கடைசியா போட்டு பார்த்தது

பழைய கண்ணாடிகள்

மத்தவங்க கண்ணாடி

If you have problems in viewing this page try this, in the menu bar goto View>encoding>select Unicode(UTF-8)

மின்ன போகிறேன்

மொத்தமே 25 பதிவு கூட போடாத என்னையும் நட்சத்திரமாக்கியதுக்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும் 'மவனே, இப்படி ஏதாச்சும் செய்தாலாவது நீ ஒழுங்கா பதிவு போடுவ' என்பதே அது. டபுள் செஞ்சுரி நாட் அவுட் அடித்த எங்கள் தானை தலைவர் திராவிட ராஸ்கல், மற்றும் தேர்தல் செய்திகளை சுடச்சுட பரிமாறிய இட்லி வடைக்கு பிறகு நான் வந்துள்ளது சற்றே அச்சத்தை கொடுக்கிறது. நீங்கள் இருக்கிறீர்களே என்ற நம்பிக்கையில் ஆட்டத்தில் இறங்கி விட்டேன். குட்டுவதற்கு குட்டி, தட்டுவதற்கு தட்டி கொடுத்து என்னையும் மின்ன செய்வீர்கள் என எதிர்பார்ப்போடு ஆரம்பிக்கிறேன்.

என்னைப்பற்றி:சென்னையில் பிறந்து வளர்ந்து, டமில் பேசும் ஒரு பள்ளிக்கூடத்தில் பயின்ற பின்னும் தமிழ் மீதும், புத்தகங்களின் மீதும் ஈடுபாடு உள்ள பலரில் ஒருவன். புத்தகங்களின் மீதான ஆவலை சிறுவயதிலேயே கொண்டுவந்த என் அப்பாவுக்கும், தனியோரு ஆளாய் நின்று தமிழ் மீது தீராக் காதல் கொள்ள செய்த தமிழ் அய்யாவிற்கும் நன்றி.வளர்ந்து பள்ளிப்படிப்பை முடிக்கும் காலத்தில் சினிமாவுக்கு அடிமையானேன். ஒரு இயக்குனராகும் ஆசையை இன்னும் மனதுள் கொண்டு சுற்றியலைகிறேன். மனிரத்னதிடம் உதவியாளராய் சேர கனவு கண்ட கோடி பேரில் ஒருவன். இன்னமும் என்னைப் பற்றியாளும் இரண்டு பெரிய விஷயங்கள் சினிமாவும் புத்தகமும். பின்னர் எல்லோரையும் போல பொறியியல் படித்துவிட்டு தற்போது கனிணிதுறையில் பணியாற்றிகொண்டிருக்கிறேன், வசிப்பது அமெரிக்க கிழக்கு கரையோரம்.

புரியாத வயதில் கன்னாபின்னா என படித்ததில் நான் இடதுசாரி (நன்றி அப்பா) வலதுசாரி (நன்றி பள்ளிக்கூடம்) என மாறி மாறி தத்துபித்திருக்கிறேன். 10வது வரை கண்மூடித்தனமான ஒரு பக்தி, பின்னர் agnostic, நாத்திகவாதம் (அட 10வதுல நல்ல மார்க் தாங்க!) என அதிலும் மாற்றங்கள். இன்னமும் மாறிக் கொண்டிருக்கின்றன என்னுடைய சிந்தனைகள். யோசித்து பார்க்கும் போது இவ்வகை மாற்றங்களே நான் மூளையை உபயோகிப்பதற்கு சாட்சியாய், பக்குவ பயனத்தில் படிக்கட்டுகளாவும் இருக்கின்றன.

வேலை இல்லாத ஒரு நாளில் ஏதேதோ தேடிப்போய் தோழி ஒருவரின் ஆங்கில வலைப்பூவைக் கண்டு, அவர் மூலம் விவரங்கள் அறிந்து சிறிது காலம் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். பின்னர் தமிழ்மணத்தில் ஆரம்பித்து இப்போழுது ஒரு அடிக்டிவ் தமிழ்மண வாசகனாய் /எப்போழுதாவது எழுதும் பதிவாளனாய் வளர்ச்சியடைந்துள்ளேன்.

இந்த வாரம் முடிந்த வரை ஒரு பல்சுவை வாரமாக இருக்க முயற்சிக்கிறேன். தலைப்பை லிஸ்ட் செய்துவிட்டு எழுதலைன்னா நல்லாயிருக்காதே... எனவே அது ஒரு சர்பரைஸாகவே இருக்கட்டும் - உங்களுக்கும், எனக்கும்.

நான் எழுதி எனக்கு மிகப்பிடித்த ஒரு பதிவு இது. படித்துவிட்டு வாருங்கள், பயனிப்போம்

பிகு: தமிழில் தவறிருந்தால் தயங்காமல் தனிமடல் அனுப்பவும். நன்றி.

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 43 (show/hide)

43 Comments:

Blogger செல்வன் said...

வாழ்த்துக்கள் நண்பரே.நீங்கள் வளரும் கலைஞர் என்பதால் சீக்கிரமே நட்சத்திரம் ஆகிவிட்டீர்கள் போல:-))

5/14/2006 9:10 PM  
Blogger நந்தன் | Nandhan said...

நன்றிகள் செல்வன். இருக்கலாம். எல்லாருக்கும் சமமாய் வாய்ப்புகள் வழங்கப் படும் என்பதற்கு எடுத்துக்காட்டா!

5/14/2006 9:16 PM  
Blogger கோவி.கண்ணன் said...

மூக்கு கண்ணாடி ஒரு தமிழ் எக்ஸ்ரே கண்ணாடி போல் இருக்கும் போல் தெரிகிறது . வாழ்த்துக்கள் நந்தன்

5/14/2006 9:19 PM  
Blogger துளசி கோபால் said...

வாழ்த்து(க்)கள்.

அவரவர் ஸ்டைல் அவரவருக்கு.
நீங்கபாட்டுக்கு எழுதித்தள்ளுங்க.
நாங்க எதுக்கு இருக்கோம்?:-))))

5/14/2006 9:19 PM  
Blogger G.Ragavan said...

வாழ்த்துகள் நந்தன். இந்த வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள்.

5/14/2006 9:25 PM  
Blogger நந்தன் | Nandhan said...

நன்றி துளசி அக்கா. எழுதி தள்ள தான் போறேன்...பாக்கலாம்.

நன்றி Govikannan. இப்படியெல்லாம் அவசரப்பட்டு முடிவெடுக்க கூடாது, நிறையவே எழுத்து பிழைகள் இருக்கும். திருத்திக்க உதவி செய்யுங்கள்.

5/14/2006 9:26 PM  
Blogger ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

வாழ்த்துக்கள்... நந்தா..
ஜமாய்ங்க..

5/14/2006 9:26 PM  
Blogger Pot"tea" kadai said...

வாழ்த்துக்கள்... நந்தன்.

5/14/2006 9:29 PM  
Blogger இளவஞ்சி said...

அண்ணே! வாங்க!

நட்சத்திர வாழ்த்துக்கள்! :)

5/14/2006 9:30 PM  
Blogger நந்தன் | Nandhan said...

நன்றி கோ.ரா. உங்களுக்கும் இந்த வாரம் இனியதாய் இருக்க வாழ்த்துகள். ;)
என் கிட்டயிருந்து தப்ப முடியுமா? ;)

பாலபாரதி, டைவர்ஸ் ஆன கையோட (சிலேடை?) வந்திருக்கீங்க. நன்றி.

5/14/2006 9:31 PM  
Blogger மணியன் said...

வாழ்த்துகள் நந்தன். உங்கள் குரங்கு கதை வருகின்ற பதிவுகளுக்கு நல்ல கட்டியம்தான்.
கலக்குங்க !!

5/14/2006 9:34 PM  
Blogger நந்தன் | Nandhan said...

இளவஞ்சி இதெல்லாம் ஓவரு. சின்ன புள்ளைய இப்படி 'அண்ணே'ன்னு சொல்லி பயமுறுத்த கூடாது சொல்லிட்டேன்.;)
வந்துட்டு போங்க நீங்க இப்போ எழுதிட்டு இருக்கிற சமாசாரம் பத்தி கூட ஒரு பதிவு வருது.

Pot"tea" kadai நன்றிங்க.

5/14/2006 9:35 PM  
Blogger சிவகுமார் said...

வாழ்த்துக்கள்... நந்தன்.

5/14/2006 9:41 PM  
Blogger முத்து(தமிழினி) said...

அடிச்சி ஆடுங்க

5/14/2006 9:53 PM  
Blogger முத்துகுமரன் said...

வாழ்த்துகள் நந்தன்..

நன்றாகவே மின்னத் தொடங்கியிருக்கிறீர்க்கள்...

தொடரட்டும் வாரம் முழுவதும்

5/14/2006 10:03 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துக்கள். நல்ல வாரம் தாருங்கள்.

5/14/2006 10:06 PM  
Blogger நந்தன் | Nandhan said...

பெருவிஜயன். வாழ்த்துக்கு நன்றி.

//அடிச்சி ஆடுங்க //
அட தலையே சொல்லிடாருப்பா, இனிமே என்னா விளாச வேண்டியது தான்.

5/14/2006 10:15 PM  
Blogger நந்தன் | Nandhan said...

முத்துகுமரன்.

மிக்க நன்றி. எப்படிங்க உங்க எழுத்த போலவே பார்க்கவும் நெகிழ்வோடவே இருக்கீங்க

5/14/2006 10:16 PM  
Anonymous Ramya said...

Congrats man!!!!!!!!!! all the best !!!!

5/14/2006 10:16 PM  
Blogger நந்தன் | Nandhan said...

Rums,
Thanks. Keep visiting :)

5/14/2006 10:18 PM  
Blogger நந்தன் | Nandhan said...

இலவசக்கொத்தனாரே நல்ல வாரம் வேண்டி நீர் கேட்ட வரத்தை அருளிகிறோம். ;)

மனியன். அது கதையல்ல நிஜம்ம்ம்ம்ம்ம்ம்.

5/14/2006 10:20 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் நந்தன்:).

5/14/2006 10:29 PM  
Blogger நந்தன் | Nandhan said...

நன்றி பொன்ஸ்

5/14/2006 10:50 PM  
Blogger முத்துகுமரன் said...

//உங்க எழுத்த போலவே பார்க்கவும் நெகிழ்வோடவே இருக்கீங்க//
பழகவும் அப்படித்தான் நந்தன்:-))

5/14/2006 11:26 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

நட்சத்திரக்கிழமைக்கு வாழ்த்து.

5/15/2006 12:10 AM  
Blogger Udhayakumar said...

அடிச்சு ஆடுங்க... இந்த வாரம் நந்தன் வாரம்...

5/15/2006 12:42 AM  
Blogger பரஞ்சோதி said...

வாழ்த்துகள் நண்பரே!

நட்சத்திர வாரத்தில் முத்திரை பதிக்க வாழ்த்துகள்.

5/15/2006 1:32 AM  
Blogger கவிதா|Kavitha said...

வாழ்த்துக்கள் நந்தன்..

5/15/2006 3:34 AM  
Blogger Idly Vadai said...

வாங்க சார்! வாழ்த்துக்கள்

5/15/2006 3:55 AM  
Blogger நந்தன் | Nandhan said...

Udhayakumar, வசந்தன்(Vasanthan)
வாழ்த்துக்கும் வந்தமைக்கும் நன்றி.

5/15/2006 4:17 AM  
Blogger நந்தன் | Nandhan said...

பரஞ்சோதி, கவிதா மிக்க நன்றிங்க

5/15/2006 4:17 AM  
Blogger நந்தன் | Nandhan said...

Idly Vadai, நன்றி. அடுத்து என்னங்க எழுத போறீங்க? ஏன் மற்ற மாநில தேர்தல் முடிவ அலச கூடாது?

5/15/2006 4:18 AM  
Anonymous prakash said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள். நல்லா எழுதறீங்க. தொடர்ந்து எழுதுங்க.

5/15/2006 4:37 AM  
Blogger நன்மனம் said...

வாழ்த்துக்கள்.

5/15/2006 5:51 AM  
Blogger குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் நந்தன். இந்த வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள்.

5/15/2006 6:54 AM  
Blogger சிங். செயகுமார். said...

வாழ்த்துக்கள் நட்சத்திரமே!புலி பதுங்குவது பாய்ச்சலுக்குத்தான்:)

5/15/2006 7:48 AM  
Blogger நந்தன் | Nandhan said...

Thanks Prakash.

5/15/2006 8:01 AM  
Blogger "வற்றாயிருப்பு" சுந்தர் said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள். பாராட்டுகள்.

5/15/2006 8:11 AM  
Blogger Dharumi said...

வாழ்த்துக்கள் - இவ்வாரத்திற்கு மட்டுமல்ல...

5/15/2006 10:48 AM  
Blogger KARTHIKRAMAS said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள். நல்லா எழுதறீங்க. தொடர்ந்து எழுதுங்க.

5/15/2006 12:36 PM  
Blogger Sam said...

இந்த வார நட்சத்திரத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

5/15/2006 2:10 PM  
Blogger நந்தன் | Nandhan said...

குமரன் (Kumaran)
சிங். செயகுமார்.
சுந்தர்
Dharumi
karthikramas

அனைவருக்கும் நன்றிகள்.

5/15/2006 2:29 PM  
Blogger Vajra said...

நந்தன்,

நடசத்திர வாரம் முடியப் போகிறது, இன்னும் நீங்கள் ஹாஃப் செஞ்சுரி கூட அடிக்கவில்லை. சிலர் நட்சத்திர வாரத்தில் டபுள் செஞ்சுரி அடிப்பார்கள், ஒரு சிலர், நடச்த்திரமாகாமலே டபுள், டிரிபிள் செஞ்சுரி அடிக்கிறார்கள். சீக்கிரமே நீங்களும் அடிங்கள்...

நன்றி,
வஜ்ரா ஷங்கர்.

5/21/2006 2:43 AM  

Post a Comment

<< Home

மூக்குக்கண்ணாடி

இந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம் தாத்தவோட சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு

கண்ணாடிக்கு பின்னாடி

பிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...
சாப்ட்வேர்- தொழில். சினிமா, புத்தகம்,எழுத்து - ஆர்வம்
இன்னும் தெரியனுமா?