கடைசியா போட்டு பார்த்தது

பழைய கண்ணாடிகள்

மத்தவங்க கண்ணாடி

If you have problems in viewing this page try this, in the menu bar goto View>encoding>select Unicode(UTF-8)

கம்யூனிசம் அடிப்படை கோளாறு?

கம்யூனிசம் ஏன் தோற்றது என பலர் பல காரணங்கள் சொல்லியிருக்கிறார்கள். என்னுடையது இது.

கம்யூனிசம் இயற்கைக்கு புறம்பானது. வல்லவன்/வலிமை மிக்கவன் வாழ்வான் என்பதே இயற்கையின் விதி. காலம் காலமாய் நடந்து வரும் பரினாம வளர்ச்சியும் இதையே தான் மொழிகிறது. இந்த தத்துவம் பல்லாண்டு காலமாய் சோதனைக்கு உட்பட்டு இன்னமும் நிலைத்து நிற்கிறது. பரிணாமத்துவமே அதற்கு பெரிய எடுத்துக்காட்டு.

கம்யூனிசமோ இந்த விதிக்கு நேர் மாறானது. வலியன், எளியவன் என்பதே அங்கில்லை...இப்படி அடிப்படையாகவே இயற்கைக்கு புறம்பானது வீழ்ந்ததில் வியப்பேதும் இல்லையே.

ஒருவேளை ஒரு செயற்கை செட்டப்பில் வேண்டுமானால் அது வெற்றி பெறலாம், 'controlled experiment' போல...ஒரு மிகவும் உன்னதமான ஆத்மாக்கள் நிறைந்த ஆதர்ச சமுதாயமாய் அது இருக்க வேண்டும். - utopian society.

ஒரு மகாத்மா அல்லாத மனிதனிடம் போய் 'நீ எவ்வளவு விளைச்சாலும் உன் தேவைக்கேற்ப்ப தான் உனக்கு' என்று கூறும் போது அவன் ஏன் அவன் தேவையை விட அதிகம் விளைப்பான்? இன்னும் சிலர், 'நான் ஏன் விளைக்கனும் எப்படியும் யாரச்சும் விளைச்சதுல இருந்து என் தேவை பூர்த்தியாக போகுது' என இருக்கவும் கூடும்.

அதேப் போல் அயன் ராண்டின் 'அப்ஜெக்டிவிசமும்' (தமிழ்ல என்ன வார்த்தை) ஒரு 'utopian society' பற்றியே பேசுகிறது, இந்த இரண்டுமே அன்றாட வாழ்கைக்கும் சமுதாயத்துக்கும் ஒத்து வராது என்பது என் எண்ணம்

எனக்கு புரியாத ஒரு விஷயம் இருக்கிறது...சாதரணமாய் பரினாமத்துவத்தை மிகவும் ஆதரிப்போர் கம்யூனிஸ்ட்களே.... (கடவுள் எதிர்ப்பு என்ற பெயரில்) அப்படியிருக்க அவர்களின் தத்துவத்திற்கும் பரினாமத்துவத்துக்கும் இடையே உள்ள முரனை ஏன் அவர்கள் அறியவில்லை? யாரச்சும் சொல்லுங்களேன்


பி.கு: நட்சத்திர வாரத்தில் நாலு வரி பதிவு போட கூடாத என்ன?

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 49 (show/hide)

49 Comments:

Blogger அருள் குமார் said...

//கம்யூனிசமோ இந்த விதிக்கு நேர் மாறானது. வலியன், எளியவன் என்பதே அங்கில்லை...இப்படி அடிப்படையாகவே இயற்கைக்கு புறம்பானது வீழ்ந்ததில் வியப்பேதும் இல்லையே.//

சரியாகச்சொன்னீர்கள். கம்யூனிசம் வீழ்ந்ததற்க்கன அடிப்படை காரணம் இதுதான். கம்யூனிஸ்ட்கள் என்று சொல்லிக்கொள்பவர்களே கம்யூனிஸ்ட் என்றால் என்ன என்கிற வறையரையை மீரித்தான் இருக்கிறார்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதுபோல் அதுதான் இயல்பு!

5/16/2006 11:34 PM  
Blogger Pavals said...

//யாரச்சும் சொல்லுங்களேன்//

ரொம்பவும் சிக்கலான கேள்வி.. யாராவது பதில் சொல்லுவாங்கன்னு நானும் எதிர்பார்க்கிறேன்..

5/16/2006 11:36 PM  
Blogger Pavals said...

//நான் ஏன் விளைக்கனும் எப்படியும் யாரச்சும் விளைச்சதுல இருந்து என் தேவை பூர்த்தியாக போகுது'//

இந்த மாதிரி சோம்பேறித்தனம் தான் நிறையா இடத்துல கம்யூனிசம்'ஙிறது ரொம்ப ஏளனமான விஷயமா ஆனதுக்கு காரணம்.. இதை உடைக்க நினைக்கும் போது அங்க 'சர்வாதிகாரம்' தலைய தூக்கிருது :(

5/16/2006 11:38 PM  
Blogger வஜ்ரா said...

"For each according to his ability, to each according to his needs."

இது தான் ...மனித இயல்புக்குப் புரம்பானது, என்பதை அழகாக விழக்கியதற்கு நன்றி..

நடசத்திர வாரத்தில், ஒரு சில அறிவு ஜீவிக்களிடமிருந்து அர்ச்சனை பெரும் முன்னர் வாழ்த்துக்கள்.

வஜ்ரா ஷங்கர்.

5/16/2006 11:46 PM  
Blogger இரா.சுகுமாரன் said...

//கம்யூனிசம் இயற்கைக்கு புறம்பானது. வல்லவன்/வலிமை மிக்கவன் வாழ்வான் என்பதே இயற்கையின் விதி. காலம் காலமாய் நடந்து வரும் பரினாம வளர்ச்சியும் இதையே தான் மொழிகிறது. இந்த தத்துவம் பல்லாண்டு காலமாய் சோதனைக்கு உட்பட்டு இன்னமும் நிலைத்து நிற்கிறது. பரிணாமத்துவமே அதற்கு பெரிய எடுத்துக்காட்டு.

கம்யூனிசமோ இந்த விதிக்கு நேர் மாறானது. வலியன், எளியவன் என்பதே அங்கில்லை...இப்படி அடிப்படையாகவே இயற்கைக்கு புறம்பானது வீழ்ந்ததில் வியப்பேதும் இல்லையே.//

இயற்கைக்கு புறம்பாக செல்ல வேண்டாம். எனவே, இயற்கையாக இனி அம்மணமாக ரோட்டில் அலைவதே சரி.

5/16/2006 11:51 PM  
Blogger குழலி / Kuzhali said...

கம்யூனிசம் பற்றி பேசும் போது வைக்கப்படும் சில வறட்டு வாதங்கள்

1. கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள்

2. வலுத்தவன் வாழ்வான் கோட்பாடு

1. கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள்

எல்லோரும் சமம் என்ற இடத்திலே பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கு உள்ள அதிகாரம் மற்றவர்களுக்கு இல்லையே என்று வைக்கப்படும் மொக்கை வாதம் மிக நகைப்புக்குறியது

என் குடும்பத்தில் என் அண்ணன், அக்காள், என் தாய், தந்தைக்கு இருக்கும் அதிகாரங்கள் எனக்கு இருக்காது என்பது உண்மை, அது அவர்களுடைய அனுபவத்தாலும் உரிமையாலும் எனக்காக உழைப்பதாலும் நான் அவர்களுக்கு தர வேண்டியது என் கடமை.

எனக்காக உழைக்கும், நான் தேர்ந்தெடுத்த முதல்வர், என் நேரத்தைவிட அதிக மதிப்புடைய அவர் நேரத்தை சேமிக்கும் நோக்கிலும் பாதுகாப்பு மற்றும் இன்ன பல காரணங்களுக்காகவும் (இதற்கெல்லாம் அவர்களுக்கு தகுதி உண்டா என்பது வேறு விடயம்) தரப்படும் சலுகைகளும் அதிகாரங்களையும் குறை சொல்வது என்பதை எப்படி விவரிப்பது என்றே எனக்கு புரியவில்லை.

2. வலுத்தவன் வாழ்வான் கோட்பாடு

நாமெல்லாம் மனித சமுதாயம் தானே? விலங்கினம் இல்லையே? வலுத்தவன் வாழ்வானென்றால் பின் எதற்கு காவல்துறை, பின் எதற்கு சட்டம், நீதி, இராணுவமெல்லாம்.

வலுத்தவன் வாழ்வானென்ற நீதி விலங்கினத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் ஒரு நாகரீகமான, மனித சமுதாயத்திற்கு இது சரியா?

வலுத்தவன் வாழ்வானென்றால் ஒரு பத்து ரூபாய் வைத்துக்கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் என்னால் இறங்கமுடியுமா? சென்னையில் என்னை விட உடல் பலத்தில், அரசியல் பலத்தில், ஆள் பலத்தில், பண பலத்தில் அதிகம் உள்ளவர்கள் இல்லையா?

வலுத்தவன் எது வேண்டுமானாலும் செய்வானென்றால் வீட்டுப்பெண்கள் சாலையிலே நடமாடமுடியுமா?? அல்லது நாம் தான் சுதந்திரமாக இருக்க முடியுமா?

நாமெல்லாம் மனித சமுதாயத்தில் இருக்கின்றோம், விலங்கினத்திலிருந்து இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியடைந்து மனிதனாக மாறிவிட்டோம், உடல் வலுவை மட்டும் நான் குறிக்கவில்லை, பொருளாதார வலிமையயும் சேர்த்து தான், எனவே அந்த காலத்திலேயே இருக்காதீர்கள்.

உலகாலாவிய அளவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிக்கொண்டே போவது நல்லதற்கல்ல, முதலாளித்துவத்தின் சைடு எபெக்ட் தற்போதுதான் சிறிது சிறிதாக வெளிவர ஆரம்பித்துள்ளது, இது முழுதாக வெளிப்படும் போது உலகலாவிய அளவில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படும், அந்நிலையில் சிற் சில மாற்றங்களோடு கம்யூனிசம் பரந்து பட்டு இருக்கும்.

முழுப்பதிவு இங்கே http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_112451737668150218.html

5/17/2006 12:05 AM  
Blogger இரா.சுகுமாரன் said...

//ஒரு மகாத்மா அல்லாத மனிதனிடம் போய் 'நீ எவ்வளவு விளைச்சாலும் உன் தேவைக்கேற்ப்ப தான் உனக்கு' என்று கூறும் போது அவன் ஏன் அவன் தேவையை விட அதிகம் விளைப்பான்? இன்னும் சிலர், 'நான் ஏன் விளைக்கனும் எப்படியும் யாரச்சும் விளைச்சதுல இருந்து என் தேவை பூர்த்தியாக போகுது' என இருக்கவும் கூடும்.//

அய்யா! இப்படியெல்லாம் எழுதி பொதுவுடைமை பற்றி எல்லாம் தெரிந்தவர் போல் எழுத வேண்டாம்.

பொது உடைமை என்பது எல்லாமும் எல்லாருக்கும் பொதுவானது. உடைமையை மட்டுமல்லாது உழைப்பையும் பொதுவாக்குவது அது. அதனுடன் உங்கள் கருத்தை ஒப்பிட்டு எழுதுவது அதன் அடிப்படை உங்களுக்கு இல்லாதது தெரிகிறது.

5/17/2006 12:11 AM  
Blogger தேசாந்திரி said...

புதிய கோணம். நல்ல வாதம்.

5/17/2006 12:23 AM  
Blogger இரா.சுகுமாரன் said...

//எனக்கு புரியாத ஒரு விஷயம் இருக்கிறது...சாதரணமாய் பரினாமத்துவத்தை மிகவும் ஆதரிப்போர் கம்யூனிஸ்ட்களே.... (கடவுள் எதிர்ப்பு என்ற பெயரில்) அப்படியிருக்க அவர்களின் தத்துவத்திற்கும் பரினாமத்துவத்துக்கும் இடையே உள்ள முரனை ஏன் அவர்கள் அறியவில்லை? யாரச்சும் சொல்லுங்களேன்//

அவர்களின் தத்துவத்திற்கும் பரினாமத்துவத்துக்கும் இடையே உள்ள முரனை கொஞ்சம் விளக்கமாக சொன்னீங்கன்னா நாங்க கொஞ்சம் தெரிஞ்சிக்குவோம்.

5/17/2006 12:28 AM  
Blogger யாத்ரீகன் said...

வலியவன் வாழ்வான் என்ற கோட்பாட்டை அப்படியே பின்பற்றத்தொடங்கினால் இன்று என்னால் பையில் பணத்துடன் ரோட்டில் இறங்கி நடக்கக்கூட இயலாது, அது ஒரு காட்டுமிராண்டித்தனமான சமூகத்துக்கு வழிவகுத்துவிடும்...

எல்லோரும் மகாத்மாக்களாகவோ, புனித பிம்பங்களாகவோ இருக்க வேண்டியதில்லை கம்யூனிசத்தில், தேவைக்கு அதிகம் என்பதை விட்டுவிட்டு ஆடம்பரமானதை அடிப்படைத்தேவைக்கு என்று சொல்லிப்பாருங்கள்...

5/17/2006 12:31 AM  
Blogger ROSAVASANTH said...

கம்யூனிசம் (அதைவிட மார்க்சியம்) என்பதில் பல பிரச்சனைகள் இருக்கலாம். அவைகளை கணக்கில் கொண்டு பலர், பல மறுபரிசீலனைகளுடன், மார்க்சியத்திலேயே பல்வேறு போக்குகள் இருக்கிறது. மார்க்சியதை மீறியும் தாண்டியும், மறுத்தும் பல போக்குகள் இருக்கிறது. ஆனால் நீங்கள் சொல்வது மிக எளிமையான அற்பமான காரணம்.

இயற்கையானது என்று சொல்லப் படுவதை மீறித்தான் பல நவீன விஷயங்களை மனித குலம் அடைந்துள்ளது. ஒருவகையில் ஜனநாயகம், ஆண் பெண் சமத்துவம் கூட இயற்கைக்கு முரணானது என்று பேசலாம். ஸாடிஸம்தான் இயற்கையானது என்று வாதிடக் கூட முடியும். இயற்கையானது என்று சொல்லி, எறும்புகளையும் தேனிக்களையும் உதாரணம் காட்டி அடிமை முறையையும், நால்வருண முறையையும் நியாயப்படுத்த முடியும், படுத்துகிறார்கள். இயற்கைக்கு எதிரானது என்று சொல்லப்படும் விஷயங்களும், அதற்கான முயற்சிகளும் இயற்கை அளித்த சட்டகத்தினுள்தான் நடக்கிறது. ஒரு வகையில் மனித குலம் இன்றுவரை இயற்க்கைக்கு எதிராக வாழ்வதில்தான் தனது சக்தியை சவாலை செலவழித்து வருகிறது.

'வல்லவன் வாழ்வான்' என்பதுதான் இயற்கையின் நியாயம் என்று எல்லா வகை ரவுடித்தனத்தையும் அனுசரித்து செல்வதை ஏற்றுக்கொள்வதுதான் தீர்வாக முடியுமா? 'வல்லவன் வாழ்வான்' என்ற இயற்கையின் விதியை எதிர்ப்பதும் இயற்கையின் சட்டகத்துனுள்ளேதான் நடக்கிறது.

பிரச்சனையை பேசுவது என்பது வேறு, இயற்கைக்கு எதிரானது என்று, ஒரு விஷயம் குறித்து எதுவுமே தெரியாமல் அதன் வறலாற்று பிரச்சனைகள்/ தவறுகள் பற்றி அறியாமல், இயற்கைக்கு எதிரானது என்று மொட்டையாய் ஜல்லியடிப்பது என்பது வேறு.

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்!

5/17/2006 1:31 AM  
Anonymous Anonymous said...

//கம்யூனிசம் அடிப்படை கோளாறு?//

கம்யூனிசம் அடிப்படை கோளாறு இல்ல அதப்பத்தி அதிகம் தெரியாம எழுத நினைக்கிறது தான் அடிப்படை கோளாறு.

5/17/2006 1:34 AM  
Blogger நந்தன் | Nandhan said...

நன்றி அருள்குமார், ஷங்கர்.
//அறிவு ஜீவிக்களிடமிருந்து அர்ச்சனை //
தமிழ்மணத்துல இதெல்லாம் சகஜம்மப்பா...

5/17/2006 4:21 AM  
Blogger நந்தன் | Nandhan said...

ராசா (Raasa).

நானும் கேள்விக்கான பதிலை அறியும் ஆவலோடு தான் கேட்டுள்ளேன்...
//இந்த மாதிரி சோம்பேறித்தனம் தான் நிறையா இடத்துல கம்யூனிசம்'ஙிறது ரொம்ப ஏளனமான விஷயமா ஆனதுக்கு காரணம்.. இதை உடைக்க நினைக்கும் போது அங்க 'சர்வாதிகாரம்' தலைய தூக்கிருது :(//

ஆமாம், இதை தான் நான் ஒரு 'controlled experiment'ஆக இருக்க வேண்டும் என கூறினேன்

5/17/2006 4:23 AM  
Blogger அருள் குமார் said...

குழலி,
வலுத்தவந்தான் தான் இயல்பு. என்றைக்கும் எப்போதும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. இனியும் அப்படித்தான் நடக்கும். இதுபற்றி நாம் நேரில் நிரைய விவாதித்திருக்கிறோம் என நினைக்கிறேன். இது நிச்சயம் வரட்டு வாதமைல்ல.

உனது உதாரணத்திலிருந்தே இதை விளக்கலாம்.

//வலுத்தவன் வாழ்வானென்றால் பின் எதற்கு காவல்துறை, பின் எதற்கு சட்டம், நீதி, இராணுவமெல்லாம்.//

இவையெல்லாம் வலிமையற்ற நம்மைப்போன்றோர் வலிலையை திரட்டிக்கொள்ளும் ஏற்பாடுகளேயன்றி வேரில்லை. இவ்வளவும் இருந்தும் இன்னும் கற்பழிப்புகளும் கொலைகளும் நிகழ்வதற்கு காரணம், நமது சட்டங்களையும் காவலையும் மீறும் வலிமை கொண்டவர்கள் இருப்பதால்தான். அவர்களை நமது சட்டங்களே ஒன்றும் செய்ய இயலவில்லை என்பது உண்மைதானே.

//வலுத்தவன் எது வேண்டுமானாலும் செய்வானென்றால் வீட்டுப்பெண்கள் சாலையிலே நடமாடமுடியுமா?? அல்லது நாம் தான் சுதந்திரமாக இருக்க முடியுமா? //

சாலையில் நடக்க விடுகிறோம் சரி. நள்ளிரவில் சென்னை ECR சாலையில் தனியே நடக்கவிடுவோமா?! அங்கே அவர்களை பதுகாக்க நமக்கு வலிமை இல்லைதானே. அங்கோயும் நம்மால் காவல் போட்டு பாதுகாக்க முடியும் எனில், அங்கே நாம் வலிமையுள்ளவர்கள் ஆகிறோம் என்பதே உண்மை. so, எங்கேயும் எப்போதும் வலிமை உள்ளவனே வெல்வான். ('வலிமை உள்ளவன்' என்பது தனிமனிதனை மட்டும் குறிக்க அல்ல)

நியாயம் நீதி கட்டுப்பாடுகள் சட்டம் இவையெல்லாம் வலிமையற்றவர்கள் குழுவாக கூடி தங்கள் வலிமையை திரட்டிக்கொள்ளும் முயற்சியே.

நேரமிருப்பின் இந்த பதிவை படிக்கவும்:
http://whatiwanttosayis.blogspot.com/2005/12/blog-post_16.html

5/17/2006 5:26 AM  
Blogger supersubra said...

முப்ப்து வயது வரை கம்யூனிஸ்டாக இல்லாதவன் இதயமற்றவன்

முப்பது வயதுக்குப்பின் கம்யூனிஸ்டாக இருப்பவன் மூளையற்றவன்

5/17/2006 5:31 AM  
Blogger வஜ்ரா said...

நந்தன், நட்சத்திர வாரத்தில் தேவையாங்க உங்களுக்கு ...(கேள்வி ஞாயமான கேள்வி.. நான் உங்கள் பக்கம்..தான்..)

கம்யூனிசத்தைப் பற்றி பேசினால் நிறயபேருக்கு இங்கே மூக்கில் வேர்த்துவிடும்... நட்சத்திரவாரத்தில் மின்னப் போறேன் பதிவெல்லாம் போட்டு...

கடைசிலெ "ரவுண்டு கட்டி பின்னப் போறாங்க". ..பார்த்து..சொல்லிட்டேன்...

நன்றி,
வஜ்ரா ஷங்கர்.

5/17/2006 6:58 AM  
Blogger மா சிவகுமார் said...

மேலே சுகுமாரன், குழலி, ரோஸா வசந்த் மற்றும் யாத்திரீகன் சொன்னவற்றுடன் என்னுடைய எண்ணங்கள்:

வல்லவன் வாழ்வான் என்று இருந்த காட்டு வாழ்க்கையை நெறிப்படுத்தி நாகரீகமாக கிராமங்களிலும் நகரங்களிலும் மக்கள் வாழ ஆரம்பித்த பிறகு நுண்கலைகள், அறிவியல், இலக்கியம் போன்றவை தளைத்து வளர்ந்தன. ஓவ்வொருவரும், வேட்டையாடுவதிலும் பிடித்ததை அடுத்தவரிடமிருந்து பாதுகாப்பதிலும் நேரத்தைச் செலவளித்துக் கொண்டிருந்தால், மற்ற நல்லவற்றிற்கு நேரம் இல்லாமல் போயிருக்கும். அப்படி காட்டு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் ஒரு விவரமானவர் நாகரீகமடைவதன் பலன்களை உருவகித்து விளக்கியபோதும் அதற்கு கண்டிப்பாக எதிர்ப்புகள் இருந்திருக்கும். அவரது உருவகங்களை செயல்படுத்த முயன்ற சில குழுக்கள் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால் கடைசியாக சரிவர செயல்படுத்திய குழுக்கள்தாம் இன்றைய உலக நாகரீகத்துக்கு வித்திட்டன.

அதே மாதிரி, சந்தைப் பொருளாதாரம் என்பது காட்டு வாழ்க்கை. ஒவ்வொருவரும் தன்னுடைய நலனை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவது மனித இயற்கை. அந்த இயற்கையினால் நமக்குப் பலனும் கிடைக்கிறது. ஆனால், அந்த இயற்கையை நெறிப்படுத்தி நாகரீகப்படுத்தினால் என்ன நடக்கலாம், எப்படி மனித குலம் பயன் பெறலாம் என்று உருவகித்தவர் கார்ல் மார்க்ஸ். அதைச் செயல்படுத்த முயன்று தோற்ற முயற்சிகளும் உள்ளன. ஆனால், கம்யூனிசம் என்ற நாகரீகமடைந்த சந்தைப் பொருளாதாரம் இயங்க ஆரம்பிக்கும் போது மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியில் அது ஒரு பெரிய மாற்றமாக இருக்கும், நாடோடியாக காட்டு வாழ்க்கை வாழ்ந்த மனிதன் ஆற்றங்கரையில் நாகரீகங்களை அமைக்க ஆரம்பித்தது போல.

அன்புடன்,

5/17/2006 7:01 AM  
Blogger நந்தன் | Nandhan said...

சுகுமாறன்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
ஒரு சிறிய விளக்கம் - வலியவன் என்று நான் குறிப்பிட்டது - 'Fittest' என்ற பொருளில் தான், 'Strongest' அல்ல. 'Fittest' என்னும் போது அது பலத்தை மட்டுமே குறிக்கவில்லை பரினாமத்துவமும் அதையே சொல்லுகிறது.

//உடைமையை மட்டுமல்லாது உழைப்பையும் பொதுவாக்குவது அது. //
இந்த உழைப்பை பொதுவாக்குவது தான் காரணம் என்கிறேன். உன்னத ஆத்மாக்கள் அல்லதோர் சோம்பேறி ஆவதற்கான 'ஷார்ட்கட்டாக இது மாறிவிடும்.

//அதன் அடிப்படை உங்களுக்கு இல்லாதது தெரிகிறது//
அடிப்படையை கொஞ்சம் விளக்குங்களேன். அது என் புரிதலோடு ஒத்து போகிறதா என பார்ப்போம். புரியவில்லை எனில் கேள்விகள் கேட்கிறேன்.

//அவர்களின் தத்துவத்திற்கும் பரினாமத்துவத்துக்கும் இடையே உள்ள முரனை கொஞ்சம் விளக்கமாக சொன்னீங்கன்னா நாங்க கொஞ்சம் தெரிஞ்சிக்குவோம். //
இதை தானே பதிவில் சொல்லியுள்ளேன். சரி உங்களுக்காக ஒரு முறை..
பரினாமத்துவம் இயற்கையில் திறமை (Fittest) அடிப்படையில் பேதம் இருப்பத்தை அங்கீகரிக்கிறது. அந்த வித்தியாசத்தின் அடிப்படையில் அந்த உயிர்களின் வாழ்கை முன்னேறும் என்பதை கூறுகிறது.

கம்யூனிசமோ, Fittest என்ற சொல்லே இல்லை என்கிறது. Comparative, Superlative என்ற பதங்களை ஆதரிக்கவில்லை...எல்லாம் ஒன்றே என்கிறது.

வருகைக்கு நன்றி. மற்றபடி 'அம்மனமாய் அலைவது' ஏதோ ஒரு கோபத்தில் எழுதியதாய் தான் எனக்கு தோன்றுகிறது...மற்றும் என் கருத்தை திரித்து புரிந்திருப்பதால் அதை அப்படியே விடுகிறேன்..வாதத்திற்கு அதனால் எந்த பயனுமில்லை

5/17/2006 7:40 AM  
Blogger நந்தன் | Nandhan said...

குழலி,

//கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள் //
நோ கமென்டஸ்.

//வலுத்தவன் வாழ்வான் கோட்பாடு//
சுகுமாறனுக்கு கூறியது தான் உங்களுக்கும். வலு என்பது Fittest என்ற நோக்கில் தான் பார்க்க வேண்டும். பலம் என்றல்ல. சரியான வார்ததை கிடைக்காததல் வந்த குழப்பம் அது. என்னுடைய தவறு.

//நாமெல்லாம் மனித சமுதாயம் தானே? விலங்கினம் இல்லையே? வலுத்தவன் வாழ்வானென்றால் பின் எதற்கு காவல்துறை, பின் எதற்கு சட்டம், நீதி, இராணுவமெல்லாம்.//

சரியாய் சொன்னீர்கள். அதனால் தான் மிருகங்களை போல் இல்லாமல் நாம் அறிவு சார் வகையிலும் பேதப்படுகிறோம். பொருள்/உடல் வலிமை சார்ந்த பேதம் அறிவு சார்ந்த பேதத்தை ஒவர்டேக் செய்யகூடாது என்பதற்காக தான் அரசு/சமுதாயம் போன்ற கட்டமைப்புகள்

இதையும் சொல்லியிருக்கிறேன்... கம்யூனிசம் ஒரு ஆதர்ச சமுதாயத்தை நம்பியிருக்கிறது... அப்படி பட்ட சமுதாயம் இன்னமும் வரவில்லை. கட்டாயமாக்க படலாம்.. ராசா சொன்னது போல அது சர்வாதிகரமாய் மாறிவிடுகிறது.

உலகின் எந்த நாடாவது அதீத கட்டுப்பாடுகள் இல்லாமல் கம்யூனிசத்தை கொண்டுள்ளதா? ஜனநாயக முறைப்படி கம்யூனிசம் தேர்வு செய்யப்பட்டுள்ளதா? இதுவே இன்னமும் நாம் ஒரு ஆதர்ச சமுதாய நிலையை எட்டவில்லை என எண்ண செய்கிறது.

5/17/2006 8:03 AM  
Blogger நந்தன் | Nandhan said...

யாத்திரீகன்,

//தேவைக்கு அதிகம் என்பதை விட்டுவிட்டு ஆடம்பரமானதை அடிப்படைத்தேவைக்கு...//

இந்த வித்தியாசத்தை யார் கொடுப்பார்கள்? அளவு கோள் என்ன? அது அறிவியல் பூர்வமாய் அடைய முடியுமா?

மற்றபடி - வலுத்தவன் என்பதை பற்றி முந்தய பின்னூட்டங்களில் பார்க்கவும்

5/17/2006 8:09 AM  
Blogger நந்தன் | Nandhan said...

//இயற்கையானது என்று சொல்லப் படுவதை மீறித்தான் பல நவீன விஷயங்களை மனித குலம் அடைந்துள்ளது.....வாழ்வதில்தான் தனது சக்தியை சவாலை செலவழித்து வருகிறது//

மன்னிக்கவும். இயற்கையை மீறி அல்ல இயற்கையின் போக்கை நமக்கு சாதகமாய் மாற்றி (அ) இயற்கையை Replicate செய்து தான் செயற்கை என கூறிக் கொள்கிறோம். நீங்கள் சொன்னது போல அனைத்தும் அந்த சட்டத்தினுள்ளே தான் இருக்க வேண்டும். அப்படியல்லாமல் முழுதாய் Conceptualஆய் மாறுபடும் ஒன்று நிலைக்காது. சுகுமாறனுக்கான என் பின்னூட்டத்தை பார்க்கவும்

//எல்லா வகை ரவுடித்தனத்தையும் அனுசரித்து செல்வதை ஏற்றுக்கொள்வதுதான் தீர்வாக முடியுமா? //
மற்ற பின்னூட்டங்களுக்கான பதிலை பார்க்கவும்

//இயற்கையின் விதியை எதிர்ப்பதும் இயற்கையின் சட்டகத்துனுள்ளேதான் நடக்கிறது.//
எப்படி?

//பிரச்சனைகள்/தவறுகள் பற்றி அறியாமல்//
அறியாமையை கொஞ்சம் விளக்கலாமே..

//வாழ்த்துக்கள்!// நன்றி :)

5/17/2006 8:23 AM  
Blogger நந்தன் | Nandhan said...

கணேசன்

அதிகம் தெரிந்தவர், என் கருத்துக்கான எதிர் வாதங்களை வைத்து, எங்கே எப்படி என் சிந்தனை தவறானது என விளக்கினால் நன்று.

5/17/2006 8:26 AM  
Blogger நந்தன் | Nandhan said...

கணேசன், ROSAVASANTH , யாத்திரீகன், இரா.சுகுமாரன் , தேசாந்திரி, குழலி / Kuzhali
அனைவருக்கும் நன்றி.
ஆரோக்கியமாய் வாதம் செய்ததிற்கும் சேர்த்தே... உங்களின் பதிலை எதிர்ப்பார்கிறேன்.

வேறெதற்கும் இல்லையென்றாலும், நான் இன்னமும் என் சிந்தனையை Refine செய்து கொள்ளவதற்காக

5/17/2006 8:31 AM  
Blogger Sivabalan said...

நீங்கள் சொல்லியிருக்கும் விளக்கம் மிக அருமை!!

ஆனால், கம்யூனிசம் இயற்கைக்கு புறம்பாக இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படவில்லை என்பது என் என்னம்!!

5/17/2006 8:40 AM  
Blogger கூத்தாடி said...

வலுத்தவன் வாழ்வது என்பது நீங்கள் சொல்லியதின் fittest என்பதாகத்தான் நானும் புரிந்து கொண்டேன் .

இதையேத் தான் ஹிட்லரும் ஒரு விதமாகப் புரிந்து கொண்டான். fittest சமூகத்தை உருவாக்க அவர் செய்த செயல்கள் என்னென்ன ?

இதே கொள்கைய்ட்டனான்ப் பார்வை ஊனமுற்றோரின் மேல் உள்ளக் கருணையையும் முதியோர் மேல் உள்ளக் மதிப்பையும் கொல்லும்.

கம்யூனிசம் வீழ்ச்சிக்கு ஒரு ஆதர்ச சமுதாயம் இல்லாததே என்பது ஒத்துக்கொள்ளக் கூடியது .ஆனால் நீங்கள் வைத்த இயற்கை / வலுத்தவன் வாதம் சரியில்லை. மனிதன் எழுந்து நடக்க ஆரம்பித்த்தே இயற்கைகு எதிடானது தான் என எண்ணுகிறேன்..

5/17/2006 2:34 PM  
Blogger நந்தன் | Nandhan said...

ஹூம் அடுத்த ரவுண்ட். I like it. உடனக்குடன் பதில அளிக்காதற்கு மன்னிக்கவும். அலுவலகத்தில் வாய்ப்பில்லை:(

supersubra : அது என்னங்க முப்பது முப்பது?

ஷங்கர் :
//மின்னப் போறேன்-பின்னப் போறாங்க//
அட டி.ஆர் ரேன்ஞ்க்கு பேசறீங்க. பரவாயில்லங்க, அவங்க பக்கத்தையும் கேட்போமே, புதுசா கத்துக்கலாம் இல்லையா

5/17/2006 4:42 PM  
Blogger நந்தன் | Nandhan said...

மா சிவகுமார:
நாகரீகம் இன்னோரு தளத்தின் பரிணாம வளர்ச்சியே.
//தன்னுடைய நலனை அதிகப்படுத்தும்...நெறிப்படுத்தி நாகரீகப்படுத்தினால்//
நாம் எத்துனை முயன்றாலும் திறமையும்/வலிமையும் சார்ந்த பேதம் இருக்கத் தான் செய்யும். அது தான் இயற்கை என கூறியுள்ளேன்

பேதம் என்று நான் குறிப்பிடுவது மனிதனால் உண்டாக்கப்பட்ட சாதி போன்ற அறிவியல் சாராத பேதங்களை அல்ல

5/17/2006 4:48 PM  
Blogger நந்தன் | Nandhan said...

Sivabalan,
//கம்யூனிசம் இயற்கைக்கு புறம்பாக இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படவில்லை//
உண்மை. ஆனால் இந்த கருத்துக்கள் மிஸ் செய்யப்பட்டன. கேட்கும் போது உன்னதமாய் தான் தோன்றுகிறது...அது வீழ்ந்த பின் தானே நாம் விழித்துக் கொண்டோம்

5/17/2006 4:51 PM  
Blogger நந்தன் | Nandhan said...

அருள் குமார். உங்கள் பதிவைப் படித்தேன். நன்று, அதே சமயம் விதி என்று எண்ணி சோர்வடையக் கூடாது. பரினாமம் உயிரை அழிப்பத்தில்லை, Fitஆக தம்மை மாற்றிக் கொள்ளாத உயிர்கள் தான் அழிந்து போகின்றன.
அதே போல, Fitஆக முயற்சிக்காத மனிதனே தன் வாழ்கையில் முன்னேறத் தவறுவான்.
இன்னும் நிறைய பேசலாம். மற்றவர் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

5/17/2006 4:55 PM  
Blogger நந்தன் | Nandhan said...

koothaadi,

//இதையேத் தான் ஹிட்லரும் ஒரு விதமாகப்....//
உண்மை, ஹூம் கம்யூனிஸ்ட்கள் எளியவனுக்கு ஆதரவாய் சமுதாயத்தை லெவல் செய்ய முயற்சி செய்தார்கள். ஹிட்லர், வலியவர்களுக்கு ஆதரவாய்.

உண்மை என்னெவெனில், திறமையிலான ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். எல்லாரும் 90 மார்க் வாங்கிட்டா சிலர் 91க்கு முயற்சிப்பார்கள். 45 வாங்குபவன் தன் வாழ்கை பாழாய் போகும் என்பதை உணர்ந்து 90க்கு தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும், அரசோ சமுதாயமோ இதில் உள்ளே புகுந்து
45ந்தே இல்லாமல் செய்கிறேன் என அவர்களை அழிப்பதோ, 90ல் இருந்து கொஞ்சம் எடுத்து 45க்கு கொடுப்பதோ தவறு என்கிறேன்.

சமுதாய அளவில் எல்லாரும் முன்னேற தலைப்படும் போது சராசரி சமுதாயத்தின் அளவீடும் முன்னேறும்

//மனிதன் எழுந்து நடக்க ஆரம்பித்த்தே இயற்கைகு எதிடானது//
இல்லை, இயற்கை அவனை பிடித்து அந்த நிலைக்கு தள்ளியது என்பேன். He adapted!. நம்ம இயற்கைநேசி காரணங்களை சொல்லுவார்.

வந்தவர் அனைவருக்கும் நன்றி

5/17/2006 5:05 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

வல்லான் தன் திறமையால் பொருள் குவித்தால் ஏழைகள் கஷ்டப்படுவார்களா? என்ன வாதம் இது? இவ்வாறு சொல்லித்தான் சோஷலிச இந்தியாவில் காங்கிரஸ் பதவிக்கு வந்தது. விளைவு? பெர்மிட் லைசன்ஸ் பெற்றவர்கள் மட்டும் பொருள் ஈட்டினர். இதைத்தான் தீர்க்கதரிசி ராஜாஜி அவர்கள் பெர்மிட், லைசன்ஸ், கோட்டா ராஜ் என்று கூறினார். அந்த மாமனிதர் கூறியது இப்போதுதான் எல்லோருக்கும் உரைத்திருக்கிறது.

ஜூலை 1991. ஸ்ரீராம் க்ரூப் கம்பெனி ஒன்றுக்கு நான் பிரெஞ்சு துபாஷியாக சென்றிருந்தேன். அதில் கம்பெனி தரப்பிலிருந்து அவர்கள் தயாரிக்க போகும் ஒரு பொருளுக்கான மார்க்கெட் மதிப்பீட்டை வந்திருந்த பிரெஞ்சுக்காரருக்காக மொழி பெயர்த்து சொல்ல வேண்டியிருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த ஒரு விஷயம் என் கவனத்தை ஈர்த்தது. அதாவது, அரசு வெளிதேச வியாபாரிகளின் போட்டியிலிருந்து தங்கள் பொருளுக்கு பாதுகாப்பு தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதற்கு ஆதரவாக இந்திய அரசின் கொள்கை அறிவிப்பு ஒன்று சுட்டப்பட்டிருந்தது. பன்னாட்டு போட்டி வந்தால் சங்குதான் என்ற இழையும் கூறாமலே விளங்கியது.

இதனால் என்ன ஆயிற்று? நுகர்வோர்கள் தரம் குறைந்த பொருளையே வாங்க வேண்டியிருந்தது. மாருதி கார் வருவதற்கு முன்னால் இந்தியச் சாலைகளில் ஃபியட், அம்பாஸடர், ஸ்டாண்டர்ட் ஹெரால்ட் தவிர வேறு கார்களை காண முடிந்ததா? அதிலும் ஸ்டாண்டர்ட் மோட்டார் திவாலாக, இரு வகை கார்கள் மட்டுமே சாலைகளில் ஆட்சி செலுத்தின. இப்போது? கூறவும் வேண்டுமோ?

உற்பத்தி பெருக்கத்தால் என்ன நடந்தது? வேலை வாய்ப்பு பெருகியது. பல வல்லான்கள் உருவாயினர். இப்போது கூட எந்த கட்சி பதவிக்கு வந்தாலும் உலகமயமாக்கலை எதிர்க்க முடியாது.

'வல்லான்தான் முன்னேற முடியும் என்றால் உங்களால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சட்டையில் ரூபாயுடன் வர முடியாது, வல்லான் ஒருவனால் பறிக்கப்படும்' என்று பொருள் வருமாறு ஒரு நண்பர் பலமுறை எழுதியுள்ளார். அவருக்கு நான் கூறும் பதில் இதுதான். அந்த வல்லானுக்கும் மிஞ்சிய வல்லானாக போலீஸ் இருப்பதால் அவனால் ஒன்றும் செய்ய முடியாது. அப்படியே ஓரிரு முறை வெற்றி பெற்றாலும் மாட்டிக் கொள்வதும் உறுதியே. இது நிரந்தர போராட்டம். அதற்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் சம்பந்தம் இல்லை.

மேலே கூறியது என்னுடைய "வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைம" என்னும் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது. முழுப்பதிவையும் அதன் பின்னூட்டங்களையும் பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/blog-post_17.html

குழலி போன்றவர்களின் பிரச்சினை என்னவென்றால், அவர்களே வல்லானாக இருந்துக் கொண்டு முன்னேறியவர்கள்தான், ஆனால் மற்ற வல்லான்கள் உருவாவதில் அவர்களுக்கு ஏனோ நாட்டம் இல்லை.

துர் உபயோகம் ஆகக்கூடிய அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை நீங்கள் வைத்துள்ளதால், இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய மேலே சுட்டியப் பதிவிலேயே பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/blog-post_17.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/17/2006 7:08 PM  
Blogger வவ்வால் said...

வணக்கம் நந்தன்!

கம்யூனிசம் தோற்றதா? அது தோற்றது என்று எதன் அடிப்படையில் முடிவு செய்தீர்கள்.அது என்ன ஒரு நாள் கிரிக்கெட் போட்டியா முடிவு 50 ஓவர் ஆடி முடித்ததும் தெரிவதற்கு.கம்யூனிசத்தை முடக்குவதற்கு ஏகாதிபத்ய நாடுகள் ஓரணியில் திரண்டு வந்து செயல் பட்டதே ஏன்?

கம்யூனிசம் ஒரு சித்தாந்தம் அது மனித குலம் உள்ள வரை உலகில் நிலைத்தே இருக்கும்.ஒரே சமையல் குறிப்பை படித்து இருவர் சமைக்கிறார்கள்.ஒன்று ருசிக்கிறது ,மற்றது கசக்கிறது எனில்,அந்த சமையல் குறிப்பு தோற்று விட்டது என்று சொல்வீர்களா? அது போல ரஷ்யாவில் சரிவை சந்தித்தால் தோல்வியா, கியுபா,சீனா,ருமேனியா,ஏன் பிரான்சில் கூட கம்யூனிச அரசுகள் உள்ளதே இன்றும்.

அன்பே சிவம் படத்தில் ஒரு உரையாடல் வரும்,

மாதவன்: அதான் ரஷ்யாவிலே கம்யூனிசம் தோத்துப் போச்சே இன்னும் அதையே ஏன் விடாம சொல்லிகிட்டு இருக்கிங்க!

கமல்: தாஜ்மகால யாரவது இடிச்சிட்டா காதல் தோத்து போச்சுனு காதல் பண்றதையே விட்டுடுவிங்களா?

5/17/2006 8:02 PM  
Blogger Muthu said...

மனிதனின் சமூக வாழ்க்கையே ஒரு கண்ட்ரோல்டு என்விரான்மெண்ட்தான்.

ஏனென்றால் சிந்திக்கிறோம் அல்லவா அதனால்...


இதை வைத்து ஏதாவது புரிகிறதா பாருங்கள் நந்தன்..

5/17/2006 8:48 PM  
Blogger நந்தன் | Nandhan said...

//கம்யூனிசம் தோற்றதா? அது தோற்றது என்று எதன் அடிப்படையில் முடிவு செய்தீர்கள்//

வவ்வால், நல்ல கேள்வி. கம்யூனிசம் தன் மக்களை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லவில்லை என்ற அடிப்படையில். நீங்கள் கூறிய நாடுகளில் முன்னேறிய/முன்னேற்ற பாதையில் உள்ள நாடுகள் தம் கொள்கையிலிருந்து நீர்த்து போய் கொண்டிருப்பதாய் நினைக்கிறேன். அந்த அடிப்படையில். தவறா?


//கம்யூனிசம் ஒரு சித்தாந்தம் அது மனித குலம் உள்ள வரை உலகில் நிலைத்தே இருக்கும்.//
கண்டிப்பாய் ஆனால் பயன்பாட்டில் இருக்குமா என்பது தான் கேள்வி.

5/17/2006 9:11 PM  
Blogger நந்தன் | Nandhan said...

dondu(#4800161),

ஆரோக்கியமான போட்டி மனித குலத்தின் சராசரி Wealth Creation அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

நாரயணமூர்த்தியின் கதையை எல்லாருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன். ஒரு உதாரணமாய் தான்.

வவ்வால் மற்றும் டோண்டுவுக்கு என் நன்றிகள்

5/17/2006 9:20 PM  
Blogger Unknown said...

காந்தி, மார்க்ஸ் இருவருமே மனிதனின் அடிப்படை உணர்வான சுயநலத்துக்கு மதிப்பு கொடுக்க மறுத்து விட்டார்கள். அவர்களுடைய கொள்கையின் தோல்விக்கு காரணம் அதுவே.தனி மனிதனின் சுயனலத்தை பொருதுநலத்துக்கு சாதகமாக திருப்புவதே இனி புதிய பொருளாராம்.

அம்பானியின் சுயநலத்தை பயன்படுத்தி இந்திய நாட்டை இழையால் இணைக்க முடிந்தது. டாடாவின் சுயனலத்தை பயன்படுத்தி நாட்டின் இரும்பு வளத்தை நாட்டு மக்களுக்கு வழங்க முடிந்தது. நாராயண மூர்்த்தியின் சுயனலம் இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கல்வி கற்கும் போதே எதிர்காலத்தில் நம்பிக்கை உணர்வை தருகிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டிய அடிப்படை தேவைகளான உண்டி, உடை, உறையுள் என்ற மூன்றும் வழங்குவது சோசலிஸமா?அல்லது நாட்டின் இருக்கின்ற செல்்வத்தை எல்லோரும் சமமாக பகிர்ந்து கொள்வதுதான் சோசலிசமா?முன்னது சாத்தியம். பின்னது இல்லை?

முழு கட்டுரைக்கு

http://holyox.blogspot.com/2006/04/blog-post_13.html

5/17/2006 9:37 PM  
Blogger நந்தன் | Nandhan said...

//மனிதனின் சமூக வாழ்க்கையே ஒரு கண்ட்ரோல்டு என்விரான்மெண்ட்தான்.
ஏனென்றால் சிந்திக்கிறோம் அல்லவா அதனால்...//

புரியவில்லை முத்து. விளக்குங்களேன் :)

5/17/2006 10:08 PM  
Blogger இரா.சுகுமாரன் said...

கம்யூனிசம் அடிப்படை கோளாறு அப்படி இப்படி என்று சிலர் விவாதிப்பது பற்றி.

இப்போது எல்லோருக்கும் இது "பேஷன்" ஆகிப் போய்விட்டது.

எனவே இதனை நான் ஒரு "பேஷன்" ஷோ வாகவே பார்க்கிறேன்.

5/17/2006 10:20 PM  
Blogger நந்தன் | Nandhan said...

இரா.சுகுமாரன்,

வருத்தமாயிருக்கிறது. உங்கள் கருத்து.
பின்னூட்டத்திற்கு நன்றி

5/17/2006 10:45 PM  
Blogger Amar said...

//கியுபா,சீனா,ருமேனியா,ஏன் பிரான்சில் கூட கம்யூனிச அரசுகள் உள்ளதே இன்றும்.//

இந்த நாட்டு பெயர்களை சொல்லவே உங்களுக்கு வெட்கமாக இல்லை?

இவைகளில் எந்த நாட்டில் மனிதனை மனிதனாக நடத்துகிறார்கள்?

//கமல்: தாஜ்மகால யாரவது இடிச்சிட்டா காதல் தோத்து போச்சுனு காதல் பண்றதையே விட்டுடுவிங்களா?
//

தாஜ்மஹால் என்ற கல்லரையும் உங்கள் கொள்கையும் ஒன்றா?

A ridiculous comparision!

ஒரு ஒற்றுமை உண்டு : உலகிலேயே அதிகம் மக்கள் கொன்று கல்லரைக்கு அனுப்பிய பெருமை "தோழர்களை" தான் போய் சேரும்.

5/18/2006 12:04 AM  
Blogger supersubra said...

//முப்ப்து வயது வரை கம்யூனிஸ்டாக இல்லாதவன் இதயமற்றவன்

முப்பது வயதுக்குப்பின் கம்யூனிஸ்டாக இருப்பவன் மூளையற்றவன் //


முப்பது வயது வரை ஒருவன் தன் சமூகத்திற்காக தன்னலம் கருதாது உழைத்தால் அவன் இதயமுள்ளவனாக கருதப்படுவான்.

முப்பதுக்கு பின் அதாவது அவன் திருமணத்திற்கு பின் அப்ப்டி இருந்தால் அவன் குடும்பம் கவனிப்பாரற்று அல்லலுறும். அது முட்டாள்தனம் தானே.

தீ படம் பார்த்தால் இந்தியில் தீவார் இந்த உண்மை புரியும்

5/18/2006 8:50 AM  
Blogger வவ்வால் said...

வணக்கம் சமுத்ரா,

//இந்த நாட்டு பெயர்களை சொல்லவே உங்களுக்கு வெட்கமாக இல்லை?

இவைகளில் எந்த நாட்டில் மனிதனை மனிதனாக நடத்துகிறார்கள்?//

மனிதனை மனிதனாக நடத்தும் நாடாக நீங்கள் எந்த நாட்டை தான் சொல்வீர்கள்,உங்கள் கருத்தை வைத்து பார்த்தால் அமெரிக்காதான் என சொல்வீர்கள்!!?? குவான்டன் மோனொ சிறைச் சாலையில் நடத்தப் பட்டதுலாம் மனித உரிமை மீரல் இல்லையா,அது யார் வேலை அமெரிக்கா தானே?

ஜப்பானில் நாகசாகி,ஹிரோஷிமாவில் எல்லாம் என்ன பூமாரி பொழிந்தார்களா அமெரிக்கா!

கொலம்பியாவில் கோகோவா பயிரிடுகிறார்கள் அது போதைப் பொருளாக மாறி அமெரிக்கவில் வருகிறது என நினைத்த நேரமெல்லாம் ஒரு படையை அனுப்பி வயல்களில் நெருப்பு வைப்பது எதிர்க்கும் விவசாயிகளை சுட்டு தள்ளுவது எல்லாம் யார் செய்கிறார்கள்.அன்டை நாட்டு விவகாரங்களில் தலையிட்டு மனித உரிமை மீறுவதையே பிழைப்பாக கொண்ட அமெரிக்காவைப் பற்றி சொல்ல உங்களுக்கு வெட்கமாக இருக்காதா? உங்களுக்கு இல்லையென்றால் எனக்கும் இல்லை வெட்கம் என்று வைத்து கொள்ளுங்கள்.கொலம்பியாவில் குடி நீர் வினியோகிக்கும் உரிமையை அமெரிக்க நிறுவனங்களே வைத்துள்ளன அவை நினைத்தவாறு விலை ஏற்றி சுரண்டியதால் மக்கள் வீதிக்கு வந்து போரடியதை அவர்கள் நசுக்கினார்கள்.இலவச குடி நீர் தருவோம் என்று சொல்லி அதிபர் தேர்தலில் ஒருவர் வெற்றிப் பெற்றதும் அமெரிக்க அரசு அந்த அரசு மக்கள் அரசு அல்ல ,மக்கள் அரசு அமைக்க நாங்கள் முயற்சி செய்வோம் என்றது.அது எதேச்சதிகாரம் இல்லையா!எந்த நாட்டுப் பேரை சொல்ல யாரிடமாவது வெட்கமாக இல்லையா என்று கேட்கும் முன் உலக வரலாறு படித்து விட்டு கேளூங்கள்!

5/18/2006 5:32 PM  
Blogger வவ்வால் said...

வணக்கம் நந்தன்!

//முன்னேறிய/முன்னேற்ற பாதையில் உள்ள நாடுகள் தம் கொள்கையிலிருந்து நீர்த்து போய் கொண்டிருப்பதாய் நினைக்கிறேன். அந்த அடிப்படையில். தவறா?//

இந்தியா விடுதலைப் பெற்ற போது மதசார்பற்ற நாடு என்று பறை சாற்றியது ஆனால் பின்னர்.. மதத்தின் அடிப்படையில் ஒரு காவிக் கட்சி கோயில் கட்டுவோம் என்று சொல்லியே ஆட்சிக்கு வந்தது,அப்படியெனில் இந்தியாவில் மதச்சார்பின்மை நீர்த்து போய்விட்டதா?

"மாற்றம் ஒன்றே மாறாதது" பொதுவுடைக் கொள்கைகளில் ஒன்று, எனவே கம்யூனிசம் தேவைக்கேற்ப மாறித்தானே ஆகவேண்டும் அது நீர்த்துப் போதலா?

//ஆனால் பயன்பாட்டில் இருக்குமா என்பது தான் கேள்வி. //

நிலைத்து நிற்கும் என்று ஒப்புக்கொள்கிறீர்கள், ஆனால் பயன் பாட்டில் இருக்குமா என கேட்கிறீர்கள் இப்படி முரண் பட்டால் எப்படி பயன் பாட்டில் இல்லை எனில் நிலைத்து நிற்குமா?பென்குவின் பறவைகள் இறகுகளை பறக்க பயன்படுத்தவில்லை எனவே இறகுகள் துடுப்பாக மாறி பறக்க இயலாத பறவையாக மாறிவிட்டது,எனவே பயன்பாட்டில் இல்லாம் எதுவும் நிலைத்து நிற்காது .தவறான கருத்தாக இருந்தாலும் ,மூளைக்கு வேலைக்கொடுப்பவர் எனில் பயன் பாட்டில் இருக்காது எனவே நிலைத்து நிற்காது என்று சொல்லி இருப்பீர்கள்! கொண்ட கருத்தில் தெளிவில்லாமல் தீர்ப்பு எழுத வந்து விட்ட நீதிபதி!!??

5/18/2006 5:50 PM  
Blogger நந்தன் | Nandhan said...

வவ்வால்,

நான் சொன்னது, ஒரு தவறான சித்தாந்ததிற்கு உதாரணமாய் (அல்லது தோற்றுப் போன சமூகவியலுக்கு என்றும் வாசிக்கலாம்) நிலைத்து நிற்கும்.
சமுக அளவில் நடைமுறையில் இருக்காது என.

ஐயோ நீதிபதி பதவியெல்லாம் வேண்டாங்க..எனக்கு கூச்சமாயிருக்கு

5/18/2006 9:03 PM  
Anonymous Anonymous said...

அய்யா அமெரிக்கா அடுத்த நாட்டுக்காரனை கொன்று தனது நாட்டை காப்பாறிகொள்கிறான்.

கம்யூனிஸ்ட்டு தனது நாட்டு மக்களையே கொன்று குவிப்பான்.

ஸ்டாலினுக்கு ஒரு great purge என்றால் மாவோவுக்கு ஒரு கலாச்சார புரட்சி.

உங்கள் கருத்துப்படி தனது நாட்டுக்காரன் கொன்று குவிப்பன் நல்லவனா?

5/18/2006 9:48 PM  
Blogger நந்தன் | Nandhan said...

வவ்வால், Samudra,
உங்கள் விவாதம் திசை மாறி போவதாய் படுகிறது...

5/19/2006 7:53 PM  
Blogger அசுரன் said...

Aiyya Nandhan avarkale,

From your article I can able to understand that you don't know communism and also human history(though you say Darwin' philosophy).

The first and for most human society is 'Purathana pothuvudamai somuthayam', Where equal distribution of resources happened.

Darwin says 'the ability to distribute meat(Non-veg) helped human brain to evolve(The role of Meat in the evolution of Human brain).

But that society collapsed when human successfully dominate The nature and due to that private property came in to existence.

Communism do only one thing. It does whatever capitalism promised while it came to authority(with the help of labour).

'The promises of capitalism' achieved in communism by resolving the contradiction between production and consumption.

While production is socialised, consumption still remains privatised(thani manitha sovikarippu) - this is base contradiction in capitalism.

Regarding 'vallan vazvan' comments from other bloogers are enough. But stil I have some more to expatiate:

"வலியவன் வாழ்வான் என்ற கோட்பாட்டை அப்படியே பின்பற்றத்தொடங்கினால் இன்று என்னால் பையில் பணத்துடன் ரோட்டில் இறங்கி நடக்கக்கூட இயலாது, அது ஒரு காட்டுமிராண்டித்தனமான சமூகத்துக்கு வழிவகுத்துவிடும்...
எல்லோரும் மகாத்மாக்களாகவோ, புனித பிம்பங்களாகவோ இருக்க வேண்டியதில்லை கம்யூனிசத்தில், தேவைக்கு அதிகம் என்பதை விட்டுவிட்டு ஆடம்பரமானதை அடிப்படைத்தேவைக்கு என்று சொல்லிப்பாருங்கள்..."

There are natural laws that drive the entire universe. But one thing that differs human from other living being is that we contradict with nature for our confort.

This inclination become very worst in Capitalism due to technology. But still the human society is not united and organized as compared to the Nature. So Nature reverts back with more vengence(Bird Flu, Tsunami, Global warming, etc).

This implies that there exists two fate for Human society:

1) With the present social structure the Human society will loose the battle against Nature. Due to the conflict with in it(human society) and due to the confliction with the Nature.

2) The socialist society will evolove (if the society allowed to evolve naturally with out any human intervention- as it is happening in India like third world - exploitation from imperialism). and the contradiction between nature and Human society will be handled in smooth way in Communist soceity.

So it is not the question of whether communism goes against 'vallan' theory. But it is the question of human existence.

The choice is very clear Death or Communism.
(Muttai(egg) should be allowed to hatch inorder to become Chicken, else Koomuttai).

To have some good perception on this(Especially, read the Link in that posting):

http://kaipulla.blogspot.com/2006/04/very-very-bussy-to-find-answer.html

5/25/2006 6:49 AM  
Blogger அசுரன் said...

Aiyya Nandhan avarkale,

From your article I can able to understand that you don't know communism and also human history(though you say Darwin' philosophy).

The first and for most human society is 'Purathana pothuvudamai somuthayam', Where equal distribution of resources happened.

Darwin says 'the ability to distribute meat(Non-veg) helped human brain to evolve(The role of Meat in the evolution of Human brain).

But that society collapsed when human successfully dominate The nature and due to that private property came in to existence.

Communism do only one thing. It does whatever capitalism promised while it came to authority(with the help of labour).

'The promises of capitalism' achieved in communism by resolving the contradiction between production and consumption.

While production is socialised, consumption still remains privatised(thani manitha sovikarippu) - this is base contradiction in capitalism.

Regarding 'vallan vazvan' comments from other bloogers are enough. But stil I have some more to expatiate:

"வலியவன் வாழ்வான் என்ற கோட்பாட்டை அப்படியே பின்பற்றத்தொடங்கினால் இன்று என்னால் பையில் பணத்துடன் ரோட்டில் இறங்கி நடக்கக்கூட இயலாது, அது ஒரு காட்டுமிராண்டித்தனமான சமூகத்துக்கு வழிவகுத்துவிடும்...
எல்லோரும் மகாத்மாக்களாகவோ, புனித பிம்பங்களாகவோ இருக்க வேண்டியதில்லை கம்யூனிசத்தில், தேவைக்கு அதிகம் என்பதை விட்டுவிட்டு ஆடம்பரமானதை அடிப்படைத்தேவைக்கு என்று சொல்லிப்பாருங்கள்..."

There are natural laws that drive the entire universe. But one thing that differs human from other living being is that we contradict with nature for our confort.

This inclination become very worst in Capitalism due to technology. But still the human society is not united and organized as compared to the Nature. So Nature reverts back with more vengence(Bird Flu, Tsunami, Global warming, etc).

This implies that there exists two fate for Human society:

1) With the present social structure the Human society will loose the battle against Nature. Due to the conflict with in it(human society) and due to the confliction with the Nature.

2) The socialist society will evolove (if the society allowed to evolve naturally with out any human intervention- as it is happening in India like third world - exploitation from imperialism). and the contradiction between nature and Human society will be handled in smooth way in Communist soceity.

So it is not the question of whether communism goes against 'vallan' theory. But it is the question of human existence.

The choice is very clear Death or Communism.
(Muttai(egg) should be allowed to hatch inorder to become Chicken, else Koomuttai).

To have some good perception on this(Especially, read the Link in that posting):

http://kaipulla.blogspot.com/2006/04/very-very-bussy-to-find-answer.html

The below is my posting of the above reply:

http://kaipulla.blogspot.com/2006/05/fate-of-human-society-communism-or_25.html

5/25/2006 6:50 AM  

Post a Comment

<< Home

மூக்குக்கண்ணாடி

இந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம் தாத்தவோட சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு

கண்ணாடிக்கு பின்னாடி

பிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...
சாப்ட்வேர்- தொழில். சினிமா, புத்தகம்,எழுத்து - ஆர்வம்
இன்னும் தெரியனுமா?