங்களும் சொல்கின்றனர்.
ஸ்பீல்பர்க்கின் மாஸ்டர் பீஸ் என கூறப்படும் இப்படத்தை இயக்கும் பொறுப்பு 3 இயக்குனர்களை தாண்டி இவரிடம் வந்தது. முடியாது என மறுத்த ஒருவர் உண்மையாகவே
நாஜி கொடுமைகளுக்கு ஆளான போலந்த்யூதர். தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் திறமையாக கையாண்ட ஸ்பீல்பர்க் இப்படத்திற்கு சம்பளமே வாங்கவில்லை. ஒரு வரலாற்று சாட்சியமாக இதை உருவாக்குவதே தனது சம்பளம் என நினைத்தாரோ. ஸ்பீல்பர்க்கும் ஒரு யூதர்.
Liam Neeson ஆஸ்கர் ஷிண்ட்லராகவும், Ben Kingsley இஷ்டாக் ஸ்டெரன் என்ற யூத கணக்காளராவும், Ralph Fiennes ஏமான் கொய்த் என்ற நாஜி கமாண்டராகவும் நடித்துள்ளனர். கதையின் 3 முக்கிய பாத்திரங்களான இவர்களின் நடிப்பு பல இடங்களில் பாடம். குறிப்பாய் Ben தனது ஸ்ப்ளிட் செகண்ட் மட்டுமே தங்கும் முகபாவங்களால் மற்ற இருவரையும் பின்னுக்கு தள்ளிவிடுகிறார். Ralphமும் தொந்தியும், hatredயும் காட்டி வெறுப்பை சம்பாதிக்கிறார்.இவர்களில் ஒருவருக்கு கூட ஆஸ்கர் கிடைக்காடதது ஏமாற்றமே.
சிறு சிறு கதாபாத்திரங்களும் நெஞ்சை அள்ளுகிறார்கள். உ.தா: காப்பாற்றிக் கொள்ள மல சாக்கடையில் குதிக்கும் சிறுவனின், கனநேர shudder!
இப்படம் வாங்கிய 7 ஆஸ்கர்களும் தொழில்நுட்ப பிரிவுகளில் என்பது குறிப்பிடத்தக்கது. 31/2 மனி ஓடும் படத்தை, அதுவும் தெரிந்த கதைய விறுவிறுப்பாக்குவதில் திரைக்கதையும் எட்டிடீங்கும் பெறும் பங்காற்றுகிறது. காட்சி மாறுவதற்கு முன்னரே அடுத்த காட்சியின் வசனங்கள்/ஒலிகள் ஒலிக்க துவங்குவது ஒரு நல்ல யுக்தி. இதன் மூலம் சில தேவை இல்லாத காட்சிகளை/விளக்கங்களை குறைத்திருக்கிறார்கள்.
1940களை கண்முன் நிறுத்தும் கலை, கருப்பு வெள்ளையிலே டிப்பரெண்டிஷியல் லைடிங்க் மூலம் மூட் கொண்டுவரும் ஒளிப்பதிவும் அந்த தீம் மியூசிக்கும் பாரட்ட தக்கவை. படத்தை கருப்பு வெள்ளையில் எடுத்தது பல விதங்களில் உதவியுள்ளது. கோரத்தை குறைத்து, அதன் தாக்கத்தை மட்டும் காட்டுவது, முழுபடத்திற்கும் ஒரு நம்பக தன்மையும் கொடுக்கிறது.
இறுதி காட்சி நெகிழ்சியின் உச்சம், தன்னால் இன்னும் சிலரை காப்பாற்ற முடியவில்லையே என கதறி அழும் Neesonயும், அந்த நெகிழ்ச்சியை அப்படியே வேறு தளத்தில் தரும் இசையும்... புல்லரிக்கவைக்கும்.
போருக்கு பின் ஷிண்ட்லரால் மீண்டும் தலைதூக்கவே முடியவில்லை. கடைசி காலங்களில் அவரால் காப்பற்றபட்ட யூதர்கள் தான் ஷிண்டலரின் தேவைகளை கவனித்துக் கொண்டனர். போலந்தில் இன்று இருப்பது 4000த்துக்கும் குறைவான யூதர்களே, ஷிண்டலரால் காப்பற்றபட்ட யூத வம்சாவளியினர் மட்டும் கிட்டதட்ட 6000க்கும் மேல்.
மனிதகுலத்தில் இல்லாததே இல்லை வஞ்சம், விரோதம், காமம், பொய், போர் எல்லாவற்றிற்க்கும் மேலாக நன்றி, அன்பு, கருனை ஆகியவையும் உண்டு. அதனால் தான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஷிண்ட்லரின் வாழ்கையை ஒரு பாடமாக்கி நமக்கெல்லாம் கொண்டு சேர்த்த ஸ்பீல்பர்க்கின் இந்த படம் உண்மையிலே ஒரு மாஸ்டர் பீஸ் தான்!!
ஷிண்டலர் பற்றிய மேலதிக்க விவரங்களுக்கு
இங்கே சுட்டவும்.
படத்தை பற்றிய விவரங்களுக்கு
இங்கே.
ஒரு பின்நவினத்துவ பதிவு
எல்லாரும் பின்நவினத்துவம் பின்நவினத்துவம்ன்னு பதிவு போடறாங்களே...நமக்கு எழுத தான் வரல அதான் ஹீஹீஹி!