இந்த தேர்தலில் ஜெயித்தால் அடுத்த புத்திசாலி தனமான/ மக்களை கவரக்கூடய மூவ் (நம்ம ஆசைங்க, நடந்தா சூப்பர்)
அதிமுக:
இவர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டு - ஊழல், ஜனநாயக தன்மை இல்லாததும். முதல் ஆட்சி காலத்திற்கு இரண்டாம் பதவிக்காலத்தில் ஊழல் குற்றச்சாட்டு அவ்வளவாயில்லை, அதே போல மூன்றாம் பதவிக்காலத்தில் தனிநபர் வழிப்பாட்டை குறைத்து, ஜனநாயக தன்மையை வளர்க்க வேண்டும். காலில் விழுந்தால் உடனே மந்திரி பதவி பரிக்கப்படும் என ஒரு ஆனை பிறப்பிக்கலாம்.
திமுக:
அன்பழகனை முதல்வராக்கி (வேண்டுமென்றால் ரிமோட் வைத்துக்கொண்டு), குடும்ப கட்சி என்ற மிகப்பெரிய குற்றச்சாட்டை ஒன்றுமில்லாத புஸ்வானமாக்கி விடலாம்.
இவற்றை தவிர இவர்கள் இருவரும் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றினால் அதுவே மிகப்பெரிய சாதனையாகிவிடும். சும்மாவா? லெப்ட் ரைட் செண்டர்ன்னு புகுந்து விளையாடி இருக்கிறார்களே வாக்குறுதியில்!
இந்த தேர்தலில் ஜெயித்தாலும் தோற்றாலும் மக்களிடையே மிகப்பெரிய இமேஜ் பீட்டீங் வாங்கியிருப்பது?..... பெரிய கஷ்டமான கேள்வியில்லை: வைகோ தான். ஜெயித்தால், கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதி என முத்திரை குத்த படுவார். இவரின் உண்ர்ச்சி வசப்படுதலை வைத்து பார்க்கும் போது அம்மாவுடனும் அதிக நேரம் தாக்கு பிடிப்பார் என தெரியவில்லை. அதுவும் முடியாட்சிக்கு பெயர் போன அம்மாவிடம்! தோற்றாலும் அதே கதி. ஹூம் இவர் இப்படியொரு ஜோக்கர் ஆவர் என நான் எதிர் பார்க்கவில்லை. பொடா கைது மூலம் கிடைத்த அனுதாபம், ஆதரவு அனைத்தையும் அழகாய் Capitalize செய்யாமல் போக்கடிச்சுட்டார்.
சரியாச் சொன்னீங்க :)
நன்றி மணியன். ஹூம் 100 பேரு வந்து போயிருக்காங்க, நீங்க தான் முதல் கமெண்ட்! சரியா எழுதலயோ?
//இந்த தேர்தலில் ஜெயித்தாலும் தோற்றாலும் மக்களிடையே மிகப்பெரிய இமேஜ் பீட்டீங் வாங்கியிருப்பது?..... பெரிய கஷ்டமான கேள்வியில்லை: வைகோ தான். ஜெயித்தால், கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதி என முத்திரை குத்த படுவார். இவரின் உண்ர்ச்சி வசப்படுதலை வைத்து பார்க்கும் போது அம்மாவுடனும் அதிக நேரம் தாக்கு பிடிப்பார் என தெரியவில்லை. அதுவும் முடியாட்சிக்கு பெயர் போன அம்மாவிடம்! தோற்றாலும் அதே கதி. ஹூம் இவர் இப்படியொரு ஜோக்கர் ஆவர் என நான் எதிர் பார்க்கவில்லை. பொடா கைது மூலம் கிடைத்த அனுதாபம், ஆதரவு அனைத்தையும் அழகாய் Capitalize செய்யாமல் போக்கடிச்சுட்டார்.//
நல்லா சொல்லியிருக்கீங்க நந்தன். கடைசிப் பந்தி சூப்பர். :)
நன்றி மதி. அன்பழகனை முதல்வர் ஆக்குவதும் சாத்திய பட கூடிய யோசனையாகவே படுகிறது எனக்கு.
//அன்பழகனை முதல்வர் ஆக்குவதும் சாத்திய பட கூடிய யோசனையாகவே படுகிறது எனக்கு.//
உங்களுக்கும் எனக்கும் படலாம். ஆனா, அங்க அந்தளவு அறிவு இருந்தாப் பிறகேன் பேசுவான். :)