கடைசியா போட்டு பார்த்தது

பழைய கண்ணாடிகள்

மத்தவங்க கண்ணாடி

If you have problems in viewing this page try this, in the menu bar goto View>encoding>select Unicode(UTF-8)

நான் கடவுள்

முன்பே சொன்னது போல ஒர் காலத்தில், கண்மூடித்தனமான பக்தி பழமாயிருந்தேன். அம்மாவும் , வெள்ளிக்கிழமை தோறும் 2 மனிநெரம் விஸ்தாராமாக பூஜை செய்யும் ஒரு ஹிந்து பள்ளியும் முக்கிய காரணிகள். என்னிடம் ஒரு சிறிய காந்ததில் செய்யப்பட்ட பிள்ளையார் படம் இருந்தது. இரவில் படுக்கும் போது அதைப் பார்த்து தான் கண்மூடுவேன். காலையில் அதைப் பார்த்து தான் கண் திறப்பேன். நடு இரவில் அவசரமாய் போக (அ) தண்ணி வேண்டுமென்றால் கூட கண்ணை இருக்க மூடிக்கொண்டு
விளக்குப் போடாமல் தடவித் தடவி தான் நடப்பேன் ;)

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் கேள்விகள், விவேகாநந்தரின் புத்தகங்கள் தான் எனக்குள் கேள்விகளை முதலில் வித்திட்டன. கேள்விக்கான விடைகளும், விடைகளே கிடைக்க பெறாத கேள்விகளும் கடவுள் என்ற தத்துவத்தின் மேல் நம்பிக்கையிழக்கச் செய்தன.

தருமி முதலில் 'நான் ஏன் மதம் மாறினேன்' தொடரை எழுத ஆரம்பித்த போது அட நம்மை போன்ற ஒருவர் என மனசுக்குள் ஓடியது. பல இடங்களில் ஒத்துப் போனாலும், தனித்தனியாக மதங்களையோ, மதநூல்களையோ அலசி ஆராயமல், என்னுடைய இந்த பதிவு 'கான்சப்ட்' அளவில் கடவுளை பற்றிய என் எண்ணங்கள்....

1. முதலில் மதம். எதற்காக இத்தனை மதங்கள். கடவுளின் இருப்பை மக்களுக்கு அறிய வைக்க கடவுளால் படைக்கப் பட்டது எனில், ஏன் இத்தனை மதங்கள், Cheaper by the dozens போல? ஒவ்வொரு மதமும் தானே கடவுளால் படைக்கப் பட்டது என்று வேறு கூறிக் கொள்கிறது. மனிதர்களை நல்வழிப் படுத்த எல்லாம் வல்ல கடவுளுக்கு இத்தனை கருவிகள் தேவையா? இத்தனை வழிகள் அமைத்து கொடுத்தும் மக்கள் நல்வழி படுத்த பட்டனரா? இத்தனை கருவிகளை கையாண்டும் மக்களை நல் வழிப்படுத்த
முடியாதவர் எப்படி 'எல்லாம் வல்லவராய்' இருக்க முடியும்?

2.படைப்பியல் Creation science : கடவுளால் படைக்கப் பட்டது உலகம், உயிர் எனில் ஏன் இத்தனை குறைகள்? கடவுள் மனிதனுக்கு வாய்ப்பளித்தார் (free will), அவன் கெடுத்துவிட்டான். என்பதே நிறையப் பேர் தரும் பதில் (மத கோட்பாடுகள் உட்பட) தமது படைப்பில் ஒன்று தமது மூழுப் படைப்பிலக்கணத்தையே மாற்றுமெனில் அந்த படைப்பாளியின் திறன் எப்படி எல்லாம் வல்லதாய் இருக்க கூடும்? அவரும் ஒரு ட்ரையல் & எரர் பானியைதானே கடைப்பிடிப்பதாய் தோன்றுகிறது. முக்காலமும் உணர்ந்தவருக்கு ஏன் இந்த பானி? இங்கே இருக்கும் அனைத்தும் படைக்கப் பட்டது எனில், இதற்கு முன் இவை எங்கே இருந்தது? கடவுளிடம்/கடவுளாய் ஒடுங்கி இருந்ததெனில் - ஒடுக்கமும் உயிர்ப்பும் உள்ள ஒன்று நம்மைப் போன்றது தானே, எப்படி நம்மை விட மேலானதாகும்? என்ன நம்மை விட டைம் ப்ரேம் கொஞ்சம் அதிகம்...அதற்காக ஒரு நாள் வாழும் பூச்சிகளுக்கு வருட கணக்காய் வாழும் நாம் கடவுளாக முடியுமா?

3. நம்பிக்கை : பலர், தமக்கு கூறப்பட்டதை தாண்டி வெளியே வருவதேயில்லை. தாமாய் ஆராய தலைப்படுவதேயில்லை. கேட்டால், முதலில் நம்புங்கள் பின்னர் உணர்வீர்கள் என்பர். இது என்னையா முரன்? முடிவு எப்படி செயலை தீர்மானிக்கலாம்? எத்தனை பேர் தாமாய் தேடி ஆராய்ந்து தர்க்க ரீதீயான காரணங்கள் மூலம் கடவுளின் இருப்பை உணர்ந்து பின்பற்றுகிறோம்? நான் ஹிந்துவாய் பிறந்தேன், ஹிந்துவாய் இறப்பேன் போன்ற கேஸ்கள் தானே. J Krishnamurthy சொல்வது போல "..Truth is a pathless land, and you cannot approach it by any path whatsoever, by any religion, by any sect. .. The moment you follow someone you cease to follow Truth... You are depending for your spirituality on someone else, for your happiness on someone else, for your enlightenment on someone else.... No man from outside can make you free.....No one holds the Key to the Kingdom of Happiness. No one has the authority to hold that key. That key is your own self, and in the development and the purification and in the incorruptibility of that self alone is the Kingdom of Eternity..." கேள்விகளால் கிடைக்கும் தெளிவைவிட கற்பிக்கப் பட்ட தெளிவு பெரிதல்ல. இதை மறுப்பதன் மூலம் நம்மை நாமே முட்டாள்களாக்கி கொள்கிறோம்.

4.சாதியை எதிர்க்கும் பலர் கூட மதத்தை/கடவுளை எதிர்ப்பதில்லை. எப்படி நாகரீகத்தின் ஆரம்ப சூழலில் சாதி ஒரு விதமான சமுதாய கட்டமைப்பாக இருந்ததோ மதமும் அப்படியே. அந்நேரத்தில் மக்களின் அறிவுக்கு எட்டாத விஷயங்கள் கடவுள் என்ற போர்வைக்குள் போர்த்த பட்டன. காலம் நகர நகர அந்த போர்வைக்குள் இருக்கும் ஒவ்வொரு புதிராய் விடை கண்டுபிடிக்க படுகிறது. சில இன்னும் சில வரும் காலங்களில் கண்டுபிடிக்கபடும். உலகம் தட்டை முதல் டி.என்.ஏ சமாசாரம் வரை இதுவே நடந்திருக்கிறது. இந்த உண்மை அறிந்த பின் இன்னமும் ஏன் போர்வை. It has lost its relevancy. நம்முடைய அறியாமையை அங்கீகரிப்போம் - 'ஆமாம், இந்த விஷயத்திற்கு இப்போழுது என்னிடம் அறிவியல் பூர்வமாய் பதில் இல்லை. அதற்காக இதற்கு பதிலே இல்லை என்று பொருளல்ல'. அதைவிட்டு அறியாமையை பலகீனமாக்கி விடாதீர் - 'ஐயோ அது கடவுளின் செயல்' என கூறி அது மனித குலத்தின் அறிவின் வளர்ச்சியை முடக்கி விடாதீர்.

5. நிறைய பேர் குழம்புவது மதத்திற்கும் ஆன்மீகத்துக்கும் இடையே. ஆன்மீகம், நம்மை நாமே கேள்வி கேட்டு, ஆராய்ந்து, அறிந்து உயர்வது. நமக்குள் இருக்கும் சிறந்ததை வெளிக்கொண்டு வருவது. அதற்கு மதமோ, கடவுளே அவசியமேயில்லை. இன்னும் சொல்லப் போனால் மதமும் கடவுளும் இந்த தேடலில் முட்டுக்கட்டைகளாகி விடவே வாய்ப்பு அதிகம். சாட்டைக்கு பயந்த சர்கஸ் சிங்கம் கம்பி வளையத்தை தாவுவது போலதான் இதுவும்

6. உங்களுடைய மனசாட்சிக்கு மட்டுமே நீங்கள் தலை வணங்க வேண்டும். உங்களுடைய அறிவால் உணர்வதே ஞானம். நீங்களே கடவுள்.

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 33 (show/hide)

33 Comments:

Blogger கோவி.கண்ணன் said...

//நிறைய பேர் குழம்புவது மதத்திற்கும் ஆன்மீகத்துக்கும் இடையே. ஆன்மீகம், நம்மை நாமே கேள்வி கேட்டு, ஆராய்ந்து, அறிந்து உயர்வது. நமக்குள் இருக்கும் சிறந்ததை வெளிக்கொண்டு வருவது. அதற்கு மதமோ, கடவுளே அவசியமேயில்லை.//
//நிறைய பேர் குழம்புவது மதத்திற்கும் ஆன்மீகத்துக்கும் இடையே. ஆன்மீகம், நம்மை நாமே கேள்வி கேட்டு, ஆராய்ந்து, அறிந்து உயர்வது. நமக்குள் இருக்கும் சிறந்ததை வெளிக்கொண்டு வருவது. அதற்கு மதமோ, கடவுளே அவசியமேயில்லை.//
நல்ல கருத்துக்கள். ஆன்மிக சிந்தனையாளன் ஒரு பகுத்தறிவு வாதியும் கூட என்று கூட சொல்லலாம்.

5/16/2006 6:26 PM  
Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

நந்தன், அருமையான பதிவு. தெளிவான வாதம். நன்று.

5/16/2006 6:40 PM  
Blogger Sivabalan said...

//நீங்களே கடவுள்!! //

நல்ல பதிவு!

5/16/2006 7:25 PM  
Blogger நந்தன் | Nandhan said...

//ஆன்மிக சிந்தனையாளன் ஒரு பகுத்தறிவு வாதியும் கூட என்று கூட சொல்லலாம்//

நூறு % உன்மை. சுயத்தை ஆராயாமல் எத்தனை கடவுளை வணங்கினாலும் ஒரு பிரோயோஜனம் இல்லை

5/16/2006 7:56 PM  
Blogger நந்தன் | Nandhan said...

நன்றி செல்வா. கடவுளால் நமக்கு மிஞ்சியது 'மதம்' மட்டும்தான் என நம்புகிறேன்...பலர் தமது முழூத் திறமையை உணரவிடாமல் மதமும்/கடவுளும் தடுத்து இருப்பது வேதனையளிக்கிறது

5/16/2006 8:03 PM  
Blogger நந்தன் | Nandhan said...

Sivabalan
நன்றி. கடவுளாய் ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள். நீங்கள் கடவுள் எப்படி நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பு கொண்டுள்ளீரோ அதைப் போல...

:)

5/16/2006 8:06 PM  
Blogger Muthu said...

நந்தன்,

கலக்கல் பதிவு...

கிருஷ்ணமூர்த்தி,விவேகானந்தர் எல்லாரையும் இழுத்து அருமையாக எழுதி உள்ளீர்கள்.

கிருஷ்ணமூர்த்தியின் இந்த கருத்து என்னையும் பாதித்தது.

ஒவ்வொரு பத்தியும் ஒரு முத்து அய்யா..அய்யா...

பிடிங்க ஒரு (+)

5/16/2006 9:31 PM  
Blogger ramachandranusha(உஷா) said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க. நான் கடவுள் என்பதை விட, பார்க்கும் எல்லாமே கடவுள் என்னலாமே, பாரதியைப் போல!

5/16/2006 9:33 PM  
Blogger Machi said...

ரொம்ப யோசிக்கறது ( அறிவு ) பாவம் என்று ஒரு மதம் சொல்கிறது. மதத்தின் பெயர் நினைவில்லை ரஜினி சாமியார் ( ரஜனீஸ் அல்ல ) ஆசிரமத்தில் அதாவது சச்சிதானந்தா சாமியாரின் தாமரை கோயிலில் இதை படித்தேன்.
யோசித்து பார்த்தா அது உண்மைன்னு தோணுது. பாருங்க ரொம்ப யோசித்ததால் சாமியா அது யார்ன்னு கேள்வி கேட்டுட்டீங்க. :-))

5/16/2006 9:41 PM  
Blogger நந்தன் | Nandhan said...

நன்றி முத்து.
கிருஷ்ணமூர்த்தியோட பல கருத்துகளோட நான் ஒத்து போகிறேன். அவர் சொன்னதெல்லாம் கேட்ட பின்னும் ஒரு இனைய தளத்துல அவர 'Hindu Saints' கீழ லிஸ்ட் செய்திருக்காங்க ;)

5/16/2006 9:50 PM  
Blogger நந்தன் | Nandhan said...

//ரொம்ப யோசிக்கறது ( அறிவு ) பாவம் என்று ஒரு மதம் சொல்கிறது// அடிங்! ;)
//சாமியா அது யார்ன்னு கேள்வி கேட்டுட்டீங்க//
யாருன்னு கேக்கலைங்க...நீயும் நானும் தான் சாமின்னு சொல்றேன்.

5/16/2006 9:59 PM  
Blogger Muthu said...

நந்தன்,

//அவர் சொன்னதெல்லாம் கேட்ட பின்னும் ஒரு இனைய தளத்துல அவர 'Hindu Saints' கீழ லிஸ்ட் செய்திருக்காங்க ;) //

அதுதான்யா டெக்னிக்கே :)

நீயாக சிந்தனை செய் என்று தொண்டை கிழிய கத்திய அவரை ரெடிமேட் தீர்வுகளை வைத்திருக்கும் கடவுளின் நண்பர்கள் எடுத்துக் கொண்டது தற்செயலா இல்லை சதியா?

5/16/2006 9:59 PM  
Blogger நந்தன் | Nandhan said...

//பார்க்கும் எல்லாமே கடவுள்//
முதல்ல நம்மள உணர்ந்துக் கொள்ளலாம் என்று தான்.
அப்பறம் மத்தத பற்றி...
நான் கடவுள்ன்னு தானே போட்டேன் நானே கடவுள்ன்னா சொல்லிகிறேன்? ;)
அது மட்டுமல்லாமல் கடவுள்க்கு எதுக்கு தன்னடக்கம் ;)

உஷா வந்தமைக்கு நன்றி. போட்டி பதிவெல்லாம் போடறீங்க...பேஷ் பேஷ் பதிவர்கள் இரண்டுபட்ட...எங்களுக்கே சந்தோஷம்

5/16/2006 10:04 PM  
Blogger நந்தன் | Nandhan said...

முந்தைய பின்னூட்டத்தில் "நானே கடவுள்" என்பதை - 'நான் மட்டுமே கடவுள்' என்று பொருள் கொள்ளவும்

5/16/2006 10:09 PM  
Blogger நந்தன் | Nandhan said...

முத்து, என்ன பன்றது, பார்த்து கஷ்டப்பட அவரில்லை என்பது தான் ஒரே ஆறுதல்

5/16/2006 10:13 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

நல்ல பதிவு நந்தன்.
நான் கூட சின்ன வயசுல, கட+உள்= கடவுள்.. உள்ளே இருப்பதால் கடவுள்.. அதனால நானும் கடவுள் நீயும் கடவுள்னு என்னோட ஒரு தோழிகிட்ட சொல்லிகிட்டிருந்தேன்.. ப்ராபர் ஆர்த்தடக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த அவ, என்னோட டார்ச்சர் தாங்காம அட்ரஸ் மாறிபோய்ட்டா.. அதெல்லாம் நினைவு வருது :)

5/16/2006 11:05 PM  
Blogger நந்தன் | Nandhan said...

பாருங்க கடவுளால ஒரு ஜோடி பிரிந்திருக்கு ;) Jokes apart.

//கட+உள்= கடவுள்.. உள்ளே இருப்பதால் கடவுள்//

இது நல்லயிருக்கே...தமிழ் விளையாடுது,,,:)

5/16/2006 11:10 PM  
Blogger வஜ்ரா said...

" தத் த்வம் அசி " "That thou are" (சந்தோக்ய உபனிடத வாக்கு)
என்பதை அழகாக விளக்கியதற்கு நன்றி.


//
நீயாக சிந்தனை செய் என்று தொண்டை கிழிய கத்திய அவரை ரெடிமேட் தீர்வுகளை வைத்திருக்கும் கடவுளின் நண்பர்கள் எடுத்துக் கொண்டது தற்செயலா இல்லை சதியா?
//

அது சந்தோக்ய உபணிடதத்தில் வளக்கப் பட்டுவிட்ட மஹாவாக்கியம். ஜுட்டு.கி. யை "ஹிந்து" என்றால்தான் என்ன?

//
கட+உள்= கடவுள்.. உள்ளே
//

"கடந்தும் உள்ளும்" இருப்பவன் என்று என் தமிழ் வாத்தியார் விளக்கியது ஞாபகத்திற்கு வருகிறது.

வஜ்ரா ஷங்கர்.

5/17/2006 12:00 AM  
Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

என்னைப் போலவே கருத்துள்ளவர்கள் நீங்களும் நானும் இது போல ஒரு பதிவு வெளியிட்டுள்ளேன் நேரம் கிடைத்தால் பார்க்கவும்.

http://kathalregai.blogspot.com/2006/05/4.html

5/17/2006 1:54 AM  
Blogger மணியன் said...

எங்கியோ போயிட்டீங்க !

கடவுள் என்பது நாமே என்பதுதான் உயர்நிலை இந்து மத சாரம். உருவமுள்ளதாகவும் (சிலைகள்) இல்லாததாகவும் (சிதம்பரம், கதிர்காமம்) உருவருவாக (symbolic)வும் (சிவலிங்கம், சாலிக்கிராமம்) பார்ப்பது முதல்நிலை.

இன்று இந்து மதமாக அறியப் படுவது பழக்கவழக்கங்களின் தொகுப்பே.

5/17/2006 8:38 AM  
Blogger கூத்தாடி said...

அருமையானப் பதிவு நந்தன் ..JK ஹிந்து என்பதை சிலர் உயர்த்திப் பிடிப்பவர்கள் மதம் மேல் மதம் கொண்டவர்கள்.

ஆன்மிகத்திற்குத் தேவை மதம் அல்ல என்பதை அழுத்தமாக சொல்லியுள்ளீர்..

//அது சந்தோக்ய உபணிடதத்தில் வளக்கப் பட்டுவிட்ட மஹாவாக்கியம். ஜுட்டு.கி. யை "ஹிந்து" என்றால்தான் என்ன?//

சந்தோக்ய உபடிணம் ஹிந்துவுக்கு மட்டுமா இல்லை எல்லோருக்கும் பொதுவானதா ...ஹிந்து மட்டுமே அதைச் சொல்லலாம் என்றால் நான் ஆட்டத்திற்கு வரவில்லை...

5/17/2006 2:45 PM  
Anonymous Anonymous said...

Very good post nandhan. 100% agree with u. - revathi

5/17/2006 4:20 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

//ரொம்ப யோசிக்கறது ( அறிவு ) பாவம் என்று ஒரு மதம் சொல்கிறது. மதத்தின் பெயர் நினைவில்லை ரஜினி சாமியார் ( ரஜனீஸ் அல்ல ) ஆசிரமத்தில் அதாவது சச்சிதானந்தா சாமியாரின் தாமரை கோயிலில் இதை படித்தேன்.
யோசித்து பார்த்தா அது உண்மைன்னு தோணுது. பாருங்க ரொம்ப யோசித்ததால் சாமியா அது யார்ன்னு கேள்வி கேட்டுட்டீங்க. :-))//


குறும்பன்,
ஆம்! மதத்தில் அறிவைப் பாவிக்கக் கூடாது. அறிவுக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லை.
இதே அலைவரிசையில் நானும் நட்சத்திரமாயிருந்த போது சரியாக ஒருவருடத்தின் முன் ஒரு பதிவாக்கியிருந்தேன்.
காதலும் கடவுளும்.

நட்சத்திரமெண்டாலே இப்படி எழுதத்தான் வேணுமோ?

5/17/2006 7:39 PM  
Blogger நந்தன் | Nandhan said...

ஷங்கர்
//ஜுட்டு.கி. யை "ஹிந்து" என்றால்தான் என்ன? //

JK, தம் வாழும் காலம் வரை தாம் எம்மதத்தையும் சேராதவர் என்று கூறிக்கொண்டார், அவரை இப்படி சொல்லுவது தான் உதைக்கிறது.

மனியன்
ஹிந்து மதம் ஒரு குழப்பம். அதை பற்றி தனியே பதிவுப் போடலாம்

5/17/2006 9:45 PM  
Blogger நந்தன் | Nandhan said...

குமரன், ரேவதி, thoughda நன்றி. ஒத்த சிந்தனையுள்ளவர்கள் பற்றி அறியும் போது சந்தோஷம் கேட்கவா வேண்டும். ஹூம், கருத்தை பரப்புங்கள்

வசந்தன்,
நல்ல கூத்தையா!

5/17/2006 9:50 PM  
Blogger வஜ்ரா said...

//
JK, தம் வாழும் காலம் வரை தாம் எம்மதத்தையும் சேராதவர் என்று கூறிக்கொண்டார், அவரை இப்படி சொல்லுவது தான் உதைக்கிறது.
//

ஜுட்டு.கி யை வேறு மதத்தவர்கள் ஏற்பார்களா....? கேட்டுத்தான் பாருங்களேன்?

வஜ்ரா ஷங்கர்

5/17/2006 11:19 PM  
Blogger நந்தன் | Nandhan said...

//ஜுட்டு.கி யை வேறு மதத்தவர்கள் ஏற்பார்களா....? //

அப்படி ஏற்காமல் இருப்பதே அவர் ஆசையாய் இருந்தது.

இதற்கும் அவரை ஹிந்து என மொழிவதற்கும் என்ன சம்பந்தம்

5/17/2006 11:37 PM  
Blogger பத்மா அர்விந்த் said...

தெளிவாக உங்கள் எண்ணங்களை எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்

5/18/2006 8:35 AM  
Blogger கப்பி | Kappi said...

வலியவர்கள் சொன்னால் எதையுமே கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளும் நம் மக்களின் மனநிலையே கடவுள் கான்செப்டைச் சுற்றி இவ்வளவு குட்டைகள் குழம்பக் காரணம்...

கடவுள் (அ) மத நம்பிக்கை உள்ளவர்களிடம் காரணம் கேட்டுப் பாருங்கள்...பாதி பேர் "எல்லாரும் நம்பறாங்க..நானும் நம்பறேன்"-னு கண்மூடித்தனமான பதிலைச் சொல்வாங்க... மீதி பாதி பேர் இவங்க தலைல மிளகாய் அரைச்சுட்டு இருப்பாங்க...

5/18/2006 8:53 AM  
Blogger வஜ்ரா said...

//
ஜுட்டு.கி. யை "ஹிந்து" என்றால்தான் என்ன?
//

//
இதற்கும் அவரை ஹிந்து என மொழிவதற்கும் என்ன சம்பந்தம்
//

அது நான் முதலில் கேட்டது. இப்படியே நாம் வாதித்துக் கொண்டிருப்போம் என்று நினைக்கிறேன்...உங்கள் கருத்து வித்தியாசமாக் இருக்கலாம்..என் கருத்து வேறு மாதிரி.

நன்றி,
வஜ்ரா ஷங்கர்.

5/18/2006 12:31 PM  
Anonymous Anonymous said...

Hi All,

good topic , lot to think,
i have few words to share with you in this.
i was a theist and then atheist and then become theist.
the reasons are simple.
you might oppose any religion or support but
for many un answered mysteries, you need some belief on some super natural power.
we all will realise this only in our difficult times of our life
for eg: i realised this when my dad was in ICCU.
so don't try to find god through science or try to equate religion with science , both are two poles which never meets, but if you want live peace fully just follow any religion, (of course not superstitions)
don't be fanatic !!
out of all first give more importance to Ahimsa and Humanity,
be simple , make ur living simple,
try to understand nature, live close to nature,
being religious is like man with
some solace ,
any how u r the best judge
good luck
raghs

5/19/2006 9:03 AM  
Blogger நந்தன் | Nandhan said...

ஷங்கர், உன்மையாகவே புரியவில்லையா?

raghs,
நன்றி. புதுசா இருக்கே பேரு...
//but if you want live peace fully just follow any religion, (of course ....//
இதெல்லாம் ஒத்துப் போகிறேன். அதற்கு முன்னாடி கொடுத்துள்ள கருத்துக்களோடு இல்லை...அதில் உங்கள் 'emotional content' இருப்பதால் விவாதிக்க வேண்டாம் என நினைக்கிறேன்

5/19/2006 7:59 PM  
Blogger வஜ்ரா said...

நன்தன்,

JK ஐ நீங்கள் மாதங்களுக்கு அப்பார்பட்டவராகப் பார்கிறீர்கள். நான் அவர் இந்து என்று பார்கிறேன். என்னைப் பொருத்தவரை, யாருமே மதங்களுக்கு அப்பார்பட்டவர்கள் அல்லர்.

எதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் மதங்களுக்கிடயே எல்லாவிதமான கருத்துக்களுக்கு இடம் கொடுத்து உண்மையை தேடச் சொல்லும் இந்துமதத்தில் அவரை இணைத்துக் கொள்வது தவறில்லை. என்பது என் கருத்து.

நன்றி,
வஜ்ரா ஷங்கர்

5/20/2006 6:30 AM  

Post a Comment

<< Home

மூக்குக்கண்ணாடி

இந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம் தாத்தவோட சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு

கண்ணாடிக்கு பின்னாடி

பிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...
சாப்ட்வேர்- தொழில். சினிமா, புத்தகம்,எழுத்து - ஆர்வம்
இன்னும் தெரியனுமா?