கடைசியா போட்டு பார்த்தது

பழைய கண்ணாடிகள்

மத்தவங்க கண்ணாடி

If you have problems in viewing this page try this, in the menu bar goto View>encoding>select Unicode(UTF-8)

கோபம்: மௌனமும் வார்த்தைகளும்

சட்டென வந்து விழுந்து விடுகின்றன வார்த்தைகள், விழுந்தவை அவையாயினும் உடைவது இதயங்கள்தாம்.சலசலப்பு அடங்கிய சிறிது நேரத்தில் தான் இது புரிகிறது. 'நானுமா இப்படி?', என வெட்கத்தில் எங்கேயோ ஓடி என்னுள்ளே ஒளிந்து கொள்கிறேன். சில சமயம் என்மீதான அருவெருப்பே இயலாமை தீயாய் இன்னும் கோபத்தை தூண்டிவிடுகிறது. சொல்லால் கொல்லும்
மிருகமாய் எனை பார்க்க எனக்கே பயமாய் தான் இருக்கிறது. தலையனைக்குள் முகம் பொத்தும் சிறுவன் போல, கண்மூடிய இருட்டுக்கு
வெளியே வெளிச்சம் இருப்பது உணர்ந்தும், கண்திறக்க மறுக்கிறேன்.

சத்தமாய் விழும் வார்த்தையின் போதையில் 'எல்லா உண்மையும் நான் சொல்லவது மட்டுமே!' என்ற மாயத்தோற்றம் வேறு வந்தாட்கொள்கிறது. சுவறில் பெரிதாய் விழும் நிழலே நான் என்பது போன்ற காட்சி மயக்கம். பெரியதாய் ஆஜானுபாகுவாய் தெரிந்தாலும் நிழலின் நிறம் கருப்புதானே, இது ஏனோ அப்போழுது புரிவதில்லை.

சினத்தால் கட்டிய ஒரு வெற்று தேரில், வார்த்தை சக்கரம் பூட்டி வேகமாய் ஓட்டுகிறேன். எதிர் வரும் அனைவரையும், அனைத்தையும் ஏறி மிதித்துக்கொண்டு பயனம். அதுவும் மௌனத்தை எதிரே கண்டால், இன்னமும் கூடுகிறது வேகம். சினம் காணாமல் போகும் போது, கூடவே காணாமல் போகிறது வார்த்தை சக்கரங்களும். இயலாமையை உணரும் போது தடுமாறி மனம் சரிகிறது. மன்னிப்பு கேட்க யத்தனிக்கையில், இட்டு நிரப்ப மௌனத்தை தவிர ஒன்றுமிருப்பதில்லை அப்போது. அதுக்கூட ஏனோ ஒரு நொண்டிக்கு கிடைத்த ஊன்றுகோல் போல, தத்தி தத்தியே நடக்கயிலுகிறது. இத்தனை நேரம் உடன் இருந்த வார்த்தைகள் எங்கே போயின?

இப்படி போன்ற சமயங்களில் தான் உண்மையான உறவுகளின் வித்தியாசம் புலனாகிறது. புரிதலுக்கு புறத்தே நிற்கும் உறவுகளோ, அந்த மௌன ஊன்றுகோலையும் பிடுங்கி எறிந்து விட்டு போய்விடுகின்றன. உண்மையான புரிதலை கொண்டிருக்கும் உறவுகள், இந்த வார்த்தையற்ற வேளையில், தம் வார்த்தைகளால் அரவனைக்கும். 'பரவாயில்லை, எல்லாரும் செய்வது தானே இது. தவறொன்றுமில்லை' என மயிலிறகாய் மனதை வருடி செல்லும் சொற்கள். வார்த்தைகளும் மௌனங்களும் இடம் மாறி போகின்றன், எத்தனை வித்தியாசம்!

மௌனமும், வார்த்தையும் இப்படி சரியாய் கலந்திருத்தல் தான் வாழ்கையோ? சொற்களுக்கிடையே வெற்றிடம் இருந்தால் தானே வாக்கியத்தை படிக்கயிலுகிறது!

ஓய்ந்திருக்கும் ஒரு பொழுதில் அசைப்போடும் போது, சிறிதாய் புன்னகை உதிர்கிறது -'நானும் இப்படித்தான்!' என்ற எண்ணம். ரணம் ஆறிய
வடுக்களை தடவிப் பார்ப்பதும் ஒரு சுகமே!

பி.கு: மௌனத்தின் ஊடாக வார்த்தைகள் என்று செல்வா எழுதியதை படித்தபின், மனதில் தோன்றியவை தான் இப்பதிவு.

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 13 (show/hide)

13 Comments:

Blogger நன்மனம் said...

நந்தகுமார், நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியின் முடிவில் மெளனமாக இருந்திருக்கலாமோ என்று எண்ணிய வேளையில் உங்கள் பதிவு அப்படியே என் எண்ண பதிவுகளை படம் பிடித்து காட்டுவது போல் அமைந்துள்ளது.

இதுவும் ஒரு சுகமான சுமை தானோ.

ஸ்ரீதர்

4/28/2006 12:32 AM  
Blogger நந்தன் | Nandhan said...

நன்றி ஸ்ரீதர்.
பல சமயம் தவறுகளை திருத்த முயற்சித்தாலும் வெற்றி பெற முடிவதில்லை. தவறுகளும் நம்மில் ஒரு பகுதி என்பதை புரிந்து கொள்ளும் பக்குவும் வரும்போது அவை சுமைகளாய் தெரிவதில்லை. அப்படி நம்மை புரிந்தவர்கள் இருக்கையில் வாழ்கையும் இலகுவாகிறது.

4/28/2006 12:39 AM  
Blogger நந்தன் | Nandhan said...

sittukuruvikku நன்றி. தமிழ் அருமையெல்லாம் ரொம்ப அதிகம்...ஒருவேளை கரு மனசுக்கு பக்கதில இருக்கறதால அப்படி தோனிச்சோ?

4/28/2006 1:01 AM  
Anonymous Anonymous said...

when hearts are near words will never matter!!!thanks a lot!!

4/28/2006 1:07 AM  
Blogger Miguel Angel Garcia Ojeda said...

hola, saludos desde Chile

4/28/2006 1:09 AM  
Blogger நந்தன் | Nandhan said...

MIGUEL,
Saludos. ¿Puede usted leer esto?

4/28/2006 1:17 AM  
Blogger துளசி கோபால் said...

ச்சும்மாவாச் சொல்லி இருக்காங்க, 'எத்தாலே கெட்டே? 'ன்னா 'நோராலே கெட்டேன்'ன்னு.

நோரு= வாய்( தெலுங்கு)

4/28/2006 1:26 AM  
Blogger Pot"tea" kadai said...

நன்று!
impulsive decision/reaction ஐ பல நேரங்களில் தவிர்க்க இயலாது. அப்படி தடுத்தாளும் திறன் இருக்கும் பட்சத்தில் அனைவரின் மனதையும் வெல்லலாம் அன்பினால்...
அக அன்பின் வழி வளர்ந்த உறவுகளே அரவணைக்கும் என்பதும் உண்மை!

4/28/2006 2:11 AM  
Blogger நந்தன் | Nandhan said...

துளசி அக்கா, மலையாளம் மட்டும் தான்னு நினைச்சேன். சுந்தர தெலுங்குமா?
ஹும், நீங்க சொல்றதும் சரிதான். பல விஷயங்களாலில் பேசாமல் இருப்பதும் நல்லதே.
வருகைக்கு நன்றி.

4/28/2006 5:11 AM  
Blogger நந்தன் | Nandhan said...

Pot"tea" kadai,

Impulsive decisions மட்டுமில்லை எல்லாவகையான கொபங்களையும் தான் சொல்றேன். பிரோயஜனமில்லாத விஷயங்களுக்கு கூட சிலர் (நான் உட்பட) கோவபடுகிறோம். ஒவ்வொரு தடவையும் அதை மாற்ற முயற்சிக்கிறேன் :(
ஏதோ, அன்பின் உறவுகள் உடனிருப்பதால் இன்னமும் ஓடுகிறது வாழ்க்கை. அவர்களுக்கே இது.

4/28/2006 5:17 AM  
Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

நந்தன், உங்களின் இந்தப் பதிவிற்குத் தூண்டுதலாய் இருக்க முடிந்ததில் மகிழ்ச்சி. காரணம், கருத்தும் சரி, நடையும் சரி, மிகவும் அருமையாக இருக்கிறது.

நிச்சயமாய் உணர்ச்சிகளின் கட்டுக்குள் ஆட்படாமல் அவற்றை நமது கட்டுக்குள் வைத்திருப்பதுவே நன்மை பயக்கும். அன்புடையோரைப் புண்படுத்தாதிருக்கும். நின்று நிதானமாய் யோசிப்பதில் பயனி்ருக்கிறது. இத்தகு பதிவை எழுதிய நீங்கள் அதில் குறிப்பிட்டிருக்கும்படி நடந்திருக்கிறேன் என்றால் நம்பச் சிரமமாகவே இருக்கும்.

4/28/2006 11:13 AM  
Blogger நந்தன் | Nandhan said...

நன்றி செல்வா.
ஹூம், தவறுகளை உணர முயற்சிக்கிறேன். முதல் படியில் தான் உள்ளேன். திருந்தியவனாக மாற நிறைய தூரம் போக வேண்டியுள்ளது.
என்னைப் போலவே பலர் என்ற எண்ணம் எழுகிறது. எப்படி உங்களுடைய பதிவு எனக்குள்ளே ஒரு எண்ண ஓட்டத்தை உருவாக்கியதோ அப்படி இதுவும் ஒரு சிலர்க்கு உருவாக்கட்டும் என எழுதினேன்.
மீண்டும் வாருங்கள். வாழ்க்கையின் புரிதலை பகிர்வோம்

4/28/2006 2:11 PM  
Blogger துளசி கோபால் said...

தெலுங்குதாங்க 'தாய்'மொழி.

அதான் தமிழ் கொஞ்சம் தகராறுன்னு சொன்னேன்.

4/28/2006 6:17 PM  

Post a Comment

<< Home

மூக்குக்கண்ணாடி

இந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம் தாத்தவோட சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு

கண்ணாடிக்கு பின்னாடி

பிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...
சாப்ட்வேர்- தொழில். சினிமா, புத்தகம்,எழுத்து - ஆர்வம்
இன்னும் தெரியனுமா?