கடைசியா போட்டு பார்த்தது

பழைய கண்ணாடிகள்

மத்தவங்க கண்ணாடி

If you have problems in viewing this page try this, in the menu bar goto View>encoding>select Unicode(UTF-8)

அன்னவெறி கண்ணையனின் பாடம்

நீங்க நிறைய பேரு பாய்ஸ் படம் பார்த்திருப்பீர்கள். பல/பலான காரணங்களுக்காக அந்த படம் பெரிய நன்மதிப்பை பெறவில்லை. ஆனாலும் அதுல செந்தில் அன்னவெறி கண்ணையன் என்ற பெயரில் ஒரு சின்ன பாத்திரம் (cameo) செய்திருப்பார். மண்டபத்துல உட்கார்ந்த எடத்துல இருந்தே, அவர்கிட்ட வேலைக்கு இருக்கிற பையன விட்டு கோயில் கோயிலா போய் அன்னதான பிராசாதம் வாங்கி வரவைச்சு சாப்பிடுவார். எங்க எப்போ என்ன சாப்பாடு (அ) பொருள் ஓசில கிடைக்கும்ன்னு ஒரு டைரி வச்சிருப்பார். ஒரு அருமையான டைலாக்கூட உண்டு "Information is wealth. Information தான் என் மூலதனம்."

இது இதுதான் இன்னைய தேதில மென்பொருள் துறையில் பத்திக்கிட்டு எரியற பயன்பாடு (application). அட சோறு போடற தொழில பத்தி ஒரு பதிவுல கூட பேசலனா எப்படி? ரொம்ப ஜல்லியடிக்காம இது என்னன்னு பார்ப்போமா..
நம்ம முடிவெடுக்கிற செயலை கொஞ்சம் தள்ளி நின்னு பாருங்களேன், எப்படி எதனால நாம ஒரு முடிவெடுக்கறோம்? உதாரணத்துக்கு நெருப்ப பார்த்தா ஒடனே அது மேல தண்ணி தெளிச்சு அனைச்சுடறோம், நெருப்ப கையால கூட தொடறதில்ல. எப்படி? நெருப்பை தொட்டா கை சுடும். நெருப்ப அனைக்க தண்ணி ஊத்தலாம் போன்ற தகவல்கள், சின்ன வயசுல எங்கேயோ, எப்படியோ நம்மகிட்ட வந்தடையுது அந்த தகவல் தான் நாம பிற்காலத்துல ஒரு முடிவே எடுக்க உதவுது.

இந்த தகவல்கள் நம்ம கிட்ட நெரடியாகவோ இல்லை தொடர்புடைய தகவல்களிருந்து தருவிக்க பட்டதாகவோ (derived facts) இருக்கலாம். இப்படி தகவல்கள் மேல் கட்டப்படுவது தான் நம்முடைய அறிவு மற்றும் பழக்கம் (conditoning). நம்முடைய எல்லா முடிவுகளும் அறிவாலும், பழக்கதாலும் எடுக்கப் படுபவை தான். ஆக முடிவெடுக்க முக்கியமான தேவை தகவல்.

இப்போ நாம கனினிக்கு வருவோம். இதுவரைக்கும் தொழில் துறையில் கனினியோட மிகப்பெரிய பயன்பாடு Transaction processing எனப்படும் தொழில் செயல் முறைகள் தான். நம்ம ATM மெஷின்களை எடுத்துகிட்டோம்னா பயனாளர் கனக்குல இருந்து கேட்ட தொகையை கொடுக்கிறது. பயனாளர் கணக்கில இருக்கிற பாக்கியை அதற்கேற்றாற்போல குறைக்கிறது என அன்றாட தொழில் செயல்களை செய்கிறது. சுருக்கமா சொல்லனும்னா இப்போதைக்கு கனினி ஒரு தொழிலாளியின் செயலை செய்யுது. அப்படி பட்ட செயல்கள் மூலம் தினம் நிறைய தகவல்கள் கனினிக்கு வருது/போகுது. ஆனா அந்த தகவல்கள் தொழில்முறையோட by-productஆ மட்டுமே இருக்கு. அந்த தகவல்கள் மூலம் புதுசா வெற ஏதும் செய்ய முடியுமான்னு ஆராய்வதில்லை. (அதோட வேலையும் அதில்லை).

இதுவே வங்கியோட மெனேஜர் என்ன செய்வார்...ஒரு வருடத்துல எவ்வளோ பணம் பட்டுவாடா ஆகியிருக்கு. எந்த ஏரியால நிறைய பேரு பணம் எடுக்கறாங்க. பணம் எடுக்கறவுங்களோட முகவரி வச்சு எத்தின பேரு வீட்டை விட்டு 5 கிமி தள்ளி வந்து பணம் எடுக்க வேண்டியிருக்கு, அவங்க வீட்டு பக்கதிலேயே இன்னொரு வங்கி கிளை நிறுவினால் எத்தனை பேர் பயண்படுவார்கள் என்பது போன்ற தொழிலை வளர்க்க (அ) மேம்படுத்த வேண்டிய முடிவுகளை எடுக்கிறார். இந்த முடிவுகளுக்கு தேவையானது என்ன? தகவல்!

நம்ம ATM மெஷின் மூலம் கிடைக்க பெறுகிற தகவலகளை நாம இப்படி பட்ட முடிவெடுக்க பயன்படுத்தலாமில்லையா? நாம எப்படி தகவல்கள் மூலமாய் ஒரு முடிவெடுக்கிறோமோ அதையே கனினியை வைத்து செய்யலாமில்லையா? குறைந்த பட்சம் நமது முடிவை substantiate செய்யவாவது உபயோக படுத்தலாமே. அதாவது தொழிலாளி மட்டுமில்லாமல் மேலான்மையாளரோட வேலையையும் கனினி மூலமாவே செய்யவைக்கலாம். Making computers make [suggest] business decissions.

வருட கணக்கில் கனினியை பயன் படுதும் நிறுவனங்கள் தகவல் சுரங்கதையே வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களிடம் இருக்கும் தகவல்கள் உடனே பயன் படுத்த முடியாதபடி இருக்கும், அவற்றிற்காண சில காரணங்கள் இதோ
  1. ஒரே நிறுவனத்தின் பல பிரிவுகள் தகவல்களை வெவ்வேறு மாதிரியாய் சேமித்து வைத்திருப்பார்கள் (Different Logical model)
  2. தகவல்கள் தொழில் நுட்ப ரீதியில் வெவ்வேறு வடிவில் சேமிக்க பட்டிருக்கலாம் (Different data base systems)
  3. தகவல்கள் வெவ்வேறு இடத்தில் சேமிக்க பட்டிருக்கலாம் (separated by Distance)
  4. குறிப்பிட்ட கால அளவுக்கான தகவல்கள் மட்டும் வைத்துக்கொள்வது (No historic data)

இப்படிப் பட்ட பன்முகத் தகவல்களை ஒன்று படுத்தி திறமையான வியாபார முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்கலாம்! இதையெல்லாம் செய்ய ஒரு புதிய அப்ளிகேஷனை உபயோக படுத்துகிறார்கள். அதை அழகாய் Business Intelligence என அழைக்கிறார்கள்.

இந்த புதிய வகை பயன்பாடோட முக்கிய உள்ளமைப்புகள் இவை

  1. நேரம், தூரம், தொழில்நுட்பம் ஆகியவற்றால் பிரிந்திருக்கும் தகவல்களை சமசீர் செய்தல் - Data cleansing
  2. இந்த தகவல்களை அலசுவதற்கு இலகுவாக, தொழில் கண்ணோட்டதில் (business perspective) தொகுத்தல் - Data intergration, Data transformation
  3. இவற்றை ஒரே தகவல் களஞ்சியமாய் அமைத்து, பாதுகாத்தல் - Data warehouse
  4. அந்த களஞ்சியத்திலிருக்கும் தகவல்களை ஆராய்வத்ற்குரிய பானியில் தருதல், ஆராய்தல்-Analytical processing
  5. மேல் பார்வைக்கு தெரியாத அரிய தகவல்களை தோண்டி எடுத்தல் (Data mining)

இவ்வகை Business Intelligence systems மூலம் வணிக, தொழில் நிறுவனங்கள் மிகவும் பயனடைகின்றன. முக்கியமான பயனாளர்கள் இவை...ஆங்கிலத்திலேயே கொடுக்கிறேன்....நான் தமிழ் படுத்தி உங்களை சோதிக்க வேண்டாமே :)
1.Product placement and marketing
2.Stop loss, Opertional efficiency improvement
3.Supply chain , sourcing analysis
4.Logistics and Retailing

இது கனினியின் பயன்பாட்டில் முக்கியமான மைல்கல். கனினியை ஒரு தளத்திலிருந்து இன்னோரு தளத்திற்கு கொண்டு செல்கிறது. இதைவிட சில ஆச்சர்யபடும் முன்னேற்றங்கள் இருந்தாலும் இதை மைல்கல்லென கருதுவது எதனால்?

  1. இதனுடைய பரந்துபட்ட உபயோகம். அறிவியலைவிட தொழில் நிறுவனங்களே கனினி/மென்பொருள் ஆகியவற்றின் மிகப் பெரிய வாடிக்கையாளர்கள்
  2. இது கொடுக்கும் வருமானம் (ROI). சந்தையில்லாமல் இருந்தால் எந்த கண்டுபிடிப்பும் வேஸ்ட்தானே!

இப்போதே இதையும், மெஷின் லேர்னிங், செயற்கை ஆறிவு ஆகியவற்றை ஒன்று படுத்துவது பற்றி பேசுகிறார்கள். தற்சமயம் அப்படி பட்ட ஒரு புத்திசாலி கணினி நடைமுறைக்கு ரொம்ப தூரத்தில் தான் உள்ளது.

இதைப் பற்றி விலாவரியாக தொழில் நுட்ப அளவில் எழுத ரொம்ப நாள் ஆசை...யாரச்சும் என்னோட சேர்ந்து வந்தா ரொம்ப சுலபமாயிருக்கும். அதுவும் இந்த ஜார்கன் ஜல்லிகளையெல்லாம் புரியும் படி தமிழ் படுத்த. மேலே எழுதியிருப்பதில் ஒரு ஜுனூன் வாடை அடிக்குதோ?

விருப்பம் உள்ளவர்கள் இமெயிலில் தொடர்பு கொள்ளலாம்...வேண்டுமெனில் நாமும் த.க.மு.மு என்ற கட்சியை/வலைப்பதிவை ஆரம்பிக்கலாம் ;)

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 18 (show/hide)

18 Comments:

Blogger கோவி.கண்ணன் said...

பல்சுவைப் பதிவுகளாக போட்டு கலக்கி எடுக்கிறீர்கள். நேற்று பகல் முழுதும் உங்கள் வலைப்பூ சிஙகையில் சரியாக இயங்கவில்லை. இரவு சரியாகிவிட்டது.

5/18/2006 7:34 PM  
Blogger G.Ragavan said...

நல்ல தகவல்கள் நந்தன். உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கிற மாதிரி, சோறு போடும் தொழிலை முன்னிறுத்தி ஒரு பதிவு.

ஒரு சின்ன திருத்தம். அண்ணவெறி இல்லை அது. அன்னவெறி. அன்னம்னா சோறு. அண்ணன்னா என்னன்னு உங்களுக்குத் தெரியும்.

5/18/2006 8:42 PM  
Blogger நந்தன் | Nandhan said...

GOVIKANNAN,
நன்றிகள். இயங்கவில்லையா? "இது திட்டமிட்ட சதி..."என்று சொல்ல ஆசை...யாரோட சதி என்று கேட்டால் என்ன சொல்றது? அதுனால ஒரு 'அப்படியா' வோட முடிச்சுடறேன் ;)

5/18/2006 8:50 PM  
Blogger நந்தன் | Nandhan said...

கோ.ரா,
திருத்திட்டேன். Notepad'ல் 'ன்' தான் போட்டிருந்தேன்...பதிக்கும் போது எப்பவும் போல சந்தேகம் வந்து சரியா தப்பான 'ண' போட்டுடேன்.
நன்றிகள்

5/18/2006 8:51 PM  
Blogger Karthikeyan said...

டேட்டா மைனிங்-கிற்கு செந்திலை வைத்து நன்றாக ஒரு பதிவை தந்துவிட்டீர்... என் நண்பர் ஒருவர் அவருடைய ஆராய்ச்சியின் புரிதலுக்கு உங்கள் பதிவை படித்து, டேட்டா மைனிங் பற்றி அறிந்துகொண்டார்...வாழ்த்துக்கள்.

அன்புடன்
கார்த்திகேயன்

5/18/2006 10:00 PM  
Blogger நந்தன் | Nandhan said...

கார்த்திகேயன்,

Data-mining என்று ஒரு வார்த்தை தானேயா போட்டிருந்தேன் அதுலேயே சந்தேகம் தீர்ந்ததா!

யாருப்பா, தருமிக்கு கொடுக்கயிருந்த பொற்கிழியை எனக்கு கொடுக்க சொல்றது? :)

5/18/2006 10:13 PM  
Blogger நன்மனம் said...

நல்ல பயனுள்ள பதிவு.

ஒரு நாட்டின் "statistical department" க்கு மிகவும் தேவையான ஒன்று. எதிர்கால தேவை என்ன என்பதை சில பழங்கால information கள் வழி காட்டும்.

ஆனால் இன்று இந்த துறைக்கு மதிப்பு குறைவு என்பது வருந்த தக்கது.

5/19/2006 12:03 AM  
Blogger யாத்ரீகன் said...

நல்ல எளிமையான அறிமுகம், நன்றி...
அப்போ கூடிய விரைவில் தமிழில் டுட்டோரியல் தளங்களும் வந்துவிடும்.. மகிழ்ச்சி... :-)

5/19/2006 2:03 AM  
Anonymous Anonymous said...

கணனி அறிவு; குறைவு! ஏன்! இல்லை என்றும் சொல்லலாம்; எனினும் தங்கள்; ஆக்கபூர்வமான ஊக்கத்துக்கு வாழ்த்துக்கள்!
யோகன்
பாரிஸ்

5/19/2006 2:09 AM  
Blogger லதா said...

"Boys செந்திலின் பாடங்கள்" என்று தலைப்பு வைத்திருந்தால் இன்னும் அதிகம் பேர் வந்து படிப்பார்கள்.

(பதிவின் தலைப்பே பார்ப்பவர்களை ஆர்வத்துடன் படிக்க இழுக்கவேண்டும் என்பது வலைஉலகத்தின் ஒரு எழுதப்படாத விதி?)

5/19/2006 3:10 AM  
Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

உங்களுடைய துறைசார் பதிவுகளை எழுத முனைந்திருப்பதற்குப் பாராட்டுக்கள். நன்றாகவும் அமைந்திருக்கிறது. ஆனால், சட்டென்று முடித்துவிட்டது போல் தோன்றுகிறது. அதனால் தான் தொடர்ந்து எழுத ஆசை என்று குறிப்பிட்டிருந்தீர்களோ?

உங்கள் துறை பற்றி ஒன்றும் தெரியாதென்பதால் உங்கள் அழைப்பை ஏற்றுச் சேருவதில் எனக்குத் தயக்கம். அது தவிர, எனக்கு ஆர்வம் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது துறைசார் பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்ற நீண்ட கால எண்ணத்தையே நான் இன்னும் செயல்படுத்த ஆரம்பிக்கவில்லை. சில முயற்சிகள் செய்து கொண்டு இருக்கிறேன்.

5/19/2006 6:55 AM  
Blogger ஸ்ருசல் said...

நல்ல பதிவு.

ஸ்ருசல்

5/19/2006 7:11 AM  
Blogger Machi said...

//தகவல்கள் வெவ்வேறு இடத்தில் சேமிக்க பட்டிருக்கலாம் (separated by Distance) //
தொழில்நுட்பாளர்களுக்கு தூரம் ஒரு பொருட்டில்லையே.

நல்ல தொடக்கம், சுருக்கமாக முடித்திவிட்டீகள். துறை சார்ந்த பதிவுகளை எழுதுங்கள், ஆவலுடன் காத்திருக்கிறேன்.

5/19/2006 5:48 PM  
Blogger நந்தன் | Nandhan said...

நன்மனம், கொஞ்சம் குழப்பிட்டேன்னு நினைக்கிறேன். இது வெறும் Statistics இல்லை..விலாவரியா எழுதும் போது இன்னும் தெளிவா எழுதுறேன்.

5/19/2006 7:41 PM  
Blogger நந்தன் | Nandhan said...

யாத்திரீகன். நன்றிங்க. டுடோரியல் தளம் ...டூ மச்.

johan, நன்றி
தன்னடக்கமோ?
ஆக்கபூர்வமான ஊக்கம் என்னதுங்க இது?

லதா, நன்றி.
இங்கே மட்டுமல்ல எல்லா இடத்துலையும் அதான் விதி...first impression மாதிரி.

5/19/2006 7:45 PM  
Blogger நந்தன் | Nandhan said...

செல்வா,
ஊக்கத்திற்கு நன்றி. உங்களைப் போன்றோரே முடியலன்னு சொன்னா கத்துகுட்டிகள் நாங்க என்ன செய்றது?
பார்ப்போம். உங்கள் உதவியை தேவைப் படும் போது கண்டிப்பாய் கேட்பேன். நன்றி.

ஸ்ருசல், முதல் விசிட்? நன்றி.

குறும்பன்,
இந்த தூரம் தகவலை கொண்டுவருவதில் மட்டுமல்ல...உடனுக்குடன் ஆராய்வதிலும்...(Query time அதிகமாகும்) சரி விடுங்க it is getting too technical. இந்த பதிவு இப்படி பட்ட பயனும் உள்ளது என அறிமுகம் தான்

5/19/2006 7:51 PM  
Blogger மலைநாடான் said...

நந்தன்!

நட்சத்திரவாரத்தில் துறைசார்ந்த ஒரு நல்லபதிவு. பதிவுக்கும், நடசத்திரத்திற்குமான பாராட்டுக்கள்.
நன்றி!

5/21/2006 1:29 PM  
Blogger நந்தன் | Nandhan said...

நன்றி மலைநாடான்.

இன்னும் நிறைய வருகிறது, பாரதி சொன்னது போல அறிவியலை தமிழில் கொண்டு வர என்னால் ஆன ஒரு சிறிய முயற்சி.

5/21/2006 10:17 PM  

Post a Comment

<< Home

மூக்குக்கண்ணாடி

இந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம் தாத்தவோட சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு

கண்ணாடிக்கு பின்னாடி

பிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...
சாப்ட்வேர்- தொழில். சினிமா, புத்தகம்,எழுத்து - ஆர்வம்
இன்னும் தெரியனுமா?