கடைசியா போட்டு பார்த்தது

பழைய கண்ணாடிகள்

மத்தவங்க கண்ணாடி

If you have problems in viewing this page try this, in the menu bar goto View>encoding>select Unicode(UTF-8)

தமிழக இளைய சமுதாயத்தின் பார்வையில் தமிழீழம்.

"எழுந்திருடா ராஜீவ்காந்திய சுட்டுடாங்களாம்" என என் அம்மா எழுப்பிய ஒரு வெயிற்கால விடியல் தான் எனக்கு இலங்கை தமிழ் பிரச்சனை பற்றிய
முதல் ஞாபகம்.
என்னைப்போல பலர், குறிப்பாய் 1980களிலோ அதற்கு பிறகோ பிறந்தவர்களிடம் கேட்டு பாருங்கள், எங்களின் அறியாமை தெரியவரும். இஸ்ரேல் பாலஸ்தீனம் பற்றி அறிந்த அளவுகூட இலங்கை பிரச்சனை குறித்து அறிந்திருக்க மாட்டோம். ஏன்?

1. என்னதான் காரணம் சொன்னாலும் ராஜீவின் கோர கொலை புலிகளின் மிகப்பெரிய அரசியல் தவறு. அந்த கொடூரமும், அது தமிழ் மன்னில்
நடந்ததும் எங்கள் மனதில் அகல முடியாத ஒரு பதிவு.

2. இதையே காரணம் காட்டி, IPKF மூலம் கையை சுட்டுக்கொண்ட இந்திய அரசு இந்த பிரச்சனையை கைக்கழுவியது. இலங்கை செய்திகள்
இருட்டடிப்பு செய்ய பட்டன, அல்லது திரித்து கூறப்பட்டன.
15 வருட மூளைச்சலவை - பயன் இப்போது பார்கிறோம்.

இது எல்லாருக்கும் தெரிந்ததுதான், ஆனால் இதன் நீண்ட கால விளைவுகள் மிகவும் கலவரப்படுத்துபவை. இதோ இன்னுமொரு பேச்சு வார்த்தை, JVP எதிர்ப்பு என முடிவில்லாமல் தொடரும் இந்த பிரச்சனை இப்போதைய
தலைவர்களின் கையால் தீர்க்கபடும் என்பதற்கு ஒரு நல்ல நம்பிக்கையில்லை. இந்தியாவோ (அ) உலக நாடுகளின் உதவியோ இல்லாமல் இப்பிரச்சனை தீர்வது மிகவும் கடினம்.

அப்படியிருக்க, முடிவெடுக்க வேண்டிய அடுத்த தலைமுறை Decission Makers அறியாமல் இருப்பது நல்லதா? நாங்கள் பாதிக்க படாதவர்கள்,
உங்களுக்கு உதவ நாங்கள் தமிழர்கள் என்ற அடையாளம் மட்டும் போதாது அதுவும் அந்த அடையாளமே இப்போது அழிக்கபட்டு வரும்
இவ்வேளையில். உங்களின் வலி உணர்ந்தால் மட்டுமே எங்களின் சிந்தனை மாறும். எப்படி ?

உங்களை பற்றிய உண்மைகளை நிறைய ஆவணப்படுத்துங்கள். இனைய உலகின் இந்நேரத்தில் இந்திய அரசின் "மீடியா" ஒரு சிறு துளி. அதை
தாண்டி நீங்கள் கேட்க பட வேண்டும். குறும் படங்கள், வலைப்பதிவுகள், இனைய இதழ்கள், ஒரு சில தமிழ்/இந்திய இதழ்கள் (உண்மை சொல்பவை)
என எல்லாவற்றிலும் எழுதுங்கள். கவனம் - உண்மையை மட்டுமே எழுதுங்கள்...தவறுகள் உங்களுடையதாய் இருந்தாலும் 'அது ஒரு துன்பியல்' என நழுவாதீர். தன் தவறை மறைக்காதவன் வார்த்தைகளில் உண்மை அதிகமாய் இருக்கும் என்பது ஊர் அறியும்

அனைவரும் யுத்ததை வெறுக்கிறார்கள். அயுதம் தாங்கி நீங்கள் என்ன தான் உரக்க உண்மை பேசினாலும் ஆயுதத்தின் சத்தம் அதை கேட்கவிடாது. அதற்காக அடிப்பதை வாங்குங்கள் என கூற வில்லை. ஆரம்பிக்காதீர். குறைந்தபட்ச, எதிர் தாக்குதல் மட்டும் போதுமே. அவற்றையும் உலகம்
அறியவிடுங்கள். இண்டர்னேஷனல் மீடியாவிற்கு உங்கள் பிரதேசங்களை திரந்து விடுங்கள்.

யுத்தம் மக்களை புலம் பெயர்த்து விடுகிறது. எல்லாரும் போனபின் யாருக்காக சண்டை? மனிதர்கள் இல்லாத ஈடுகாட்டிற்கு தமிழீழம் என பெயர் வைத்து என்ன லாபம்? ஆய்த போராட்டதை விடுத்து மக்களின் போராட்டமாக இது மாற வேண்டியதை உணரவில்லையா நீங்கள்?

You should now have a two pronged approach. Short term one - to protect yourself incase of military oppression, Long term one to mould international opinion. இரண்டவதால் மட்டுமே தீர்வு ஏற்படும். முதலாவது ஒரு Stop gap மட்டுமே.

இவை என்னுடைய, மற்றும் என் நன்பர்களின் எண்ணங்கள்...Given the fact they are from a varying background, I am convinced that this would be the
general opinion in a large sample size also.

கன்னத்தில் முத்தமிட்டால் என ஒரு படம் வந்தது...சென்னையில் மிகவும் 'happening' தியேட்டரில் இரண்டுமுறை அதை பார்த்தபோது ஒரு
ஆச்சரியமான விஷயத்தை கவனித்தேன். படம் முடிந்தபின்னும் அந்த பாதிப்பில் நிறைய இளைஞர்கள் சிலையாய் சமைந்திருந்தனர். குறிப்பாய் சில பெண்கள் அழுவதை கூட என் நன்பன் எனக்கு காட்டினான். நம்புங்கள், கேட்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களை பயன் படுத்தாமல் இருப்பது உங்களுக்கே நஷ்டம்.

நாளை நல்லதாய் இருக்கட்டும்!

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 39 (show/hide)

39 Comments:

Anonymous Anonymous said...

சரியான ஆலொசனை; கேட்பார்களா?

2/26/2006 8:57 PM  
Anonymous Anonymous said...

கேட்க வேண்டும் என்பதே என் விருப்பம். நான் சொல்வதற்காக இல்லை, இப்போதைய சூழலில் இதுவே சிறந்த முயற்சியாய் தெரிகிறது. நல்லது நடந்தால் எல்லருக்கும் இன்பம். வந்தமைக்கு நன்றி அனானி, பெயரை விட்டு போயிருக்கலாமே.

By: நந்தன் | Nandhan

2/26/2006 9:02 PM  
Anonymous Anonymous said...

சும்மா வந்ததுக்கு ஒரு "+" போட்டுட்டேன்!

கடைசி வரிக்கு முன்னாடி இருக்கிற மூனு பத்திய தவிர்த்து மற்ற எழுத்துக்காக!

2/26/2006 9:14 PM  
Anonymous Anonymous said...

//உங்களை பற்றிய உண்மைகளை நிறைய ஆவணப்படுத்துங்கள். இனைய உலகின் இந்நேரத்தில் இந்திய அரசின் "மீடியா" ஒரு சிறு துளி. அதை
தாண்டி நீங்கள் கேட்க பட வேண்டும். குறும் படங்கள், வலைப்பதிவுகள், இனைய இதழ்கள், ஒரு சில தமிழ்/இந்திய இதழ்கள் (உண்மை சொல்பவை)
என எல்லாவற்றிலும் எழுதுங்கள். கவனம் - உண்மையை மட்டுமே எழுதுங்கள்...தவறுகள் உங்களுடையதாய் இருந்தாலும் 'அது ஒரு துன்பியல்' என நழுவாதீர். தன் தவறை மறைக்காதவன் வார்த்தைகளில் உண்மை அதிகமாய் இருக்கும் என்பது ஊர் அறியும்//

இது மிகச்சரியான ஆலோசனை என்பதுடனும், அவசியம் செய்யப்படவேண்டியது என்பதுடனும் நான் உடன்படுகிறேன்.

இன்றைய இலங்கை அரசின் வல்லாதிக்க நிலைப்பாட்டையும், இராணுவ நடவடிக்கைகளையும் நீங்கள் படிக்கும் நிலையில் ஆயுதப்போராட்டம் கைவிடப்படக்கூடியதாகவோ, முக்கியமற்றதாகவோ தெரிகிறதா? அப்படி ஆயுதப்போராட்டத்தை கைவிட யாராவது இந்தியத்தரப்பில் இருந்து வலியுறுத்தினால் அதன் நோக்கம் என்ன எனபதை உங்களால் புரிந்துகொள்ளமுடியும் என்று நம்புகிறேன்.
//கேட்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களை பயன் படுத்தாமல் இருப்பது உங்களுக்கே நஷ்டம்.//
உண்மை.
பதிவுக்கு நன்றி!

-தங்கமணி

2/26/2006 9:21 PM  
Anonymous Anonymous said...

நன்றி தங்கமனி, அனானி (இதுவும் தங்கமனியா?) ஆயுத போராட்டம் மட்டுமே முடிவை தராது. அது தற்காப்பிற்காக மட்டும் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கேன்.
3 பத்தி தவிர்த்தா? ஏன்? நான் எழுதியிருக்கும் அனைத்துக்கும் நானே பொறுப்பாளி. அந்த 3 பத்தி முட்டாள்தனமாய் இருந்தாலும் அது என்னுடைய கருத்தே. :)

By: நந்தன் | Nandhan

2/26/2006 9:34 PM  
Anonymous Anonymous said...

//இண்டர்னேஷனல் மீடியாவிற்கு உங்கள் பிரதேசங்களை திரந்து விடுங்கள்.//


எங்கு அடைக்கப்பட்டுள்ளதென்று சொல்ல முடியுமா? நடந்து முடிந்த ஜெனீவாப் பேச்சில்கூட தங்கள் பகுதிக்கு வந்து உண்மையை அறிந்து செல்லுமாறு புலிகள் உலகத்தைக் கேட்டிருக்கின்றனர். வராமலேயே வெளியிலிருந்து எழுதித்தள்ளுவதையிட்டு பலமுறை தமது விசனத்தைத் தெரியப்படுத்தியுள்ளனர்.

//'அது ஒரு துன்பியல்' என நழுவாதீர். //
இதற்கு மேல் எதை எதிர்பார்க்கிறீர்களென்று தெரியவில்லை.
என்னைப் போன்ற சாதாரணமானவர்கள் ஒத்துக்கொள்ளலாம். ஆனால் அதிகாரபூர்வமாக ஓர் அமைப்பு கருத்து வெளியிடுவதிலுள்ள சிக்கல்கள் தெரியுந்தானே?
மேலும் இந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்கனவே பலமுறை வலைப்பதிவுகளில் கேட்கப்பட்ட கேள்விதான் என்றாலும் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.

"துன்பியல் சம்பவம்" என்றாவது ஒரு தரப்பிலிருந்து வருத்தம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதைவிட ஆயிரம் மடங்கு துன்பம் விளைவித்தவர்களிடமிருந்து என்ன கருத்து வந்துள்ளது?
புலிகள் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று எழுதும் எவனுமே, இந்தியா ஈழத்தில் நடத்திய கொடுமைக்கு என்ன செய்தது என்று கேட்டுப்பார்த்துக் கொள்வது நல்லது. அல்லது தாங்கள் அதுமட்டில் என்ன கருத்தை வெளிப்படுத்தினோமென்றாவது சிந்திப்பது நல்லது.

ஓர் ஈழத்தவனாக மீண்டும் சொல்கிறேன்:

இந்தியா மன்னிப்பும் வருத்தமும் தெரிவிக்காதவரை, ஈழத்தமிழர் தரப்பிலிருந்து எந்த வருத்தமோ மன்னிப்போ தெரிவிக்கப்படக் கூடாதென்பது எனதும் என் போன்றவர்களதும் அவா.(இங்கே புலியெதிர்பொன்றே நோக்கமாகக் கொண்டதால் ராஜீவுக்காகக் (நீலிக்)கண்ணீர் வடிக்கவும் ஈழத்தவர் சிலர் இருக்கிறார்கள்) புலிகளின் "துன்பியல் சம்பவம்" என்ற கதைகூட சொல்லப்பட்டிருக்கக் கூடாதென்று கருத்துடையவன் நான். அப்படிச் சொன்னதற்கூடாக, புலிகள் இந்தியாவுக்குப் பணிந்து போனதாக விசனப்பட்டவன் நான்.
இதெல்லாம் மற்றவர்களுக்கு எவ்வளவு தூரம் விளங்குமென்று தெரியவில்லை. ஆனாலும் சொல்ல வேண்டிய இடங்களில் சொல்லிவிடுவது நல்லது.
(இதற்கு மேல் "தனியொரு அவில்தாரின் அரிப்பு" என்று பழம்பஞ்சாங்கம் பாடிக்கொண்டு வரும் கோமாளிகளுக்குப் பதிலளிக்க எண்ணமில்லை.)
*********************************
ஓரளவு புரிந்துணர்வுடனோ, நடுநிலைமையாகவோ எழுதப்பட்டதாகத் தோன்றும் உங்கள் பதிவுமேல் எனது இந்தப் பின்னூட்டம் கடுமையானதாக இருக்கலாம். ஆனால் இது உங்களுக்கானது மட்டுமன்று.

பெயருடனேயே எழுதுகிறேன்.
-வசந்தன்.-

2/26/2006 9:53 PM  
Anonymous Anonymous said...

அச்சச்சோ பேர் வரலியா...மறுபடியும் போடறேன்!

உங்களுடைய கருத்தை நான் முட்டாள்தனம் என்று கூறவில்லையே! அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதனாலும் அதற்கு முந்தைய பத்திகள் உண்மையை விளக்குவதாலும் அம்மூன்று பத்திகளை விலக்கிவிட்டு "+" போட்டுவிட்டு போனேன்!

போன தடவ ஊரு பேரு கட்டத்தை சொடுக்கலை!

By: pot"tea"kadai

2/26/2006 10:00 PM  
Anonymous Anonymous said...

நானும் ஒரு யாள்ப்பாணத்தவன் என்ற வகயில் 100% திருப்தி

2/26/2006 10:32 PM  
Anonymous Anonymous said...

//சரியான ஆலொசனை; கேட்பார்களா?//

அந்த ஆலோசனைகள், <<<உங்களை பற்றிய உண்மைகளை நிறைய ஆவணப்படுத்துங்கள். இனைய உலகின் இந்நேரத்தில் இந்திய அரசின் "மீடியா" ஒரு சிறு துளி. அதை
தாண்டி நீங்கள் கேட்க பட வேண்டும். குறும் படங்கள், வலைப்பதிவுகள், இனைய இதழ்கள், ஒரு சில தமிழ்/இந்திய இதழ்கள் (உண்மை சொல்பவை)
என எல்லாவற்றிலும் எழுதுங்கள். கவனம் - உண்மையை மட்டுமே எழுதுங்கள்.<<<

என்பதைக் குறிக்கிறதென்றால் சரிதான்.


ஏன் ஆயுதம் கைவிடப்பட முடியாது? ஆயுதம் இல்லாமல் ஏதாவது தீர்வு கிட்டுமா? இறுதித் தீர்வொன்று வந்தாலும் ஆயுதத்தைக் கைவிடுவது சாத்தியமா? என்பவற்றுக்கு இப்பதிவில் ஏதாவது விளக்கம் கிடைக்கிறதா பாருங்கள்.

மக்கள் போராட்டமென்பதற்கு என்ன விளக்கத்தைக் கொடுக்கிறீர்கள்?
இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு பிரகடனம் செய்கிறார்கள், ஒன்றல்ல இரண்டல்ல பலதடவைகள். வடக்கு - கிழக்கின் எல்லா பாகங்களிலும் இந்த தமிழ்த்தேசியப் பிரகடனம் நடக்கிறது. பொங்குதமிழ் என்ற பேரில் யுத்தம் நடந்தபோதே இலட்சம் பேர் திரண்டு போராடினார்கள்.
இராணுவ முகாம்களை அகற்று என்பதுட்பட பல கோரிக்கைகள். இவைகளெதுவும் மக்கள் கோரிக்கைகளாக உலகுக்கோ உங்களுக்கோ தெரியவில்லை.
ஏன் கனடாவில் பல்லாயிரம் பேர் கலந்து கொண்ட பொங்குதமிழோ, பெல்ஜியத்தில் பல்லாயிரம் பேர் திரண்டு மேற்கொண்ட தேசியப் பிரகடனமோ கண்ணுக்குத் தெரியவில்லை. (ஆனால் இருபது பேர் நடத்தும் பேரணி மட்டும் எல்லோருக்கும் தெரிகிறது.)

***நீங்கள் எதற்காக இந்த எடுத்துக்காட்டைச் சொன்னீர்களோ தெரியாது, கன்னத்தில் முத்தமிட்டாலைப் பார்த்துக் கண்ணீர் வடிப்பவனெல்லாம் ஈழத்தமிழரின் பிரச்சினையைப் புரிகிறானென்று கருத முடியாது. அதுவொரு உணர்ச்சிபூர்வமான சினிமா. இதே கதையை வேறெங்காவது நடப்பதாக மணிரத்தினம் எடுத்திருந்தாற்கூட இதே உணர்ச்சியோடு எல்லோரும் அழுதிருப்போம். அல்லது சரியான மொழிபெயர்ப்போடு எந்த மூலையில் போட்டாலும் அம்மக்கள் அழத்தான் போகிறார்கள். இங்கே 'ஈழத்தவர்க்கு இப்படியெல்லாம் நடக்கிறதே' என்று வருத்தப்படுபவர்களின் உணர்வைக் கொச்சைப்படுத்தவில்லை. மாறாக, ஒரு படத்தில் கிடைக்கும் அனுதாபத்தை, ஈழப்பிரச்சினையின் அரசியல் அபிலாசை வரை முடிச்சுப் போடுவதுதான் வேதனைக்குரியது. இதைவிட அப்படத்தின் மூலமான பல அனுதாபங்கள், ஈழத்தவரால் சினிமா பார்க்க முடியவில்லை, அவர்களுக்கு மின்சாரமில்லை, பிற இடங்களைப்போல் மகிழ்ச்சியான வாழ்க்கையில்லை என்ற அளவிலானவைதான்.

என்பார்வையில், ஈழப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்திலும், பொய்யையும் புரட்டுக்களையும் வைத்தும் எழுதுபவர்களெல்லாம் கன்னத்தில் முத்தமிட்டாலைப் பார்த்து அழாதவர்களென்றா நினைக்கிறீர்கள்?

***அறியவும் தெரியவும் நிறையப் பேர் ஆவலாயுள்ளார்களென்று நான் உணர்கிறேன். அதையிட்டு மகிழ்ச்சியுமடைகிறேன். ஆனால் அதற்கு நீங்கள் பாவித்த எடுத்துக்காட்டு சிக்கலானது.
மேலும் இவ்வெடுத்துக்காட்டுக்கூடாக, துன்பங்களையும், பட்ட கொடுமைகளையும் தான் வெளிப்படுத்துங்கள் என்ற ஆலோசனை சொல்வதாக யாரும் நினைத்துவிடலாம்.

அதைவிடுத்து ஆதாரச் சிக்கலை வெளிப்படுத்த வேண்டும்.
ஏன் ஆயுதப்போராட்டம் தொடங்கப்பட்டது?, அதற்கு முன் என்ன நடந்தது? ஆயுதம் தூக்க முன்னும் சரி, பின்னும்சரி, ஏற்பட்ட தீர்வுகளுக்கு என்ன நடந்தது?
என்பன குறித்து ஏற்கனவே சில புத்தகங்கள் வந்துள்ளன. இவற்றைவிடச் சிறப்பாக யாரும் வலைப்பதிவில் எழுதிவிட முடியாது. அதற்கான தரவுகளோ தகவல்களோ திரட்ட முடியாது.
இப்புத்தகங்களில் சிலவற்றைப்பற்றி பத்ரி, மதி கந்தசாமி வலைப்பதிவுகளில் எழுதப்பட்டதாக நினைவு.

இவ் இனச்சிக்கல் இப்போதுதான் தொடங்கப்பட்டதா?
ஈராயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து உருவேற்றப்பட்டுக்கொண்டு வரும் தமிழருக்கெதிரான சிங்களக் கருத்தியலை எதிர்கொண்டு யாராவது பேச்சு மூலம் தீர்வு ஏற்படுத்த முடியுமா?
என்ற கேள்விகளில் தற்போதைய நிலையில் எது தீர்வு என்பதற்கான விடையுள்ளது.

2/26/2006 10:44 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

மேலே நீண்ட பின்னூட்டமெழுதியது நான்தான்.
பெயர் வராதது உங்கள் வலைப்பதிவின் கோளாறு.
எனவே புளொக்கரின் பின்னூட்டப் பக்கத்துக்குள்ளால் அதை உறுதிப்படுத்தியொரு பின்னூட்டம்.

2/26/2006 10:46 PM  
Anonymous Anonymous said...

>>> 1980களிலோ அதற்கு பிறகோ பிறந்தவர்களிடம் கேட்டு பாருங்கள், எங்களின் அறியாமை

சரியாகச்சொன்னீர்கள்.... சிறிது நாட்களுக்கு முன், கல்லூரி நண்பர்கள் எங்களின் மின்ஞ்சல் குழுமத்தில் பெரும் விவாதத்திற்கு உட்பட்ட தலைப்பு இது.

பிரச்சனையின் வலி நாங்கள் உணர்ந்தது, எங்களுடன் படித்த புலம் பெயர்ந்த ஈழத்தமிழன் நண்பன் ஒருவன் மூலம்தான்...

By: யாத்திரீகன்

2/27/2006 2:41 AM  
Anonymous Anonymous said...

யாத்திரீகன், வசந்தன், யாள்ப்பாணத்தவன் நன்றி.
சில விளக்கங்கள்
1. அந்த திரைப்பட உதாரணம் மக்களின் (இளைஞர்களின்) மனதில் இன்னமும் ஈரமும் நெகிழ்தலும் இருக்கு என்பதற்காக. அதுவும் ஒரு ஈழத்தை பற்றிய படம் என்பதால் அதை எழுதினேன். உங்களின் போராட்டத்தை எவ்வகையிலும் கொச்சை படுத்த அல்ல,
2. சில புத்தகங்களை தேடி படித்தேன். சில புத்தகங்களை படிக்க ஆவல் (Saturday Review Sivanayagam) ஆனால் அவை இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ கிடைக்கவில்லை. ஐரோப்பாவில் இருந்து வரவைக்க செலவு பிடிக்கிறது. இதுவே ஒரு நல்ல உதாரணம்...நாடி வருபவர்கள் இத்தனை செலவு செய்ய சொன்னால் நமக்கேன் என சென்று விடுவர். அவர்கள் தங்களுக்கு 'கூறப்பட்டவை'விட்டு உங்களிடம் வருவதே மிக பெரியது. அந்த சந்தர்பத்தை இப்படி அறுவடை செய்யாமல் இருப்பது சரியா? உங்களின் உண்மையை உணர நீங்கள் தான் Large scale/easily reachable வழிகளை செய்து தரவேண்டும்.
சில கேள்விகள்
1. 'இதற்கு மேல் என்ன International opinion' என்றே இதுவரை பார்த்த பதிவுகள் சொல்கின்றன. Hard work always pays, if it hasnt paid you havent worked hard enough
2. திறந்து வைத்திருந்தால் ஏன் அவை இன்னும் எழுதப்படவில்லை? சில வருடங்களுக்கு முன் புலித்தலைவர் பேட்டியின் போது மட்டும் எப்படி கூட்டம் கூடிற்று?
3. டில்லியின் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைக்காக அவையில் மன்னிப்பு கேட்டது எங்கள் அரசு. தவறு என உணர்ந்தபின் அவன் கேட்கட்டும் நான் கேட்கிறேன் என்பது என்ன ஞாயம்? அதுவும் தேவை உங்களுக்கு என்றபோது.
4. ஆயுத போராட்டம் தேவையில்லை என கூற இந்தியர்களை தவிர உரிமை உள்ளவர்கள் யார்? எங்களின் வரலாற்றை அறிந்தவர் தானே நீங்க்ள்?

By: நந்தன்

2/27/2006 5:02 AM  
Anonymous Anonymous said...

//ஆயுத போராட்டம் தேவையில்லை என கூற இந்தியர்களை தவிர உரிமை உள்ளவர்கள் யார்? எங்களின் வரலாற்றை அறிந்தவர் தானே நீங்க்ள்?
//

'உரிமை' என்பதற்குப் பதிலாக 'அருகதை' என்ற சொல்லைப் பாவித்திருக்க வேண்டுமோ?
மிகக்கொடூரமான நகைச்சுவை இதுதான்.
அப்போ தொடக்க காலத்தில் இயக்கங்களுக்கு ஆயுதம் கொடுத்தது, ஆயுதப்பயிற்சிகள் கொடுத்தது, சண்டைக்கு உதவி செய்ததெல்லாம் இந்தியா இல்லையோ? அல்லது அதெல்லாம் அகிம்சை வழியென்று நினைத்துக்கொண்டுதானா அவ்வளவும் செய்தது? எட. இந்தியா உதவி செய்திருக்காட்டி உவங்கள் நாலைஞ்சு துவக்கை வைச்சுச் சுட்டுப்போட்டு ஏலாம கடசியில அகிம்சைக்கு வந்திருப்பாங்கள் எண்டு சும்மா ஒரு வாதத்துக்காவது சொல்லியிருக்கலாம். இப்போது ஆயுதப்போராட்டமின்றி தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்கலாமென்று சொல்வதற்கு இந்தியாவைவிட்டால் யாருக்கு உரிமையிருக்கிறதென்று சொல்ல எப்படி உங்களுக்கு மனசு வருகிறதோ தெரியவில்லை. இதையெல்லாம் நகைச்சுவையாக நினைத்துச் சிரிக்க முடியவில்லை.
ஏனென்றால் பலரும் அச்சொல்லைப் பாவித்திருக்கிறார்கள்.
ஆனால் இக்கேள்விக்குள்ளால் என்ன சொல்ல வருகிறீர்களென்று தெரியவில்லை.
ஏன் உங்களளவுக்குக்கூட எதுவும் செய்யாமல் சிறுதுரும்பைக் கூடப் பொறுக்கிப்போடாமலேயே சும்மா இருந்து காலாட்டக் கிடைத்ததுதான் சிறிலங்காவுக்கான வெள்ளையனின் சுதந்திரம்.
ஆக தமிழரும் காலாட்டிக்கொண்டிருந்தால் எல்லாம் கிடைக்குமென்று சிங்களவன் சொல்லாவிட்டாலும் நீங்கள் சொல்வீர்கள் போலுள்ளது.

முதலில் இந்திய சுதந்திரப்போராட்டத்தையும் ஈழப்போராட்டத்தையும் எப்படி ஒப்பிடுகிறீர்களென்று தெரியவில்லை. மிகமிகச் சிறுபான்மையெதிரிக்கு எதிரான மிகமிகப்பெரும்பான்மை சுதேசிகளின் போராட்டம் தான் இந்தியப்போராட்டம். அதைவிட எங்கோ தூரதேசத்திலிருந்து வந்து ஆக்கிரமித்துக்கொண்டிருந்த பிற அரசுக்கெதிரான போராட்டம். ஆக்கிரமிப்பென்பது வெளிப்படை.
இவற்றில் எதை ஈழப்போராட்டத்தோடு ஒப்பிட முடியும்?
இந்தியாவுக்கான சுதந்திரம் முழுக்க முழுக்க அகிம்சையாற் கிடைத்தது என்று சொல்லிக்கொண்டிருப்பதைவிட மோசமான நகைச்சுவை, அதை ஈழப்போராட்டத்துக்குப் பரிந்துரைப்பது.

வெள்ளையனுக்கும் இந்தியாவுக்குமான பகை என்ன? எவ்வளவு காலம்?
ஆனால் ஈழத்தமிழனுக்கும் சிங்களவனுக்குமான பிரச்சினை எவ்வளவு காலமென்று தெரியுமா?
ஈராயிரமாண்டு காலப் பிரச்சினை. அந்த ஈராயிரமாண்டுகாலம் தமிழருக்கெதிரான துவேசத்தை ஊட்டிஊட்டி வளர்த்தெடுக்கப்பட்ட சிங்கள இனத்துக்கும் அதன் பேரினவாதச் சித்தாந்தத்துக்குமெதிரான போராட்டம் தான் ஈழப்போராட்டம். (இது பற்றி இன்னும் விளக்க, தமது வரலாற்று நூலாக இன்றுவரை சிங்களவராற் சொல்லப்படும் மகாவம்சக்கதை கொண்டு எழுத வேண்டும். முடிந்தால் இச்சுட்டியில் ஏதாவது கிடைக்கிறதா பாருங்கள்.) இவற்றில் எந்த ஓர் இளையிலும் நெருங்க முடியாத இந்தியச் சுதந்திரப்போராட்டத்தின் ஓர் உபாயமான அகிம்சையை ஈழத்துக்குப் பரிந்துரைப்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனம்?

சரி. ஈழத்தில் அகிம்சையே பயன்படுத்தப்படவில்லையா?
ஆயுதம் ஏந்த முதல் என்ன நடந்தது?
வெள்ளையன் நாட்டைவிட்டுப்போக முன்பேயே போராட்டம் தொடங்கிவிட்டது. அன்றிலிருந்து ஆயுதமேந்தும் வரை, (ஆயுதமேந்திய பின்னும்கூட) அகிம்சைதான் போராட்ட வழி. இடையிலே எத்தனை இனப்படுகொலைகள்? எத்தனை ஆயிரம் பேரைக் காவு கொடுத்தோம்?
இடையில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் சிறிது நாட்களிலேயே கிழித்தெறியப்பட்டன. யார் கேட்டது?
இன்று 'சட்ட முராணானது, தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது' என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் ஒப்பந்தத்தை முறிக்கவோ கிழித்தெறியவோ எந்தச் சிங்களவனுக்கும் துணிவில்லையென்றால் என்ன காரணம்?
ஏன் இந்தியாவுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதிருந்து அகிம்சையிற் போராடிய இரு உயிர்களை இழந்தோமே?
என்ன தீர்வு?
அவர்கள் கேட்டதில் எந்தக் கோரிக்கையாவது நியாயத்துக்குப் புறம்பானதாயிருந்ததா? இதையெல்லாம் பார்த்த ஒருவனிடம் நீங்கள் "இந்தியாவின் அகிம்சையை"ப் போதிக்கலாமா?
இப்போது உங்கள் கேள்வியையே திருப்பிக் கேட்கிறேன்.
அகிம்சை பற்றி ஈழத்தமிழனுக்குப் போதிக்க இந்தியாவுக்கு என்ன அருகதை இருக்கிறது?
விடை தெரிந்தாற் சொல்லுங்கள்.
(கேள்வி கடுமையானதென்றாலும் உங்களின் அறிவுரைக்கு இப்படிக் கேட்பது சரியே)

*******
புத்தகங்கள் பற்றிய உங்கள் ஆதங்கத்தைப் புரிந்து கொண்டேன். இது தொடர்பில் தனிப்பட்டு நான் செய்ய ஏதுமில்லை. இப்புத்தகங்களுக்குச் சட்ட ரீதியாக இந்தியாவில் என்ன சிக்கலென்று தெரியவில்லை. இல்லாத பட்சத்தில் புத்தகவெளியீட்டாளர்கள் இதுபற்றிக் கவனத்திலெடுக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவில் இப்புத்தகங்கள் இப்புத்தகங்கள் மட்டில் சிக்கல்கள் இருக்க நியாயமில்லையே?
********
////தவறு என உணர்ந்தபின் அவன் கேட்கட்டும் நான் கேட்கிறேன் என்பது என்ன ஞாயம்? அதுவும் தேவை உங்களுக்கு என்றபோது.////

தவறு என்று நீங்களல்லவா சொன்னீர்கள்? இப்போது என் தலையில் தூக்கிப் போடுகிறீர்களே?
"அதுவும் தேவை உங்களுக்கு என்ற போது" என்ற இடத்தில்தான் இந்திய மேலாதிக்கம் வெளிப்படுகிறது. ஆக, தவறென்று இந்தியா உணர்ந்தாலும் வருத்தமோ மன்னிப்போ கேட்கப்போவதில்லை. யாருக்குத் தேவையிருக்கிறதோ அவர் எசமானிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்படித்தானே? இதில் நியாயம், நேர்மை எல்லாம் எங்கே வந்தது?

-வசந்தன்.-

2/28/2006 7:24 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

//திறந்து வைத்திருந்தால் ஏன் அவை இன்னும் எழுதப்படவில்லை? //

-வசந்தன்.-

ஏன் போகவில்லை. போவதை யார் தடுக்கிறார்கள்?
இந்தியப் பத்திரிகைகள் கூட வன்னி சென்று வந்து கட்டுரைகள் எழுதியுள்ளனவே. பிபிசி, சி.என்.என், றொய்டர் என்ற பன்னாட்டுச் செய்தித் தாபனங்களும் போய்வந்து எழுதியுள்ளனவே? நீங்கள் வாசிக்கவில்லை போலுள்ளது. புலிகளின் வங்கி பற்றி, காவல்துறை பற்றி, நிர்வாக சேவை பற்றி, திரைப்படத்துறை பற்றி, சட்டப்பிரிவு - நீதிமன்றங்கள் பற்றி என பலவாறாகப் புகழ்ந்தும் நிறையக் கட்டுரைகள் வந்துள்ளன. தமிழீழக் காவல்துறை, திரைப்படத்துறையைப் பற்றி பி.பி.சி சிறப்பு நிழ்ச்சியே செய்தது. அதைவிட சுனாமி மீட்புப் பணிகள் பற்றி நிறைய பன்னாட்டு ஊடகங்கள் புகழ்ந்து எழுதியுள்ளனவே. அதுவும் நேரடியாக பாதிக்கப்பட்ட புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து.
புலிகள் தங்கள் பகுதிக்கு வரச்சொல்லிப் பலகாலமாகவே பகிரங்க அழைப்பு விட்டுக்கொண்டு தானே இருக்கிறார்கள்?

யுத்த நேரத்தில் 1999 இல் ஐரோப்பியப் பெண் பத்திரிகையாளரொருவர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வர முயற்சித்து அரச தரப்பால் அனுமதி மறுக்கப்பட்டது. பின் அப்பெண்மணி களவாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து சில நாட்களில் மீண்டும் தெற்கு நோக்கிச் செல்கிறார். அப்போது இராணுவத்தினர் அப்பெண் மீது பதுங்கித்தாக்குத்லொன்றை மேற்கொண்டார்கள். கொல்லும் நோக்கோடு தாக்குதல் மேற்கொண்டாலும் அப்பெண்மணி காயத்தோடு தப்பிக் கொள்கிறார். பின் அனுராதபுரம் வைத்தியசாலையில் தனக்கு நடந்தவையுட்பட பல தகவல்களை அப்பெண்மணி வெளயிட்டார்.

புலிகளின் பகுதிக்குச் செல்பவர்களைத் தடுப்பதும், அவர்களை இல்லாத பொல்லாதவற்றைச் சொல்லி வெருட்டுவதும் அரசதரப்பாற் செய்யப்படும் வேலைகள்.

2/28/2006 7:34 AM  
Blogger நந்தன் | Nandhan said...

வசந்தன் என்னுடையவை முழு அறியமையால் வரும் கேள்விகள், அறிந்துக்கொள்ளும் ஆவலுடன் கேட்க படுபவை. சிறு குழந்தைகளின் கேள்விகள் போன்றதே. அதை மதித்து பதிலளித்தமைக்கு நன்றி. மற்றபடி உங்கள் போராட்டத்தை கொச்சை படுத்தும் நோக்கம் எனக்கில்லை.

1. Saturday review Sivanayagamத்தின் புத்தகம் இங்கே எங்கு கிடைகிறது?
2. இவற்றை தவிர மேலும் தகவல் அறிய என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்? Honest opinions please, சில பதிவுகள் பிரச்சார பீரங்கியாய் உள்ளன. சார்புதன்மை கூடாது என கூறவில்லை தனி மனித வழிபாடுகளாய் இருந்தால், எனக்கு கொஞ்சம் நம்பிக்கையின்மை வந்துவிடும்
3. "மன்னிப்பு கேட்க கூச்ச படாதீர்கள், அதுவும் தேவை இருக்கும் போது கொஞ்சம் கூட" இதில் எந்த Big Brother approach'ம் இல்லை. என் வாழ்வில் நான் உணர்ந்து தெளிந்த பாடம். உங்கள் பதிலை படித்தப்பின் தான் இப்படியும் ஒரு அர்த்தம் இருப்பது தெரிந்தது.
4. ஈழத்தின் ஆரம்ப கால அஹிம்சை போரட்டங்களை பற்றி சிறிது படித்துள்ளேன், ஆனாலும் அவை ஆயுதப்போரட்டங்களால் over-shadow செய்யப்பட்டுவிட்டனவே.
5. "அருகதை", சரியான சமயத்தில் வார்த்தை கிடைக்கவில்லை :(
6. இந்திய சுதந்திர போராட்டமும், உங்களுடையதும் ஒப்பிடவில்லை, அஹிம்சை உன்மையாகவே நல்ல ஆயுதம். ஆரம்பகாலங்களில் எப்படியோ இப்போழுது உங்களுக்கென ஒரு following, உலக அளவில் ஒரு முகவரி/பரிச்சயம்/அங்கிகாரம் (வார்ததை கிடைக்கவில்லை) வந்த பிறகு கூட ஏன் அயுத போரட்டம்?
7. போகிறார்களா? சில வருடங்களுக்கு முன் புலித்தலைவர் பேட்டியின் போது மட்டும் எப்படி கூட்டம் கூடிற்றே அப்படி ஒரு மீடியா அட்டேன்ஷன் என் இல்லை? அதைக்கொண்டு வர என்ன முயற்சிகள் செய்யபடுகின்றன?
9. எல்லாரும் போற்றி எழுதுகிறார்கள், சீரான அரசு அங்கு இயங்குகிறது என்றால் இன்னும் ஏன் புலம் பெயர்ப்பு? மக்கள் திரும்புகிறார்களா? வெளியில் கிடைக்கும் வசதிகளும் வாய்புகளும் கிடைக்காது தான்...ஆனாலும் பரவாயில்லை என பொகிறார்களா? ஒரு ஆர்வத்தில் கேட்கிறேன்.
8. என்னுடைய இந்த பதிவின் மூலம் நீங்கள் கண்டிப்பாய் எங்கள் அறியாமையை அறிந்திருப்பீர். உன்மையை சொல்லவேண்டும் என்றால் நான் தான் என் நன்பர்கள் வட்டத்தில் இதைப்பற்றி ஒரு அளவு அறிந்தவன்...நானே இப்படி எனில்...நீங்கள் செய்யவேண்டியது எவ்வளவு என தெரிந்திருக்கும். அதுவே இப்பதிவின் நோக்கம்.
9. உங்களுக்கு நாங்கள் எப்படி உதவமுடியும்? *****ஆயுத போராட்டத்தை தவிர****
10. கடைசியாய் ஒரு கேள்வி - புலம் பெயர்ந்த இரண்டாவது, மூன்றாவாது தலைமுறையினரின் கருத்துக்கள் எவ்வாறு உள்ளன? Are they alienated from your cause?

வந்தமைக்கு நன்றி

2/28/2006 4:08 PM  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Nanthan,

Sivanayagam's book could be purchased here

-Mathy

3/01/2006 4:09 AM  
Anonymous Anonymous said...

//எல்லாரும் போற்றி எழுதுகிறார்கள், சீரான அரசு அங்கு இயங்குகிறது என்றால் இன்னும் ஏன் புலம் பெயர்ப்பு? மக்கள் திரும்புகிறார்களா? வெளியில் கிடைக்கும் வசதிகளும் வாய்புகளும் கிடைக்காது தான்...ஆனாலும் பரவாயில்லை என பொகிறார்களா? ஒரு ஆர்வத்தில் கேட்கிறேன்//
போரினால் உண்டான புலம்பெயர்வு பெரும்பாலும் இப்போது முடிந்து விட்டது.
இந்தியாவுக்கு மட்டும் போர் மூளும் பதட்டமுள்ள சமயங்களில் சில தற்காலிக
இடம்பெயர்வுகள் நிகழ்கின்றன.அவை சிறிய காலப் பகுதியில் திரும்பி விடும் எண்ணத்தில்
நிகழ்பவை.
இப்போது வெளிநாடுகளுக்கு நிகழும் புலம்பெயர்வு பெரும்பாலும் பொருளாதாரம் சார்ந்தது.
மற்றும் குடும்ப ஒன்றிணைவு, திருமணம் சார்ந்து நிகழ்பவை.இவற்றை புலம்பெயர்வு எனக்
குறிப்பது சரியா தெரியவில்லை.

சென்ற வாரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு முன்பிருந்த பதட்ட நிலையில் ஈழத்திலுள்ள
மக்கள் பாதுகாப்பான பகுதிகளெனக் கருதி, புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்துக்கே
இடம்பெயர்ந்தார்கள்.அது ஈழச் செய்திகளை சரியாக கவனித்து வந்திருந்தால் அறிந்திருப்பீர்கள்.
//சில வருடங்களுக்கு முன் புலித்தலைவர் பேட்டியின் போது மட்டும் எப்படி கூட்டம் கூடிற்றே அப்படி ஒரு மீடியா அட்டேன்ஷன் என் இல்லை? அதைக்கொண்டு வர என்ன முயற்சிகள் செய்யபடுகின்றன?//


அப்படியொரு பத்திரிகையாளார் மாநாட்டை அடிக்கடி கூட்டுவதில் பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளன.
தவிர தயா மாஸ்டர், தமிழ்ச்செல்வன் போன்றோர் அடிக்கடி பத்திரிகையாளர்களைச்
சந்தித்தே வருகின்றனர்.தமிழீழ நிர்வாகத்தை, அவர்கள் அரசை யாரும் சென்று பார்வையிடலாம்.
சில மாயைகளால் அங்கு போவோர் தொகை தான் குறைவாக இருக்கிறது.
சமீபத்தில் தமிழகத்திலிருந்து ஓவியர் புகழேந்தி, மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா போன்றோர் சென்று வந்திருந்தனர்.

அங்கு சென்று வந்த பத்திரிகையாளர்களின் கட்டுரைகளுக்கான சுட்டிகள் இங்கே:
http://www.tehelka.com/story_main11.asp?filename=Ne041605tiger_rising.asp

தமிழ்கவி அம்மாவின் பேட்டி:
http://www.tehelka.com/story_main11.asp?filename=hub041605_the_tigers_claw.asp

Chicagotribuneனிலும் ஒரு கட்டுரை வந்திருந்தது.சுட்டியைத் தேடவேண்டும்.

முடிந்தால் 'புத்தரின் பெயரால்'(In the name of Buddha) திரைப்படத்தைப் பார்க்கவும்.அது க.மு.வை விட
ஈழப் பிரச்சினையைக் கொஞ்சம் தெளிவாகச் சொல்ல முற்பட்டது எனலாம்.

பி.சி.

3/01/2006 4:59 AM  
Anonymous Anonymous said...

//எல்லாரும் போற்றி எழுதுகிறார்கள், சீரான அரசு அங்கு இயங்குகிறது என்றால் இன்னும் ஏன் புலம் பெயர்ப்பு? மக்கள் திரும்புகிறார்களா? வெளியில் கிடைக்கும் வசதிகளும் வாய்புகளும் கிடைக்காது தான்...ஆனாலும் பரவாயில்லை என பொகிறார்களா? ஒரு ஆர்வத்தில் கேட்கிறேன்.//

போரினால் உண்டான புலம்பெயர்வு பெரும்பாலும் இப்போது முடிந்து விட்டது.
இந்தியாவுக்கு மட்டும் போர் மூளும் பதட்டமுள்ள சமயங்களில் சில தற்காலிக இடம்பெயர்வுகள் நிகழ்கின்றன.அவை சிறிய காலப் பகுதியில் திரும்பி விடும் எண்ணத்தில்
நிகழ்பவை.
இப்போது வெளிநாடுகளுக்கு நிகழும் புலம்பெயர்வு பெரும்பாலும் பொருளாதாரம் சார்ந்தது.
மற்றும் குடும்ப ஒன்றிணைவு, திருமணம் சார்ந்து நிகழ்பவை. இவற்றை புலம்பெயர்வு எனக்
குறிப்பது சரியா தெரியவில்லை.

//போகிறார்களா? சில வருடங்களுக்கு முன் புலித்தலைவர் பேட்டியின் போது மட்டும் எப்படி கூட்டம் கூடிற்றே அப்படி ஒரு மீடியா அட்டேன்ஷன் என் இல்லை? அதைக்கொண்டு வர என்ன முயற்சிகள் செய்யபடுகின்றன?//

சென்ற வாரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு முன்பிருந்த பதட்ட நிலையில் ஈழத்திலுள்ள
மக்கள் பாதுகாப்பான பகுதிகளெனக் கருதி, புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்துக்கே
இடம்பெயர்ந்தார்கள்.அது ஈழச் செய்திகளை சரியாக கவனித்து வந்திருந்தால் அறிந்திருப்பீர்கள்.


அப்படியொரு பத்திரிகையாளார் மாநாட்டை அடிக்கடி கூட்டுவதில் பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளன.
தவிர தயா மாஸ்டர், தமிழ்ச்செல்வன் போன்றோர் அடிக்கடி பத்திரிகையாளர்களைச்
சந்தித்தே வருகின்றனர்.தமிழீழ நிர்வாகத்தை, அவர்கள் அரசை யாரும் சென்று பார்வையிடலாம்.
சில மாயைகளால் அங்கு போவோர் தொகை தான் குறைவாக இருக்கிறது.
சமீபத்தில் தமிழகத்திலிருந்து ஓவியர் புகழேந்தி, மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா போன்றோர்
சென்று வந்திருந்தனர்.

அங்கு சென்று வந்த பத்திரிகையாளர்களின் கட்டுரைகளுக்கான சுட்டிகள் இங்கே:
http://www.tehelka.com/story_main11.asp?filename=Ne041605tiger_rising.asp

தமிழ்கவி அம்மாவின் பேட்டி:
http://www.tehelka.com/story_main11.asp?filename=hub041605_the_tigers_claw.asp

Chicagotribuneனிலும் ஒரு கட்டுரை வந்திருந்தது.சுட்டியைத் தேடவேண்டும்.

முடிந்தால் 'புத்தரின் பெயரால்'(In the name of Buddha) திரைப்படத்தைப் பார்க்கவும்.அது க.மு.வை விட
ஈழப் பிரச்சினையைக் கொஞ்சம் தெளிவாகச் சொல்ல முற்பட்டது எனலாம்.

பி.சி.

3/01/2006 5:03 AM  
Anonymous Anonymous said...

மிக அருமையான கருதுரையாடல்கள் நன்தன் அவர்கள் கூறியதுபோல் ஈழத்தமிழர் பிறச்சனையை பற்றி பேசகூட நன்பர்கள் வட்டாரதில் ஆள் இருக்காது, அதைபற்றி பெச ஆரம்பித்தாலே எல்லோறும் அமைதியகிவிடுவார்கள் நிலமை இப்படி இருக்கும் போது ஊடகஙளின் மூலமக இக்கருதுகளை
மக்களிடம் கொண்டு செல்வது மிக அவசியமான ஒன்று. ஆயுத போரட்டதை கைவிடுஙள் என்று தமிழ் நாட்டில் இருந்துகொண்டு சொல்லிவிடலாம். ஆனால் நிலமை வெரு அகிம்சை போரட்டதின் தொடர்சியகதான் ஆயுத போரட்டம் நடந்தேறி இருக்கின்றது.
ஈழ பிறசனை பற்றிய விடயதில் இ ந்தியா மிக கடுமையாகவே நடந்துள்ளது குறிப்பிட தக்கது,
குறிப்பாக அமைதிபடையை அனுப்பிய காலகட்டதில் அது தனது முகதில் சேட்றை வாரி பூசிகொண்டது. நான் இ ந்தியன் என்பதில் எப்பொழுதுமே பெருமை கொள்பவன். ஆனால் அந்த விடயதில் நாம் வெட்கி தலைகுனியதான் வேண்டும்.

3/01/2006 7:16 AM  
Anonymous Anonymous said...

பின் வரும் சுட்டியில், நல்ல புத்த்கம் இருகின்ரது.
http://uthr.org/BP/Content.htm

3/01/2006 9:53 AM  
Blogger நந்தன் | Nandhan said...

மதி, அனானி, பிசி. அனைவருக்கும் நன்றி. நீங்கள் சுட்டிய தகவல்களை படித்து பார்க்கிறேன். மறுபடியும் இப்பிரச்சனை குறித்து எழுதுவேன்.

3/02/2006 4:17 AM  
Anonymous Anonymous said...

இன்றைய காலக்கட்டத்தில், என் போன்ற இளைஞர்களின் இப்பிரச்சனை பற்றிய கருத்து, "அது அவர்கள் உள்நாட்டு விவகாரம், அதை அவர்களே தீர்த்துக்கொள்வார்கள். இதில் நமக்கு வேலை இல்லை". நானாவது கருத்தாவது சொல்லும் நிலையில் இருக்கிறேன், என் நண்பர்கள் அந்த அளவுக்குக்கூட "" பண்ணுவார்களா என்று தெரியவில்லை. ஈழத்தமிழர்கள் நம்மிடமிருந்து உதவி எதிர்பார்க்கிறார்களா என்று தெரியாது.

3/02/2006 1:35 PM  
Anonymous Anonymous said...

ஒர் அருமையான கருத்தாடல். தலைமுறை களாய் அடக்கப்பட்ட ஒரு சமூகத்தின் குரலாய் வசந்தனின் பதிவும், தன்னினத்து மக்கள் சமுகத்தின் வலியை சரிவர உணரமுடியாத சகோதரத்தின் தவிப்பு நந்தனின் எழுத்திலும் தெரிந்தது. உறவுகள் புரிந்துகொள்ள இதுகூட நல்ல ஆரம்பமே.... தொடரட்டும்; ஆக்கபூர்வமான கருத்தடல்..

By: malainaaddaan

3/02/2006 1:46 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

நந்தன் பின்பு ஆறுதலாக எழுதுகிறேன்.
இந்தச் சுட்டியில் நோர்வேக் காரர் ஒருவர் எழுதிய கட்டுரையொன்றுள்ளது. நேரமிருந்தால் வாசித்துப் பாருங்கள்.

Building the Tamil Eelam State:

3/02/2006 1:49 PM  
Anonymous Anonymous said...

அருமையான கருத்தாடல்

3/02/2006 1:58 PM  
Anonymous Anonymous said...

http://www.tamilcanadian.com/pageview.php?ID=884&SID=178
http://www.news.tamilcanadian.com/archives/

3/02/2006 2:25 PM  
Anonymous Anonymous said...

nandha,

ur article was good...but wanted to leave some comments..all the violence from sri lanka to iraq to other places only reaffirms my belief in non violence. when u fight violence with violence, it only multiplies the problem rather than solving it. When the world's most powerful country like US whose defence spending is the sum of spending of most of other country's defence, it tells how much powerful countries invest in to rule the world with violence rather than work for peace. The point is that the powerful always oppresses the less powerful with violence and the world today is getting to a point where the power centers are the ones which encourage countries to buy more and more arms. As these powerful countries start investing more and more in defence, their economy runs on arms and for these countries to sustain they have to keep selling arms to less powerful countries which is basically nothing but exporting violence.

Gandhi showed to the world how to win over the opposition by refusing to fight and refusing to yield. So if we powerless need to win over them, it could only come through non violence and there is need for more stronger non violent people movements in places like Ealem. Though my comments r not mainly abt Ealem, it holds true for every place and every just cause. It was good to see some students of a university in jaffna deciding to fight the army's brute force with non violence after army attacked them.

Reg. international interference, it can only be a supporting stucture whereas the real pressure for the government needs to come from within the country through non violent people movements. This is not only for the success but also for the success to sustain.
indian democracy is built on these values and that is why we still can see so many movements in India able to take on corporates and some of the brutal police force and make goverments and corporates pay for their mistakes thou it is only few. yes, there r so many groups that takes up violence even in India but can we try to name atleast a few of them who were successful?? but we can name so many people movement's efforts which has resulted in wonderful laws like Right to Info. thro non violence.

3/02/2006 4:03 PM  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

This comment has been removed by a blog administrator.

3/02/2006 5:04 PM  
Anonymous Anonymous said...

வசந்தன் சுட்டிக்கு நன்றி!
-தங்கமணி

3/02/2006 6:06 PM  
Blogger நந்தன் | Nandhan said...

இதை இதை தான் நான் எதிர்பார்த்தேன். உங்களுடைய தகவலுக்களுக்கும், புத்தகங்ககளை பற்றிய தொடர்புகளுக்கும் நன்றி. முன்னரே சொன்னது போல படித்துவிட்டு மறுபடியும் எழுதுகிறேன்.
மலைநாடான், வசந்தன், மதி, மற்றவர்களுக்கும் நன்றி.
நிறையபேரு பெயரை விடாமல் போயிட்டீங்க...வந்தமைக்கு நன்றி.

3/02/2006 6:29 PM  
Blogger நந்தன் | Nandhan said...

இதைப்படியுங்கள்

3/02/2006 7:48 PM  
Anonymous Anonymous said...

the 3 paras above in english were written by me..comments/ critics welcome

jayaram

3/02/2006 9:01 PM  
Anonymous Anonymous said...

ஒரு அருமையன கருத்தாடல் தமிழ் நாட்டுக்காரர்கள் சிக்கலான ஈழபிரச்சனையை புரிந்து கொள்வார்கள் எனபது கானல் நீர் இது எனது அனுபவம்.

3/03/2006 1:33 AM  
Anonymous Anonymous said...

ஒரு அருமையன கருத்தாடல் தமிழ் நாட்டுக்காரர்கள் சிக்கலான ஈழபிரச்சனையை புரிந்து கொள்வார்கள் எனபது கானல் நீர் இது எனது அனுபவம்.

3/03/2006 1:36 AM  
Anonymous Anonymous said...

துன்பியல் சம்பந்தமாக........
ஒரு விடுதலை இயக்கத் தலைவரிடமிருந்து இதை விட வேறு எதை எதிர்பார்க்கிறீர்கள? இது கூட தேவையில்லை என்று தான் நானும் கூறுவேன்.

கன்னத்தில் முத்தமிட்டால் பற்றிய வசந்தனின் வாதத்துடன் முற்று முழுதாக ஒத்துப் போகிறேன்.
-Paavai

3/03/2006 3:33 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

நந்தன்,
நிர்வாகம் சிறப்பாக இயங்குகிறது என்பதற்கும் மக்களனைவரும் திரும்பி வருவதற்கும் நேரடியாக சம்பந்தமில்லை. மக்களின் இடப்பெயர்வும் புலம்பெயர்வும் நிர்வாகப்பிரச்சினையால் வந்ததல்லவே?
யுத்தம் தொடங்கப்போவது கிட்டத்தட்ட உறுதி. இந்த நிலையில் மீண்டும் யுத்தம் தொடங்கும்போது பழையபடி வன்னிமீது பொருளாதாரத் தடை, மருந்துத் தடை என்று எல்லாத்தடையும் வரத்தான் போகிறது. பழையபடி பனடோலுக்குக்கூட வழியில்லாமல் இருக்கும் நிலை வரலாம். (எந்தத் தடை போட்டாலும் அந்தளவு மோசமான நிலை இனி வராது என்றே நினைக்கிறேன்). எரிபொருட்களில்லாமல் சைக்கிளும் நடையுமே மக்களின் வாகனமாகலாம். இப்போது மிகச்சில பகுதிகளுக்கு மட்டும் கிடைக்கும் மின்சாரம் முற்றாக நிறுத்தப்படும். தொலைபேசி வசதியும் இருக்கப்போவதில்லை.
அதைவிட அரசபடைகளால் வன்னி குண்டுவீசி நாசம் செய்யப்படும். முன்பு போலில்லாமல் இடப்பெயர்வுக்கான சாத்தியங்கள் குறைந்திருக்கிறதென்றாலும் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு யுத்தத்தின் கோரம் பெரிதாகவே தெரியும்.

வெளியில் வாழும் மக்கள் இந்த நிலைக்குள் வாழ முற்படப்போவதில்லை.
எனவே இறுதித்தீர்வு கிட்டும்வரைக்கும் புலம்பெயர்ந்தோர் மீளத்திரும்புதலைப் பற்றி யாரும் எதிர்பார்க்க முடியாது.

3/03/2006 4:34 PM  
Anonymous Anonymous said...

Nandan and all others.

Learned a lot from the discussion.Thanks very much for all the article links. I will send all this links to my friends who are interested in Eelam issue.

By: Gopalan Ramasubbu

3/03/2006 6:39 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

நீங்கள் புலம்பெயர்ந்த இளைய சமுதாயம் பற்றிக் கேட்டிருந்தீர்கள்.
உண்மையில் எனக்கு இன்னும் அவர்களுடன் ஆழமான பரிச்சயமில்லை.
எனவே உறுதியாக எக்கருத்தும் கூறமுடியாது.
ஆனால் ஈழத்துக்கு ஒருமுறையாவது போய்வந்தவர்களிடத்தில் பெரும் மாறுதலைப் பார்த்திருக்கிறேன். இந்த யுத்தமற்ற காலத்தில் வெளிநாட்டில் பிறந்தவர்கள் ஒருதடவையாவது தாயகத்துக்குச் சென்று வரவேண்டுமென்பதே என் அவா.
இதனுடன் சம்பந்தப்பட்டு ஏற்கனவே எழுதிய பதிவொன்று.

3/03/2006 8:03 PM  
Anonymous Anonymous said...

துன்பவியல் சம்பவம் என்றால் தமிழகத்து மக்களுக்கு புரியவில்லை போலும்?

3/06/2006 11:10 PM  

Post a Comment

<< Home

மூக்குக்கண்ணாடி

இந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம் தாத்தவோட சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு

கண்ணாடிக்கு பின்னாடி

பிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...
சாப்ட்வேர்- தொழில். சினிமா, புத்தகம்,எழுத்து - ஆர்வம்
இன்னும் தெரியனுமா?