கடைசியா போட்டு பார்த்தது

பழைய கண்ணாடிகள்

மத்தவங்க கண்ணாடி

If you have problems in viewing this page try this, in the menu bar goto View>encoding>select Unicode(UTF-8)

ஒரு படம், ஒரு புத்தகம்

சினிமாவும் புத்தகமும் என் ஆர்வம்ன்னு சொன்னேன் இல்லையா அதனால ஒரு பதிவு அதுக்கு கொடுக்கலாம் :) ஹூம் மேட்டர் இல்லைன்னா எப்படியெல்லாம் பூசி மொழுக வேண்டியிருக்கு... உனக்கு மிகப் பிடித்த படம் / புத்தகம் எதுன்னு? நம்மள எப்ப கேட்டாலும் உடனே எடுத்துவிட ஒரு லிஸ்ட் இருக்கும். கல்கி, அன்பே சிவம், மனிரத்னம்ன்னு..நம்ம பல பேரோட லிஸ்ட்டும் கிட்ட தட்ட ஒத்து போகும்.

அப்படி என்னோட லிஸ்ட்ல இருக்கிற ஒரு படம் : La Vita e Bella - Life is beautiful . ஒரு புத்தகம் : Jonathan Livingston Seagull. பீட்டர் இல்லைங்க, நாம இது மாதிரி பாக்கறதே நாலு படம் தான் அதை பத்திக்கூட சொல்லலைனா தமிழ்மணத்தில இருந்து என்ன பிரோயோஜனம்? (மத்த படி 'பொம்பளைன்னா...' , 'காதல்ன்னா...' என வசனம் ஆரம்பிக்காத படமெல்லாம் படமா?)

Life is Beautiful:
உலகையே உலுக்கின கோர காலகட்டமான Holocaust , இரண்டாம் உலகப்போர் பற்றி பல படங்கள் வந்திருக்கு. நிறைய எழுதப்பட்டிருக்கு. ஆனா அவையெல்லாம் அந்த கோரங்களை காட்சிப்படுத்தி தான் அதனால ஏற்பட்ட துயரங்களை சொன்னார்கள். ஆனால் இந்த படம் ஒரு சொட்டு ரத்ததை கூட காட்டாமல், வயலன்ஸ் என்பதே கொஞ்சம் கூட இல்லாமல் நாஜிகளின் யூத வேட்டைய சொல்லுது.

இத்தாலிய மொழியில் La Vita e Bella என்ற பெயரில் முதலில் வந்து, ஆங்கிலத்தில் Life is beautiful என டப் செய்யப்பட்டு, 3 ஆஸ்கர்களை வென்ற இப்படத்தை ரோபெர்டோ பெனிக்னி எழுதி, இயக்கி, நடித்திருக்கார். நம்ம கமலஹாசன் கனக்கா இவரு சினிமால செய்யாத வேளையே இல்லைன்னு சொல்லலாம்- பின்னனி பாடுவது உட்பட. (டி.ஆர்? வேண்டாமே) இவருடைய எல்லாப் படங்களும் நகைச்சுவை படங்களே.

வாழ்க்கை அழகானது (தமிழ்ல அதானே) படமும் அப்படி நகைச்சுவையோடே ஆரம்பிக்குது. கிராமத்துல இருந்து பட்டனத்துக்கு வர குய்டோ (Roberto Benigni) ஒரு குறும்புக்கார, வெள்ளந்தி மனுஷன். முக்கியமா அவர் ஒரு யூதர். பட்டனத்துல ஒரு ஜெர்மனிய அம்மையார் டோராவை (Nicoletta Braschi) கண்டவுடன் காதல். அவங்க பெரிய குடும்பம், இவரோ ஒரு சாதரண பணியாளார். இவர்களிடையே மெல்ல பூக்கற காதலை நிறையவே நகைச்சுவையோட சொல்லிருப்பாங்க. கடைசில டோராவோட குடும்பம் ஏற்பாடு செய்ற கல்யாணத்தப்போ குய்டோ வந்து டோராவை தூக்கிட்டு போயிடறார், குதிரையிலே! Nicoletta Braschi, Roberto Benigniயின் நிஜ வாழ்க்கை மனைவியும் கூட :)


சந்தோஷமான குடும்பத்துக்கு சாட்சியா இவங்களுக்கு ஒரு துறு துறு பையன் - ஜொஷ்வா (Giorgio Cantarini) பிறக்கிறான். ஜொஷ்வாவோட ஐந்தாவது பிறந்த நாளப்போ, நாஜிகள் வந்து குய்டோவையும், ஜொஷ்வாவையும் Concentration camp தூக்கிட்டு போகிறார்கள். அடம் பிடித்து அவர்களுடன் சேர்ந்து போகிறாள் டோரா. குய்டோவுக்கு எல்லாம் புரிகிறது. தாம் எங்கே போறோம், என்னவாகப் போகிறோம் என எல்லாம் தெரிந்தும், தன் மகன் மனம் உடையக்கூடாதே என்ற ஒரே காரணத்துக்காக ஒரு பொய் உலகத்தை எழுப்புகிறான். அதாவது, குய்டோவும் ஜொஷ்வாவும் ஒரு பெரிய விளையாட்டை விளையாட போவதாகவும், அதில் வெற்றி பெறுபவர்க்கு நிஜமான ராணுவ டாங்கி கொடுக்கப் படும் என்றும் சொல்கிறான். காம்பில் நடக்கும் கொடுமைகளை , அம்மாவை பிரிந்திருப்பதை, சாப்பாடு கிடைக்காத நிலை, ஒளிந்து ஒளிந்து வாழ வேண்டிய கட்டாயம், நாஜி ராணுவம் என எல்லாமே விளையாட்டின் அங்கமாய் திரித்து கூறுகிறான். ஜொஷ்வாவின் கேள்விகளை, காம்ப் விதிகளை எல்லாம் விளையாட்டின் விதிகளாய் மாற்றி குழந்தையை கசப்பான உண்மையிடம் இருந்து பாதுகாக்கிறான். இவை அத்தனையும் நகைச்சுவை உணர்வுடன் கூறப்பட்டிருந்தாலும், இந்த அப்பாவிகள் மாட்டிக் கொண்டிருக்கும் துயரத்தை நினைத்து மனம் கஷ்டப்படாமல் இருக்க முடியவில்லை. தம்மைக் கொல்லத்தான் கூட்டிக்கொண்டு போகிறார்கள் என தெரிந்தபின்னும், ஜொஷ்வாக்காக அதையும் திரித்துக் கூறி, கோமாளி நடையுடன் குய்டோ போகும் போது இதயம் கனக்கிறது. தன் மகனுக்காக தன்னுடைய பயம், உயிரைப் பொருட்படுத்தாது அந்த தந்தையாடும் நாடகம், பார்ப்பவர் மனதை நெகிழ வைக்கும்.
எத்தனையோ துயரங்கள் வந்தாலும் நாம் நேசிக்கும் சிலருக்காக அதை தைரியமாக எதிர் கொள்ளும் மனிதம் இருக்கும் வரை Life is beautiful என்பதில் சந்தேகமே இல்லை!

இப்படி Holocaustஐ வித்தியாசமான முறையில் கொடுத்தற்காக பெனிக்னி பெரிதும் பாரட்டப்பட்டார். சிலர் மக்களின் துயரத்தை நையாண்டி செய்திருக்கிறார் என சாடினார்கள். படம் முழுக்க நகைச்சுவையாய் கூறப்பட்டிருப்பது அந்த துயரத்தை மேலும் தூக்கியே காட்டுகிறது என்பது என் எண்ணம். நீங்கள் என்ன நினைக்கறீங்க?

Jonathan Livingston Seagull
பறப்பது பறப்பதற்காகவே என என்னும் ஒரு கடற்பறவையின் கதை. Richard Bach அவர்களின் எழுத்தில் மிக பிரபலமான ஒரு புத்தகம் இது. Bachஇன் மற்ற புத்தகங்களைப் போலவே இதுவும் பறப்பதையும், தத்துவத்தையும் கருவாய் கொண்டது. ஜோனதன் தம் கூட்டததில் உள்ள மற்ற சீகள்களைப் போல இல்லாமல் பறப்பதில் மென்மேலும் நிபுனத்துவம் அடைவதையே வாழ்க்கை குறிக்கோளாய் கொண்ட பறவை. பாரதியின் வரிகளில் - '...பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என' நினைக்காத பறவை.

ஒரு சீகள்லின் உடல் ரீதீயான தடைகளையும் மீறி உயரமாய், வேகமாய் பறக்க முயற்சிக்கிறது ஜொனாதன். பல முறை தோல்வியை தழுவுகிறது. சில காலம் 'செ இது நமக்கு தேவையா? மற்றவர்களைப் போல 'தேடி சோறு நிதம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி' வாழ முடிவு செய்தாலும் அதனுள் இருக்கும் அந்த அக்னிக் குஞ்சு அதை மீண்டும் மீண்டும் முயற்சிக்க வைக்கிறது. போராடி கொஞ்சம் கொஞ்சமாய் பறக்கும் கலையை கைதேறும் போது, இது போன்ற ஊரோடு ஒத்து வாழாத குனத்துக்காக கூட்டத்தை விட்டே தள்ளி வைக்க படுகிறது.

மனம் நொந்து போகும் ஜொனாதனை வேறு ஒரு கூட்டம் சேர்த்துக் கொள்கிறது. அது பல 'ஜோனதன்'களின் கூட்டம். பறக்கும் கலையை இன்னும் திறம்பட கற்றுக் கொள்ளும் ஜோனதன் அந்த கூட்டத்திற்கு தலைமையேற்று பின்னர் ஒரு கால கட்டதில், தம்மைப் போன்ற 'out law'க்களை ஆதரிக்க மீண்டும் தன்னுடைய பழைய கூட்டத்திற்கே செல்கிறது.

"Jonathan is that brilliant little fire that burns within us all, that lives only for those moments when we reach perfection. " என்கிறார் Bach.

நூறு பக்கத்திற்கும் குறைவான புத்தகம். மிஞ்சிப் போனால் 2.30 மனி நேரத்தில் படித்து விடலாம். Excelletnly methaphorical approach. மனதினுள் ஒரு நெருப்பை வைத்துக் கொண்டு சாதிக்க துடிக்கும் அனைவரும் படிக்க நான் பரிந்துரை செய்வேன். எப்போதேல்லாம் மனம் சோர்வடைகிறதோ அப்போதெல்லாம் ஒரு முறை இதைப் படித்தால் புது வேகம் வரும். பாரதியின் கவிதைகளைப் போல.

பின்னர் திரைப் படமாக வந்து ஆஸ்கர் போட்டியிலும் கலந்து கொண்டது என்பது மேலதிக்க தகவல். இதன் soft copy இனையத்தில் கிடைக்கிறது. வேண்டுமென்றால் இமெயில் மூலம் அனுப்பி வைக்கிறேன்.

Bachன் மற்ற புகழ் பெற்ற புத்தகங்கள் : Illusions - Adventures of Reluctant Messiah, Bridge across forever.

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 12 (show/hide)

12 Comments:

Blogger நாகை சிவா said...

ஒரே பீட்டரா இருக்கு. ஒன்னும் புரியலை.
நம்ம தமிழ் புத்தகம், திரைப்படத்தை பத்தி எழுதுனீங்கா, எதாவது கொஞ்சம் புரியும்

5/17/2006 11:45 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

//படம் முழுக்க நகைச்சுவையாய் கூறப்பட்டிருப்பது அந்த துயரத்தை மேலும் தூக்கியே காட்டுகிறது என்பது என் எண்ணம். //
உங்க கண்ணாடி போட்டு படிச்சா அப்படித் தான் தோணுது.. படம் பார்த்தாதாங்க தெரியும்

5/17/2006 11:55 PM  
Anonymous Anonymous said...

Jonathan Livingston Seagull: This is really a mind blowing book...it helped me a lot when i was in depression..Thanks a lot for letting me knw abt this book...

5/18/2006 12:29 AM  
Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

லைப் இஸ் பியுட்டிபுல் அருமையான படம்.

கடைசியில் நேச நாட்டுப் படைகள் யுத முகாமில் சிறுவனை மீட்கும் சமயம் ஒரு டாங்கில் சிறுவனை ஏற்றிக் கொள்ள அந்த டாங்கை தான் வென்று விட்டதாக காண்பிக்கும் காட்சி அருமை.

கதா நாயகனின் இடுக்கண் வருங்கால் நகுக என்பது போன்ற கதாபாத்திரம், நாயகன் நாயகி காதலை படத்தின் நடுவே காண்பிப்பது போன்றவைகள் குறிப்பிடத்தக்கது.

அருமையான படம் எல்லோரும் காண வேண்டிய படம்.

5/18/2006 1:32 AM  
Anonymous Anonymous said...

படமென்பதால்;Life is Beautiful பார்த்தேன்; நாயகனின் நடிப்புப் பிரமாதம்! அச் சிறுவனின் தேர்வு பிரமிக்க வைத்தது. மிகச் சோகமான முடிவு! மனம் கனத்தது;
ஆங்கல அறிவு புத்தகம் படிக்குமளவுக்கு இல்லை. படிப்பதில்லை!
யோகன்
பாரிஸ்

5/18/2006 5:09 AM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

அருமையான நட்சத்திர பதிவு. வாழ்த்துக்கள்.

5/18/2006 6:53 AM  
Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

நந்தன், இந்தப் படமும் பார்த்திருக்கிறேன். புத்தகமும் (ஜானதன்) படித்திருக்கிறேன். உங்களைப் போன்றே இரண்டும் எனக்கும் பிடித்திருந்தது.

சோகமான ஒரு நிகழ்வை உணர்ச்சிவயப்படச் சொல்லியிருந்த முறை அருமை. உள்ளத்தைத் தொட்ட ஒன்று.

சீகல் புத்தகமும் சில ஆண்டுகள் கழித்து மறுபடி வாசிக்கும்போது புதிதாய்ப் படிப்பது போல் இன்னும் அதிக ஒட்டுதலைத் தந்தது. நமது சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறான கருத்துக்களை முன்வைத்து ஏற்றுக் கொள்வது உங்களைப் பொறுத்தது என்று சொல்வது போன்ற புத்தகம்.

5/18/2006 7:04 AM  
Blogger நந்தன் | Nandhan said...

நாகை சிவா,
அதான் டிஸ்களைமரெல்லாம் போட்டு எழுதியிருக்கேனே ;)
மத்தபடி, இதை பார்த்து, படித்தீர்கள் என்றால், பீட்டரெல்லம் இல்லை, ரொம்பவே எளிமையான படைப்புகள் என தெரியவரும் முயலுங்கள்

பொன்ஸ், உங்க கண்ணாடி போட்டு பார்த்தே சொல்லுங்கள்.

5/18/2006 8:08 AM  
Blogger நந்தன் | Nandhan said...

rums, Thanks.

குமரன் எண்ணம்,
என்னை மிகவும் கவர்ந்தது அந்த சிறுவன் பாத்திரமே. இன்னொசென்ஸ் ரொம்ப அழகு.

5/18/2006 8:13 AM  
Blogger நந்தன் | Nandhan said...

johan-paris,
//மனம் கனத்தது; //
ஒவ்வொருமுறையும் கண்ணில் நீர் கொத்துக் கொள்ளும் எனக்கு. அதே சமயம் ஒரு ஆறுதலும், கடைசி வரை அந்த சிறுவன் இந்த கொடுமைகளை அறியவில்லையே என்று.
சோகம் என்பதை விட நெகிழ்வு என்பேன்

//ஆங்கல அறிவு புத்தகம் படிக்குமளவுக்கு இல்லை. படிப்பதில்லை!//
விளையாடுகிறீர்களா என தெரியவில்லை .எப்படியிருந்தாலும் முயற்சிக்கலாமே, இது ஒன்றும் தவறில்லையே. இது படமாகவும் வந்துள்ளது, நான் பார்த்ததில்லை

5/18/2006 8:21 AM  
Blogger வவ்வால் said...

வணக்கம் நந்தன்!
ஜொனதன் லிவிங்ஸ்டன் சீகல் புத்தகம் படிச்சேன் அதும் இந்தியா இன்று(டுடே கு தமிழ்!!??) வாரப்பத்திரிக்கைக்கு சந்தா செலுத்தினப்போ கூட இலவசமா தந்தாங்க அதான் படிச்சேன் காசு கொடுத்து வாங்கிப் படிகிற அளவு அறிவுப்பசி இன்னும் வரலைண்ணா! அதும் பக்கத்துல அகராதிலாம் வச்சுகிட்டு தான் வாசித்தேன்! ஆனாலும் நமக்கு என்னமோ அது கூடவே தந்த பாலோ கோலோ வின் "தி அல்கெமிஸ்ட்"( ரசவாதி?) நல்லா இருந்தாப் போல என்னம்.மாஜிக்கல் ரியலிசம் (மந்திர உண்மை?) வகையானதுனு ஒருத்தர் சொன்னார் அப்போ.ரொம்ப எளிமையான எழுத்து நடை.அப்புரம் அவரோட தாத்தா,அப்பா,பேரக்குழந்தைகளுக்கான கதை நு ஒரு தொகுப்பும் படிச்சேன்.நல்லா புரிஞ்சது ,ஆன ஜொனாதன் தான் கொஞ்சம் படுத்திட்டார்!

படத்த பத்தி நம்ம கருத்து எதும் சொல்றா போல இல்லை.திரை அரங்குள அகராதிப் படிக்க வசதிப்படாதுனு ஆங்கிலப்படங்கள் பார்ப்பது அரிது!

5/18/2006 5:06 PM  
Blogger நந்தன் | Nandhan said...

வவ்வால்,

என்னமோ நக்கலடிக்கிறீங்க என்று புரிகிறது. என்ன என்று தான் புரியல.

ரசவாதிய நானும் படிச்சேன், ஆனா இது மிகவும் பிடித்திருந்தது.

ரசவாதி, 'டிடர்மினிஸ்டிக்'ஆக இருந்ததாலோ என்னெம்மோ!

நன்றி

5/18/2006 8:56 PM  

Post a Comment

<< Home

மூக்குக்கண்ணாடி

இந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம் தாத்தவோட சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு

கண்ணாடிக்கு பின்னாடி

பிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...
சாப்ட்வேர்- தொழில். சினிமா, புத்தகம்,எழுத்து - ஆர்வம்
இன்னும் தெரியனுமா?