க்.வி-2: One flew over the cuckoo's nest
க்.வி-1மூச்சு முட்ட வைக்கும் வேலை, அடுத்த படத்தை பற்றி எழுத இவ்வளவு நேரம் எடுக்க வேண்டியதாய் போயிற்று. எழுத தான் இல்லையே தவிர, வரிசைப்படுத்தி வைத்த படங்களை பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்...(இல்லையென்றால் netflix பணம் தண்டம்) கிட்டதட்ட மறந்தே போன இந்த தொடரை, மீண்டும் தூசி தட்டி எழுத தூண்டியது One flew over the cuckoo's nest. பார்த்த வரிசையில் பல படங்களுக்கு பின் வந்தாலும் எழுதிய வரிசையில் முன்னே வந்துவிட்டது.
Cuckoo's nest முதலில் 1962ல் Ken Kesyயால் எழுதப்பட்ட நாவல். 1963ல் நாடக வடிவம் பெற்று, 1975ல் Milos Forman மூலம் திரைவடிவம் பெற்றது. புத்தகத்திலிருந்து படமாகும் வரை நடந்த கதையே சுவையானது. 5 முக்கிய பிரிவுகளிலும் (சிறந்த படம், நடிகர், நடிகை, இயக்கம், திரைக்கதை) ஆஸ்கர் வாங்கிய இரண்டாவது படமாகும் இது. (மொத்தம் மூன்றே படங்கள் தான் அவ்வாறு வென்றுள்ளன)
ஒரு மனநல காப்பகத்தில் நடக்கும் கதை. காப்பகத்தின் ஒரு வார்ட்டை தனது இறுக்கமான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நர்ஸ் ரேட்சட்க்கும் (Rathched played by Louise Fletcher) சிறைச்சாலை வேலையை தவிர்க்க பொய்யான மனநோயை காரணம் காட்டி அங்கே வரும் மெக்மர்பிக்கும் (McMurphy played by Jack Nicholson) இடையே நடக்கும் போராட்டம் தான் கதையின் கரு.
காப்பகத்தின் நோயாளிகளை ஒரு முடிவில்லா பயத்திலேயே வைத்திருக்கிறார் நர்ஸ் ரேட்சட், வாழ்க்கையில் அவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்ட காரணிகள் மீதே அவர்களின் பயத்தை செலுத்தி மேலும் மெலும் அவர்களின் மனவலிமையை இழக்க வைக்கிறார். அங்கு இருக்கும் பலர் தன்னார்வத்துடனே அங்கு சிகிச்சைக்கு சேந்தவர்கள், எப்போழுது வேண்டுமென்றாலும் காப்பகத்திலிருந்து வெளியே போகலாம், இருந்தும் பலர் வெளியே போகும் சிந்தனையே கொள்ளாமல் இருக்க வைப்பது நர்ஸ் ரேட்சட் அவர்கள் மனதில் விதைத்த பயம்.
சில்லறை குற்றங்களுக்காக கைது செய்யபட்டு பின்னர் காப்பகத்தை வந்தடையும் மெக்மர்பி இவர்களின் மனநிலைக்கு முற்றிலும் மாறுபட்டவன்.வாழ்கை வாழ்வதற்கே என்று வாழ்பவன். மெக்மர்பியின் இந்த தைரியமான வாழ்கை முறை மற்ற நோயாளிகளை அவன்பால் இழுக்கிறது. தாம் பயப்படும் விஷயங்களை எதிர்த்து நிற்க்கும் ஒரு ஹீரோவாக மெக்மர்பியை கான்கிறார்கள். படத்தின் ஒரு காட்சியில் ஒரு பலமான் சிமெண்ட் பேஸை (base) தூக்க பந்தயம் கட்டி தொற்றபின் மெக்மர்பி சொல்லும் ஒரு வசனம்:
"But I tried, didn't I? God-damn it. At least I did that." வாழ்கை பற்றிய இவனது கோட்பாடுகளையும் மற்ற நோயாளிகளின் கோட்பாடுகளையும் மாறுபடுத்தி காட்டுகிறது.
தான் பயம் மூலம் ஆட்சி செலுத்தி வந்த வார்ட்டை மெக்மர்பி சுதந்திரம்/தைரியம் மூலம் வெல்ல நினைக்கும் நிலையில் நர்ஸ் ரேட்சட்க்கும் மெக்மர்பிக்கும் இடையே ஈகோ யுத்தம் ஆரம்பம் ஆகிறது. ரேட்சடின் 'பயத்தால்' கட்டுண்டிருக்கும் நோயாளிகள் கொஞ்சம் கொஞ்சமாய் வாழ்கையை பயமின்றி எதிர்கொள்ள ஆரம்பிக்கின்றனர். நோயாளிகள் ஒருவரான சீப் ப்ரோம்டன் (Chief Bromden played by Will Sampson) வாழ்கையின் மெல் கொண்ட பயத்தால் காதுகேளாத வாய்பெச முடியாதவர் போல் நடிக்கிறார். மெக்மர்பியிடம் மட்டும் தனது உண்மை நிலையை காட்டுகிறார்.
இதனிடையில் மற்றவர்களை போல் அல்லாமல், ரெட்சட் மனது வைத்தால் மட்டுமே தான் காப்பகத்தை விட்டு போகமுடியும் என்ற உண்மை மெக்மர்பிக்கு தெரியவருகிறது. ரேட்சட் பற்றி அறிந்தவனாகையால் காப்பகத்தை விட்டு தப்பிக்க முடிவு செய்கிறான். தப்ப முயலும் இரவில் நோயாளிகளுடன் உல்லாசமாய் கழிக்க முற்படுகிறான். குடி போதையில் தூங்கியும் போகிறான். அடுத்த நாள் ரேட்சட் இவர்களை கையும் களவுமாய் பிடித்துவிட, பயத்தில் ஒரு நோயாளி தற்கொலை வரை செல்ல மெக்மர்பி ஆத்திரத்தில் ரேட்சட் மீது பாய்கிறான்.
மற்ற நோயாளிகளிடம் இருந்து பிரிக்கப்பட்டு மெக்மர்பிக்கு லோபோடோமி (Lobotobmy, மிகவும் சர்ச்சைக்குரிய சிகிச்சை, முளையின் ஒரு பகுதியை துண்டித்துவிடுவது) அளிக்கப்படுகிறது. ஒரு நடைபினமாய் மீண்டும் வார்டுக்கு கொண்டுவரப்படும் மெக்மர்பியின் நிலையை காண சகிக்காத சீப் ப்ரோம்டன் அவரை கொன்று விட்டு, காப்பகத்தின் சன்னலை உடைத்து தப்பித்து போகிறார்.
I-dont-care-a-damn முகத்துடன் வரும் ஜாக் நிகல்ஸன் மெக்மர்பியின் பாத்திரத்தில் கனகச்சிதமாய் பொருந்துகிறார். ஒருவெளை இவரை நான் பார்த்த அத்தனை படங்களிலும் (கடைசியாய் Something's Gotta Give) ஒரு ப்ளேபாய் பாத்திரதிலேயே இருப்பதாலோ என்னமோ.
இரு முக்கிய பாத்திரங்களை தவிர நோயாளியாய் நடித்த பலரும் அருமையாய் நடித்துள்ளனர். குறிப்பாய் செஸ்விக் மற்றும் மார்ட்டினி பாத்திரங்கள்.
கதையை மிகத் தெளிவாய் கொண்டுசெல்லும் திரைக்கதை, நாவலின் ஓட்டத்திலிருந்து மாறுபட்டிருந்தாலும், சோடைப்போகவில்லை.
சீப் ப்ரோம்டென் பாத்திரத்தின் மூலம் -அந்த பாத்திரத்தின் மாற்றத்தின் மூலம் மெக்மர்பி அங்கிருக்கும் நோயாளிகளின் மேல் கொண்டுவந்த பாதிப்பை சொல்லுகிறது கதை. Chief is an example of what McMurphy did to the rest. மெக்மர்பியை அந்த செயலற்ற நிலையிலேயே விட்டுவிட்டால் நர்ஸ் ரேட்சட் தான் வென்றுவிட்டதாய் ஆகும். அவன் உயிர் பிரிந்தாலும், அவன் வாழ்ந்த, அவனிடம் இருந்து தாம் கற்ற 'சுதந்திரம்' என்ற கொள்கை இறக்கவில்லை என்பதை உணர்த்தும் விதமாக சீப் தப்பித்து போவது முத்தாய்ப்பான் முடிவு. அதிலும் மெக்மர்பி தூக்க முயன்று தோற்ற அந்த பேஸை(Base) தூக்கி சீப் சன்னலை உடைப்பது..
"But I tried, didn't I? God-damn it. At least I did that." என்ற மெக்மர்பியின் வசனத்தை மீண்டும் கண் முன் கொண்டுவந்தது. திரைக்கதைக்கு ஒரு சல்யூட்.
தமிழிலும் இதே போன்று கதையாம்சத்துடன் காதலையும் கலந்து (அது கலக்கவில்லை என்றால் தமிழ் சினிமாவா?) ஒரு படம் வந்தது. பெயர் தான் ஞாபகம் இல்லை. தெரிந்தால் சொல்லுங்களேன்.
இவ்வாறான படங்களில் சாதரணமாய் மனநோயாளிகளை, அவர்களின் செயல்களை ஒரு காமெடி subjectஆக தான் காட்டியிருப்பார்கள், மாறாக இப்படம் அவர்களை மிக அருகே சென்று பார்த்த ஒரு எண்ணத்தை தருகிறது. அவர்களின் செயல்களை anticsஆக மாற்றாமல், அவர்களின் மனநோயின் வெளிப்பாடாய் கான்பித்திருப்பது சபாஷ் (உ.தா: செஸ்விக் மற்றும் ஹார்டிங்)
இது போன்று வாழ்கையை, அதன் உன்னதத்தை பாராட்டும் படங்கள் என்றுமே என் லிஸ்டில் முன்னிற்பவை. அதனால் தானோ பார்க்க நினைக்கும் அடுத்த படமும் அதே போல..."To kill a mocking bird"