சோம்பேறியின் சிறு குறிப்புகள்
***சமைப்பதை விட சாப்பிடுவது பிடித்தமானது என்று நினைப்பவர்கள் மேலே படிக்கலாம்****
மிட்டாயும் பொம்மைகளும் நிரம்பிய ஒரு மாளிகைக்குள் நுழைந்த சிறுவனை போல் இருக்கிறது. சென்னையில் எங்கள் பகுதி அரசினர் கிளை நூலகத்திற்கு தவறாமல் போயிருந்தாலும், இங்கே இருக்கும் கிளை நூலகம் என்னை சற்றே பேராசை கொண்டவனாக்குகிறது. எதை எடுக்க எதை விடுக்க என்றே தெரியவில்லை...ஆசை மிகுதியில் முதல் முறை 6-7 புத்தகங்களை ஒன்றாய் தூக்கிக்கொண்டுவந்து $$ஆய் கட்டனம் கட்டினேன் :)
அதான் இருக்கிறீர்களே...நல்ல புத்தகங்களை சிபாரிசு செய்யுங்களேன். இங்கே ஆங்கிலம் தான் கிடைக்கிறது. எனக்கு fiction பிடிக்கும். சொல்லுங்கள், இமெயில் எழுதுங்கள்
எழுதுவதை விட படிப்பது சுலபமாய் இருக்கிறது. மிக குறைவாகவே எழுதினாலும் தமிழ்மணத்தை படிக்க தவறுவதில்லை. இப்போதெல்லாம் நான் பத்திரிக்கைகளை படிப்பதே இல்லை. தமிழ்மணமே எனது வெளியுலக வாசலாகிவிட்டது. நல்ல நல்ல விஷயங்களை வந்தாலும் சில சில்மிஷங்கள் தாங்க முடியவில்லை. அதுவும் இந்த என் சாமி பெரிசு உன் சாமி பெரிசு சண்டை இருக்கே...
வெளிய வாங்க நண்பர்களே கிணறுகளை விட உலகம் ரோம்ப பெரிசு :)
படிப்பதைவிட பார்ப்பது மிகவும் சுலபாயிருக்கிறது. தமிழ்மணத்தில் இருந்து திரட்டிய தகவல்களோடு netflixயின் புன்னியத்தில் சலிக்காமல் சினிமா பார்க்கிறேன். - நல்ல சினிமா பார்க்கிறேன். எல்லாவற்றையும் பற்றி எழுத வேண்டும்.
முதலாவதுக்கு அவ்வளவாய் வரவேற்பில்லை. இன்னும் ஜனரஞ்சகமாய் எழுதனும்.
பல நாள் ஆசை நிறைவேறியது back to back LOTR பார்த்தேன். TBSயில் இப்போது தொடர்ந்து போட போறதாய் கேள்வி.
ஹும் இன்னைக்காவது ஜிம்க்கு போகனும். சமைக்கனும். பிரிஜ் காலியாயிருக்கிறது...Pizza கூப்பிடலாமா?
போவதற்கு முன் இன்றைய ஜோக்:
"ஒவ்வோரு குடுப்பத்திற்கும் இலவச கலர் டிவி" - தி.மு.க தேர்தல் வாக்குறுதி. அதுவும் 'For womens' recreation and general knowledge'.
ஏதுங்க இவங்க சேனல்ல வருதே அழுகாச்சி General knowledge அதுவா?
மூக்குக்கண்ணாடி
இந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம்
தாத்தவோட
சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு
கண்ணாடிக்கு பின்னாடி
பிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...
சாப்ட்வேர்- தொழில். சினிமா,
புத்தகம்,எழுத்து - ஆர்வம்
இன்னும் தெரியனுமா?